தொழிலாளர் தின வாழ்த்துகளோடு..... முனைவர். பெ.தமிழ்ச்செல்வி.
தொழிலாளர் தினம் 01.05.2020. உழவன் கலப்பை நிலம் காண நெல்மணி களத்தினில்! முத்துக்குளிப்போன் ஆழ்கடல் போக முத்துமணி கழுத்தினில்! ஆசிரியன் வகுப்பறை களம் காண அறிவுமணி மாணவனிடம்! தொண்டும் தானமும் இதயம் வர கண்மணி குருடன் கண்ணில்! எறும்பின் தொழிலோ மழைக்கால சேமிப்பு! வேரின் தொழிலில் மரமொன்றின் செழிப்பு! மருத்துவப் பணியில் யமன் வரவு ஒத்திவைப்பு! பொறியாளர் பணியில் கட்டிடங்களின் முத்தாய்ப்பு! ...