இராணிபேட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க சார்பில் எஸ் பி அவர்களிடம் முககவசம் வழங்கப்பட்டது
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல் துறையினர் அரும்பாடுபட்டு மக்களுக்காக இரவு, பகலாக சேவை செய்து வருகின்றனர்.
முக கவசம் தட்டுப்பாடு உள்ளதால், காவல் துறைக்கு *மக்கள் இயக்கத்தின் முதல்வர் தளபதி உத்தரவின் பெயரில் மாநில பொறுப்பாளர் எங்களின் நிரந்தர வழிகாட்டி புஸ்ஸி N.ஆனந்த் ex.mla அவர்களின் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்ட தலைமை மற்றும் மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக* இன்று 200 முக கவசங்கள் மற்றும் 500 குடிநீர் பாட்டில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பூக்கடை மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் வினோத், வாலாஜா ஒன்றிய தலைவர் தீனா வழங்கினார் வாலாஜா ஒன்றிய செயலாளர் கமல் பொருளாளர் திலீப் இளைஞரணி பொருளாளர் சஞ்சய் ஒன்றிய துணைத் தலைவர் தினேஷ் ஒன்றிய கௌரவத் தலைவர் மணி உடனிருந்தனர் . செய்தி வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment