செய்தி துளிகள் சுருக்கமான பார்க்க...
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 1,00,000ஐ தாண்டியது! ------------------------
கடந்த 24மணி நேரத்தில் 345 பேர் மரணம்!
புதிதாக 18000 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது... ------------
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38-ஐ தாண்டியுள்ள நிலையில், இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கத்தில் இருந்தவர்களுக்கே தொற்று பரவி------------
*டெல்லியிலிருந்து நடைபயணமாக வெளியேறும் வெளிமாநில மக்கள் - அரசு உதவிகளை செய்து தர பிரியங்கா காந்தி கோரிக்கை...
--------
*சென்னை பூவிருந்தமல்லியில் 54 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை நகராட்சி நிர்வாகம் முடக்கியது.-----------
*அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 45 வயது நபருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.--------------
*9 அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்பில் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது...----
*வேலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 600 பேர் - 9 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் பரிசோதனை...---------------
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக தீவிரமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. -----------
இது குறித்து *மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம்* வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேலூர் மாவட்டத்தில் 600 நபர்கள் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
**இதுவரையில் சந்தேகத்திற்கிடமான 9 நபர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதில் 7 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்...
*ஜப்பானில் வசந்த கால தொடக்கமாய் செரி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
*கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உற்சாகம் குறைந்துள்ளது.
*டோக்கியோ நகரில் பூத்து குலுங்கும் செரி மலர்களை குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே கண்டு ரசித்தனர்...
*கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
*கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.
*இறுதி சடங்கில் உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை...
*எரிச் சாராயம் குடித்தால் கொரோனா வராது.. ஈரானில் பரவிய வதந்தி.. 300 பேர் பலி.. 1000 பேர் கவலைக்கிடம்*
*போபாலில் தன் தாய் இறந்த செய்தி கேட்டும் பணியை தொடர்ந்து செய்த ஒரு அதிகாரியின் கதை பலரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது
மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த அஷ்ரஃப் அலி என்பவர் போபால் மாநகராட்சிக்கான துப்புரவுப் பொறுப்பாளராக உள்ளார். இவர் போபால் பகுதிக்கு உட்பட்ட வீடுகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் இருக்கும் போது அவரது தாயார் மறைந்துவிட்ட துக்கச் செய்தி வந்துள்ளது. சோகம் தன்னை சூழ்ந்திருந்தாலும் தான் செய்து கொண்டிருந்த பணியை பாதியில் விடாமல் பணி முடிந்த பின்னே தாயாரின் இறுதிச் சடங்கிற்கே சென்றுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஷ்ரஃப் அலி,''ஒருவரின் தாயை விட மதிப்புமிக்கது எதுவுமில்லை. ஆனால் தாய்க்கு அடுத்தது தாய் நாடு. காலை 8 மணியளவில் எனது தாயின் மரணம் குறித்து நான் அறிந்தேன், ஆனால் என் நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமை இருந்தது. இறுதிச் சடங்கிற்காக மதியம் சென்றுவிட்டு, மீண்டும் வேலைக்கு வந்துவிட்டேன்'' என தெரிவித்துள்ளார்.
அஷ்ரஃப் அலியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
*சானிடைஸர், முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்கப்படுகிறதா...? புகாரளிக்க எண்கள் இதோ...
*தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் இப்பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக மருந்துக்கடைகள், வினியோகஸ்தர்கள் என 40 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன*
*தவறு செய்பவர்கள் மீது வழக்குப்பதிவானால், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும், கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஒழுங்குமுறைச்சட்டத்தின் கீழ் மேலும் 6 மாதங்கள் காவலில் வைக்க முடியும்*
*விதிமீறல் தொடர்பாக புகார் தர, தமிழ்நாடு மருந்து கண்காணிப்பு இயக்குநகரத்திற்கு 9444321919 என்ற எண்ணிலும், சிவில் சப்ளை சிஐடி கட்டுப்பாட்டறையை 044-24338972 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது*
*ஊரடங்கில் மக்களை பாதுகாக்க 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் கொண்ட இளைஞர் படையை உருவாக்கியுள்ளோம் - கேரள முதல்வர் பினராயி விஜயன்*
*அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேருக்கும் கேரளாவில் 173 பேருக்கும் வைரஸ் தொற்று*
*கர்நாடகா 55, குஜராத் 53, ராஜஸ்தான் 48, தெலங்கானா 48, உத்தரபிரதேசம் 45, டெல்லி 39, பஞ்சாப் 38, தமிழ்நாடு 38, ஹரியானா 33, மத்திய பிரதேசம் 30, காஷ்மீர் 18, மேற்கு வங்கம் 15, லடாக் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு*
*ஆந்திரா 14, பீகார் 9, சண்டிகர் 7, சத்தீஸ்கர் 6, உத்தரகாண்ட் 5, கோவா 3, இமாச்சல பிரதேசம் 3, ஒடிசா 3, அந்தமான் 2, மணிப்பூர் 1, மிசோரம் 1, புதுச்சேரி 1 நபருக்கு கொரோனா தொற்று*
*தனிமைப்படுதல் என்பது கூண்டோ,சிறைவாசமோ அல்ல. அது கொடிய நோயான கரோனாவில் இருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ளும் வழிமுறை. எனவே பொதுமக்கள் யாரும் ஊரடங்கு நாட்களில் அவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்*
*-உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி*
*ஊரடங்கு விதிகளை மீறினாலும், தெருக்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்றாலும் காவலர்கள் குடிமக்களைத் தாக்கக் கூடாது
*-கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமசந்திரன்
*நிறுத்தப்படும் டிவி தொடர்கள்?
*கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் டிவி தொடர் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன
*பொதுவாக ஒரு மாதத்திற்குத் தேவையான டிவி தொடர்களை தொடரச்சியாக 10, 15 நாட்களில் எடுத்து முடிப்பார்கள். அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்த முடியாததால் தற்போது அந்த டிவி தொடர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளார்கள்
Comments
Post a Comment