கொரோனா ப். பரவலை தடுக்கும் குறள்....கவிஞர் புனிதன்..

கொரோனாப் பரவலை
 தடுக்கும் குறள்


சமீபத்தில் கோவிட்-19 என்ற கொடிய உயிர்கொல்லி வைரஸ்,  கொரோனா என்ற தொற்று நோயைப் பரப்பி, உலக மக்களை அச்சுறுத்தி, ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.


நம்முடைய, இந்திய திருநாட்டிலும் புகுந்துள்ள இந்த கொரோனா தொற்று  நோய், நாடுமுழுவதும் மெல்ல மெல்ல பலரிடையே பரவி வருவது நம்மிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  


இந்த பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் வருகிற ஏப்ரல் 14 வரை ஊரடங்கை அமுல்படுத்தியிருந்தாலும், பலரும் இந்த கொரோனாவுக்கு அஞ்சாமல், அதன் வீரியத்தையும், கொடிய விளைவுகளையும் உணராமல் வெளியே சுற்றி வருகின்றனர்.  


இந்த நேரத்தில் திருவள்ளுவர் நமக்கு உதவி செய்கிறார். ஆம் அவர் கூறிய குறள் ஒன்று இந்த கொடுமையான சூழலை மாற்றும் என்றும், அக்குறளின் படி நாம் நடந்தால் இந்த கொரொனா பரவலை தடுக்க முடியும் என்றும், இந்த சூழலுக்கு அக்குறளை பொருத்தி கூற விரும்புகிறேன்,


" அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை"
ஆரிருள் உய்த்து விடும்                                      (குறள்:121)


 பொருள்
அடக்கம் உடையவர்கள் அமரர்களோடு இணைத்து போற்றப்படுவர்,  அடக்கம் அற்றவர்களுக்கு ஆரிருள், அதாவது துன்பம் ஏற்படும் என்பது இக்குறளின் பொருள். 


 இங்கு அமரர்கள் என்றால் தேவர்கள் என்று பொருள் கொள்ளப்படுவதால்,  இக்குறள் இச்சூழலுக்குப் பொருந்துமா என்று நீங்கள் கேட்கலாம்.  தேவர்கள் என்பவர்கள் பாற்கடலில் எழுந்த அமுதத்தை உண்டு மரணமின்றியும், நோயின்றியும் ஆரோக்கியமாக வாழக்கூடியவர்கள்.  அந்த விதத்தில் நோயற்று வாழ்பவர்களையும் நாம் தேவர்களுக்கு ஒப்பாக அமரர்கள் என்று அழைக்கலாம் அல்லவா. 
 
ஆகவே, ஊரடங்கை மதித்து, அடக்கமாக வீட்டுக்குள் இருப்பவர்கள் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல், ஆரோக்கிய வாழ்வு பெற்று,  தேவர்களைப்போன்று அமரர்களுக்கு இணையாக வாழ்வார்கள் என்றும், 


வீட்டில் அடங்காமல் வெளியே திரிபவர்களுக்கு கொரோனா என்னும் ஆரிருள் (துன்பம்) ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையை அன்போடும் முன்வைத்து,  


அடக்கமாய் வீட்டுக்குள் இருந்து அமரர்கள்போல் ஆரோக்கியமாக, நோய் தொற்று இன்றி வாழலாம்.


ஆம்,   
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.


 குறள்வழி நடப்போம்,கொரோனாவை ஒழிப்போம்,



    நம்பிக்கையுடன்
 கவிஞர்.இரா.புனிதன்
சென்னை
அலைபேசி 9840682682


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.