எட்டாம் நாள் யுத்தம்...நிம்மதிஆகட்டும் நாடு....கவிஞர் ச லக்குமிபதி...
!!நிம்மதி ஆகட்டும்நாடு! ஸ்ரீ ராமா நீ நாமம் எந்தருசிரா என்று அனுபவித்து பாடுகிற பங்குனி மாதம் இது! ஸ்ரீ ராமாநவமி வருகின்ற வேளை இது! நம்ம நிலைமையினை சொல்லுகின்ற நேரமிது! சின்னத்திரையில் பொழுது போக மீண்டும் ராமாயணம் ஒளிபரப்பாம்.. கூடவே கோசலை ராமனை கும்பிட்டு கோரிக்கை ஓன்று வைப்போம்!! சின்ன வயதில் ராமர் வீதியில் நடந்து வரும் போது வழியில் பார்ப்பவர் யாரையும் நலமா என்று கருணை ததும்ப விசாரித்து மகிழ்வாராம்! யுத்த தர்மம் காத்த கோதண்டராமா! இப்போது பூமியெங்கும் ஒருவித புதுயுத்தம்! எங்களைக் காப்பாற்ற கருணை காட்டு! இராவணன் களத்தில் இல்லை அரக்கர்கள் அதிரடியாய் போர் புரிய அருகில் இல்லை! ஆனாலும் எதிரி எங்கிருந்தோ கொண்டு மக்களை கொன்று குவித்து கும்மாளம் இடுகிறான்! ராக்கெட் இருக்கிறது! கண்டங்கள் தாவும் அண்டங்களை அழிக்கும் ஏவுகணைகள் இருக்கிறது! கண்ணிமைக்கும் நேரத்தில் கொன்று குவித்து கண்ணிமைக்கும் நேரத்தில் திரும்பி விடும் விமானம் இருக்கு ஆனால்... சீதா ராமா! எங்களை இம்சித்து வரும் கொரானாவின் கொட்டத்தை யாராலும் அடக்கத்தான் முடியவில்லை!! எங்கிருந்தும் ஸ்ரீ ராமா நாமம் சொல்லிக் கொண்டு இருக்கும் உன் மாருதியை அனுப்பி வை! மருந்தாகட்டும் மாருதி!! நசுங்கட்டும் கொரானா! நிம்மதி ஆகட்டும் நாடு!! வாரியார் தாசன் கவிஞர் ச.லக்குமிபதி வேலூர் 9
Comments
Post a Comment