ஆறாம் நாள் யுத்தம்..மனதுவை மகாதேவா....கவிஞர் ச.லக்குமிபதி..
ஆலமுண்டு அமரர்க்கு அருள் புரிந்த அம்மையப்பா! சர்வேஸ்வரா! சகலருக்கும் படியளக்கும் பரமேஸ்வரா! பசுக்களின் பதி நீதானே! அப்பனே!! தென்நாடுடைய சிவனே! நீ தானே எல்லா நாட்டுக்கும் இறைவன்! இங்கு எங்கும் கொராண ஓலம்! கோவிட்19 ன் கொடுங்கோலாட்சி! அவனை கேட்பாரில்லை! மேய்ப்பார் இல்லை! தறிகெட்டு ஆடுகின்ற வைரசின் பேயாட்டம் ஓய்ந்த பாடில்லை!! அச்சப்படுத்தி முப்புரங்களின் அரக்கர் தலைவர்கள் மக்களை அழித்தபோது சிரிப்பாலே அன்று அழித்தாயே!சடையானே! சூலப்படையானே!! கல்லுக்குள் தேரைக்கும் உணவளிக்கும் நீலகண்டனே! நஞ்சு பரவி கொண்டிருக்கிறது!! இன்று எமக்கு தாயும் தந்தையும் ஆன மருந்தீஸ்வரா எங்களை உடன் வந்து காப்பாற்று!வைத்தியம் பார்க்க விரைந்து வா வைத்தீஸ்வரா!! உன்னால் இந்த கொரானா பிடியிலிருந்து எங்களை எளிதாக காப்பாற்ற முடியும்!மாதவம் செய்த தென்திசை மண்டியிட்டு கேட்கிறது ..... மனது வை மகாதேவா!! வாரியார் தாசன் கவிஞர் ச.லக்குமிபதி வேலூர்-9
Comments
Post a Comment