திருப்பத்தூர் பகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு....
.
மாவட்ட ஆட்சியரின் துரித செயல்பாடு.. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவை அண்ட விடமாட்டோம் . அமைச்சர் கே.சி.வீரமணி...
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட், அம்மா உணவகம், உழவர் சந்தை, அரசு மருத்துவமனை ஆகியவற்றை அமைச்சர் கே சி வீரமணி ஆய்வு நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரையில் திருப்பத்தூர் பகுதியில் எந்த நபருக்கும் கரோனா வைரஸ் தாக்கம் இல்லை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அதிவேகமாக செயல்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கி மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகிறார். எனவே திருப்பத்தூர் மாவட்ட மக்கள் வீட்டைவிட்டு அனாவசியமாக வெளியே வராமல் ஒத்துழைப்பை கொடுத்தால் ஒரு நபருக்கு கூட கரோனா வைரஸ் வராது என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புபவர்கள் மீது காவல்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)
Comments
Post a Comment