வைத்தியம் பார்க்க நீ வர வேண்டும் வீரராகவப் பெருமாளே... 37-ஆம் நாள் யுத்தம் - கவிஞர் ச.லக்குமிபதி.

37-ஆம் நாள் யுத்தம். 



வைத்தியம் பார்க்க நீ வர வேண்டும் வீரராகவப் பெருமாளே!!    



நரகனை ஒழித்த துவாராக கண்ணனை போல் கோவிட்டை அழிப்பதில் மும்முரமாக யுத்தகளத்தில் நம் நாட்டின் பிரதமர் முன்னேறி நிற்கிறார்!



அவர் கேதார்நாத் சர்வேஸ்வரனிடம் சக்தி பெற்ற மகா பலசாலி அல்லவா!அன்னை ஹீராபென் அவணிக்கு அளித்த ஹீரோ அவர் அல்லவா!


அவர் சொல்லும் அரிய யோசனைகளை எல்லாம் அப்படியே கேட்டு தமிழ் நாட்டு நலம் கருதி அல்லும் பகலும் அயராது உழைக்கிறார் தமிழக முதல்வர்!



நெருக்கடி காலத்தில் நெஞ்சம் தளர்வுறாது பணியாற்றும்  கொங்கு நாட்டு தங்கம் அவர்! தேனியை ப்போல் சுறு சுறுப்பாய் இருக்கின்றவர்!


முதல்வருடன் இணைந்தபடி முத்தான பணிசெய்கின்றவர்!அம்மா வின் நல்அன்பை பெற்ற ஆற்றல் மிகு துணை முதல்வர். 



உற்ற துணையாய் சலிப்பு ஏதுமின்றி களத்தில் நிற்கும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!


அவருக்கு பக்க பலமாய் நாட்டு நலம் காக்கும் செயலாளர் பீலா ராஜேஷ். வாழும் தெய்வங்களான மருத்துவர்கள் வற்றாத ஜீவநதிகளாய் களம் காணும் மருத்துவ பணியாளர்கள்!


மக்களை கவசமாய் இருந்து காத்து வரும் காவல்துறை தெய்வங்கள்! அஞ்சாத சிங்கங்களாய் ஆட்சித்தலைவர்கள்!


அவருக்கு உற்ற துணையாய் நிற்கும் அரசு துறையின் அனைத்து அன்பின் இமயங்கள்!


எல்லோரும் ஒன்றிணைந்து ஓயாமல் உழைப்பதினால் தான் கொரானா கொஞ்சம் கட்டுக்குள் இருக்கிறது!


மக்கள் சமூக விலகலை காத்து அரசின் ஆணைபடி நடந்து கொண்டால் கொரானா இங்கே நிச்சயமாய் இருக்காது! சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்! சமூகமும் அதைத் தாங்கும் நாடும் நலமாய் இருந்தால் தான் நமக்கு சொத்து சுகம் சந்தோஷம் எல்லாமும்!      


       முக கவசம் தற்போதைக்கு உயிர்க்கவசம்!!இதை நெஞ்சில் வைப்போம்! விழிப்பாய் இரு!


விலகி இரு!! வீட்டிலிரு!!! என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. நம்மை காக்க அரசு கொடுத்திருக்கும் வழித்துணை மந்திரம்!


நமக்கும் கொரானாவிற்குமான யுத்தம் இது என்றும் நாம் நிச்சயம் அதில் வெல்வோம் என்றும் முழங்கி வரும் நாட்டின் தலைவருக்கு தோள் கொடுப்போம்!  அதற்கு நமக்கு ஆண்டவனும் துணை வரும் யோகம் வேண்டும்!


வேண்டும் வரங்களை அருள வேண்டி ஆலயங்கள் தோறும் நாளும் நாம் பிரார்த்தனை வைக்கின்றோம்!


வைத்தியர்கள் இல்லாமல் நமக்கு வாழ்க்கையே இல்லை! உலகிற்கே ஒரு வைத்தியர் இங்கே இருக்கிறார் எல்லா மக்களுக்கும் எல்லா வித நோய்களுக்கும் மருந்து தரும் மருத்துவர் ஒருவர் திருவள்ளூர் எனும் ஒரு திவ்ய ஷேத்திரத்தில் அவர் இருக்கின்றார்!



அவருக்கு திருநாமமே வைத்திய வீரராகவ பெருமாள் என்பதாகும்! எவ்வுள் அத்தனே நீ இரங்கு என காதலாகி கண்ணீர் மல்கி அவன் திருவடிகளை பற்றுவோம்! கொஞ்சம் கூட உலக அளவில் யாருக்குமே பயப்படாத ஒரு அரக்கன்அடித்து துவைத்து எடுக்கிறான் ஸ்வாமி!


அவன் உன் திருவடிகளுக்கு முன்னால் ஒரு புழுதி தானே ஸ்வாமி! எத்தனை யுத்தங்களை பார்த்தவன் நீ! எத்தனை அரக்கர்களை அழித்தவன் நீ!



எத்தனை யுகங்களாய் மக்களை காப்பவன் நீ ! இந்த கலியுகத்தில் இன்றைய நிலை ஓர் ஆபத்தான நிலைதான் ஸ்வாமி! வைரஸ்ஸை வைத்துக் கொண்டு இப்படி ஒவ்வொரு நாடும் விஷம விளையாட்டை தொடர ஆரம்பித்து விட்டால் ஆண்டு முழுக்க லாக் டவுனில் அல்லவா உலகம் வாழும்!



ஆதிமூலமே என்று அழைத்தவுடன் கஜேந்திரனைக் காக்க பறந்து வந்த பரந்தாமா!


அச்சம் இப்போது உச்சம் உன்னைத் தவிர யாரிடம் போய் யாம் உயிர்ப்பிச்சை யாசித்து நிற்பது! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ கற்றவர்கள் நாங்கள்!


எல்லோரும் கோவிட் பிடியில் சிக்காமல் நலமாக வாழ ஆசீர்வதியுங்கள்! அன்னை கனகவல்லி தாயாருடன் அருள் ஆட்சி நடத்தும் அப்பனே!



வைத்திய நாதப் பெருமாளே திவ்ய தேச திருமாலே! அன்று ஒரு சமயம் நீ இரண்டு முறை திருவள்ளூர் ஆலய புஷ்கரணியின் கரையோரம் சாலி கோத்திர முனிவரிடம் யாசகம் கேட்டு வந்திருக்கிறாய்!


யாருக்கு கிடைக்கும் அந்த யோகம்!  இரண்டாம் முறை அங்கு நீ வந்த போது உண்டு முடித்தவுடன் உறைவதற்கு உள் எவ்வுள் என நீ அந்த முனிவரை கேட்டிருக்கிறாய்!


இதோ இவ்வுள் என்று சாலி கோத்திர முனிவர் உரிய இடம் காட்ட அவ்விடத்தில்  தெற்கில் திருமுடி வைத்து வடக்கு நோக்கி உன் திருவடி நீட்டி சயனித்திருக்கிறாய் பெருமாளே!



அவருக்கு அன்று நீ கொடுத்த வரம் என்ன தெரியுமா? புஷ்கரணியில் நீராடி என் ஆலயம் தொழுவோர் யாவர்க்கும் எல்லா நோய் நொடிகளில் இருந்தும் விலக்கு அளித்து நன்மை தருவேன் என்பதாகும்!


தொடர்ந்து மூன்று அமாவாசை வருவதற்கு இப்போது வாய்ப்பில்லை சுவாமி! உப்பும் மிளகும் உனக்கு காணிக்கையாக பூசலார் போல் உள்ளத்தில் நினைத்தபடியே படைக்கின்றோம்! எந்த நோயும் இல்லாமல் எங்களை காப்பாற்று!


கெரானா நோய்க்கு எங்கும் மருந்துமில்லை அதிலிருந்து தப்பிக்க வழியும் இல்லை என்கிறார்கள்! உலகம் எல்லாம் கொரானாவால் துக்கமான சூழலே ஸ்வாமி!


எங்கெங்கிருந்து உன்னை யார் வேண்டினாலும் அவர்களுக்கு நீதான் வைத்தியராய் இருந்து சிகிச்சை தர வேண்டும்! திருமங்கை ஆழ்வார்போல திருமழிசை ஆழ்வார் போல திருவருட்பிரகாசரைப் போல உன்மீது பாடல்கள் பாட எமக்குத் தெரியாது!



அறியாது பிழைகள் ஏதேனும் செயது இருந்தால் எங்களை மன்னித்து விடு!  திரு எவ்வுளுர் எனும் திருவள்ளூரில் நீ புஜங்க சயனியாக இருந்தாலும் உன் அருட்பார்வை மட்டும் இத்தாலி மீதும் விழும்!



இந்தோனேஷியா மீதும் விழும்! கனடா மீதும் விழும்! கலிபோர்னியா மீதும் விழும்! வைத்திய வீரராகவ பெருமாளே உன் திருவருள் மணந்து வரும் அந்த துளசி தீர்த்தம் எங்களுக்கு அருமருந்து!



உன் ஆலய சடாரி எங்களை காக்கும் ஆரோக்கிய கவசம்! உன் திருநாமமே இப்போது எங்களுக்கு சுவாசம்!


வைத்தியம் பார்க்க நீ வர வேண்டும் வீர ராகவப் பெருமாளே!!



இப்படிக்கு வாரியார் தாசன் கவிஞர் ச.லக்குமிபதி வேலூர் -9


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.