ஒரு ரூபாய் க்கு சானிட்டைசர் பிரபல நிறுவனம் அறிவிப்பு...



சானிடைசர்களின் தேவை அதிகரித்துள்ளதால், ஒரு ரூபாய்க்கு சிறிய பாக்கெட் சானிடைசர்கள் விற்பனைக்கு வந்துள்ளன.


கவின்கேர் நிறுவனம், புதிய முயற்சியாக ஒரு ரூபாய்க்கு, சானிடைசர் பாக்கெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.


 சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், எளிய மக்களிடையே shampooவை கொண்டு செல்லும் வகையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் 50 பைசா விலையில் shampoo பாக்கெட்டுகளை அறிமுகம் செய்தது.


இதை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும், சிறிய பாக்கெட்டுகளில் shampooவை அறிமுகம் செய்தன.


 தற்போது, CHIK, NYLE போன்ற பிராண்டில், SHAMPOO, எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்வதை தொடர்ந்து, இதே பெயரில், சானிடைசர் பாக்கெட்டுகளையும் ஒரு ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.


 கொரோனா பாதிப்பு காரணமாக, சானிடைசர்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.


இதனை கருத்தில் கொண்டு 2 மில்லி அளவில் பாக்கெட்டுகளில் சானிடைசர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கவின்கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


 அதேசமயம் தனது மற்றொறு பிராண்டான NYLEன் பெயரில், 90ML, 400ML, 800ML மற்றும் 5 லிட்டர் என்ற அளவுகளில் சானிடைசர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


பொதுவாக, ஒரு புதிய தயாரிப்பை கொண்டு வர 18 மாதங்கள் வரை ஆகும் என்ற நிலையில், கவின்கேர் சானிடைசரை ஏற்கனவே தயாரித்திருந்ததால், உடனடியாக கொண்டு வர முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


shampoo பாக்கெட்டுகள் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதோ, அதேபோல், இந்த சானிடைசர் பாக்கெட்டுகளும், மளிகை கடைகள், இணையம் மூலம் என சாமானிய மக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.