முதியோர் உதவித் தொகை வீடு தேடி வருகிறது...தமிழக முதல்வர் அறிவிப்பு..

 


வீடுதேடி வரும் முதியோர் உதவித்தொகை: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு


வீடுதேடி வரும் முதியோர் தொகை


கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த சில நாட்களாக அமலில் இருந்துவரும் நிலையில் வங்கிகளில் வேலை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே இயங்கி வருகின்றன


வீடுதேடி வரும் முதியோர் தொகை


வீடுதேடி வரும் முதியோர் தொகை


இந்த நிலையில் நாளை மாதத்தின் முதல் நாள் என்பதால் முதியோர் உதவித்தொகை மற்றும் பென்சன் தொகை வாங்குவதற்கு வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இந்த நிலையில் முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து சேரும் என்றும் இதற்காக வங்கிகளுக்கு அவர்கள் வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்


மாவட்ட ஆட்சியர் மூலம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தல் செய்யும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார் .மேலும் வட்டாட்சியர் வங்கி மற்றும் தபால் ஊழியர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஆட்சியர்களுக்கு அறிவுரையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் மாதம்தோறும் 32 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் முதியோருக்கான உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.


    


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.