நெற்றியில் இடும் நாமகட்டியின் பயனும், மருத்துவ குணமும்...


நெற்றியில் இடும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மருத்துவ குணம் இருக்கும்.


இதனை ஆராய்ச்சி மையங்கள் கருவிகள் இல்லாமல் அனுபவமாகவே கூறியவர்கள் தான் நம் முன்னோர்கள்..


திருநாமம் இடுதல், திருமண் இடுதல் என்பது ஒரு பழக்கம்.. இதனை பெரும்பாலும் வைணவர்கள் தினமும் இட்டுகொல்வார்கள்..


ஆனால் பெரும்பாலும் நம் மக்கள் சனிக்கிழமை , புரட்டாசி தினங்களில் தவறாது வைத்துக்கொள்வார்கள்...


நாமக்கட்டி களிமண்ணில் இருந்துதான் தயாரிக்கபடுகிறது...


(தெய்வீக நோக்கில் இம்மன் திருமண் என கூறப்படுகிறது)


அதனால் தான் இதில் கால்சியம் முக்கியபங்கு வகித்துள்ளது.


திருநாமம் இடும்போது கிடைக்கும் கால்சியம் சக்தி, இரத்த ஓட்ட அமைப்பிலும், மூளை செயல்பாடுகளிலும், நோய் எதிர்ப்பு திறனும், இதய துடிப்பு கட்டுப்பாடு என பல நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளது.


120 வயது வரை வாழ்ந்த இராமானுஜர், 101 வயது வரை வாழ்ந்த சுவாமி தேசிகன் ஆகியோர்  வாழ்விற்கு  சட்விக் உணவு கட்டுப்பாடும் (சட்விக் உணவு - தூய அத்தியாவசிய, இயற்கை, மற்றும் எரிசக்தி கொண்ட, சுத்தமான, உணர்வு, உண்மை, நேர்மையான, ஞானம் 'என்று பொருள்) “நாம தர்மம்” 
(கால்சியம் மொத்த விளைவு) ஆகியவையே முக்கிய காரணமாக இருந்தது எனலாம்...


இன்று கால்சியம் இன்றி இருபது வயதிலே எலும்பு வலுவின்றி வாழ்கிறோம்..


தயாரிப்பு முறை..


நாமக்கட்டி தயாரிக்கத் தேவைப் படும் மண்னை ( இதுவே திருமண் எனப்படும் )  வெட்டி எடுத்து கட்டிகளை உடைத்து, செக்கு இழுப்பதைப் போன்று மாடு கட்டி இழுத்து பவுடராக மாற்றப்படும்.
இம்மண் பெரும்பாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் கிடைக்கிறது.


அதை நீரில் கரைத்து வைத்தால் ஓரிரு நாட்களில் கழிவுகள், கீழே படிந்துவிடும். 


மேலே இருக்கும் ‘பாலை’ மட்டும் பிரித்து தொட்டியில் ஊற்றி வைத்தால்  நாமக்கட்டி தயாரிப்புக்கு உகந்த மண் கிடைத்து விடும். 


அதனை வெயிலில் பதப்படுத்தி காய வைத்து, நாமக்கட்டி தயாரிப்பதற்கான பக்குவத்துக்கு கொண்டு வந்து பின்பு நாமக்கட்டி சிறு சிறு வில்லைகளாக செய்யப்படுகிறது.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.