ஐந்தாம் நாள்....எங்கள் எதிரியான கொரோனா வை அழித்து விரட்டி விடு முருகா.....
*ஐந்தாம் நாள் யுத்தம்*. வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை என்று நம்பிக்கை ஊட்டுகின்றார் மலைமீது இருந்து அந்த பழனிச்சாமி! விழித்திரு! விலகி இரு! வீட்டில் இரு! என்று நோய் தடுக்க நம்பிக்கை ஊட்டுகின்றார் கோட்டையிலிருந்து ஐயா பழனிச்சாமி! கொடும் சூரனை சூரபதுமனை யுத்தத்தில் சம்ஹாரம் செய்தவர் பழனிச்சாமியான சுப்பிரமணியசாமி! ஐந்தாம் நாள் யுத்தத்தில் தான் முருகனை நேருக்கு நேர் நின்று போர்தொடுக்க வருகிறான் சூரன்! அடியவர் ஆசைகளை எதுவென அறிந்து அப்படியே அருளுகின்ற ஆறுமுகசாமியே! சவால் விட்டு சகல நாடுகளையும் சண்டைக்கு அழைத்து சாகடித்து. சந்தோஷப்பட்டு கொண்டு சுற்றி திரிகிறான் கோவிட் 19 ! தேசங்கள் எல்லாம்! திசைகளெல்லாம்!திணறிக் கொண்டிருக்கின்றன! "யாமிருக்க பயமேன்" என்று கேட்டபடியே வேல் ஏந்தி நின்று இருக்கும் வேலாயுதா! கந்தா என்றால் இந்தா என் பாயே ! இப்போது கேட்கிறோம் யாங்கள்! களத்தில் நாங்கள் நிராயுதபாணிகள் எங்கள் எதிரியை அழித்து விரட்டி விடு! எங்கோ மறைந்தான் எங்கள் பகைவன் என்று எம்மை கூத்தாட வை குமரா!! இப்படிக்கு வாரியார் தாசன் கவிஞர் ச.லட்சுமிபதி வேலூர் 9
Comments
Post a Comment