தமிழக முதல்வர் சிறப்பு பேட்டி....
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.
தமிழகத்தில் கொரோனா பாதித்த 5 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - முதலமைச்சர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது
தமிழகத்தில் கொரோனாவுக்கு தனி சிகிச்சை அளிக்க 17,089 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன
தமிழகத்தில் 3018 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன -முதலமைச்சர்
ஒன்றரை கோடி முகக்கவசங்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளன- முதலமைச்சர்
*கொரோனா அறிகுறி இருக்கும் நபர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் -முதலமைச்சர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு - முதல்வர் பழனிசாமி
சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல, நன்மைக்காகவே - முதல்வர்.
இது போன்ற ஒரு சவாலான நிலையை தமிழக அரசு எதிர்கொண்டது இல்லை - முதலமைச்சர்
Comments
Post a Comment