வீட்டு வாடகை கேட்க கூடாது. மத்திய அரசு...
மாணவர்கள், தொழிலாளர்களிடம் 1 மாதத்திற்கு வாடகை கேட்க கூடாது.. உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு.
டெல்லி: மாணவர்கள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரிடம் இருந்து ஒரு மாதத்திற்கு வாடகையை கேட்கக் கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு மீறி கேட்டாலும் வீட்டை காலி செய்ய சொன்னாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் ஏழை மக்கள், புலம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள், உணவுகளுக்கான ஏற்பாடுகளை மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசோ அல்லது யூனியன் பிரதேச அரசோ அவர்களை சோதனை செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
இதற்காக தற்காலிக தங்குமிடங்கள் அமைக்க வேண்டும். நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களின் முழு ஊதியத்தை எந்த பிடித்தமும் செய்யாமல் தாமதம் செய்யாமல் செலுத்த வேண்டிய தேதிகளில் செலுத்திவிட வேண்டும்.
மாணவர்கள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரிடம் இருந்து ஒரு மாதத்திற்கு வாடகையை அதன் உரிமையாளர்கள் கேட்கக் கூடாது. அது போல் அவர்கள் வாடகை கொடுக்காததை காரணம் காட்டி வீட்டை காலி செய்ய சொல்லக் கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி?
நாடு முழுவதும் 21 நாட்கள் அதாவது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டதால் டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த மக்கள் நடந்தே செல்கிறார்கள். இதனால் கொரோனா சமூக பரவல் நிலைக்கு செல்லும் என அஞ்சப்படுகிறது.
Comments
Post a Comment