பாரதபிரதமர் வானொலி காட்சி மூலமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டார்....

""வாழ்வா சாவா போராட்டம்- மக்களிடம் மன்னிப்பு  கேட்கிறேன் - மோடி பேச்சு!!!!!



வாழ்வா சாவா போராட்டத்தில் நான் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வானொலி மூலம் மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசி வருகின்றார். இன்று பேசிய பிரதமர் கொரோனா குறித்து பேசினார். அதில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நான் எடுத்த இந்த முடிவால் என் மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிகிறேன்.கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம். மருத்துவர்கள் செவிலியர்கள் பணி என்பது சிறப்பானது என்று பிரதமர் மோடி பேசி வருகிறார்.
நோய் என்பது ஆரம்ப காலத்திலேயே தடுக்கப்பட வேண்டிய ஒன்று அதைத்தான் தற்போது இந்தியா செய்து கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற சில கட்டுப்பாடுகள் அவசியம். அனைவரும் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும்.என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தொகுப்பு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.