அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை....

மக்களைப் பாடாத வள்ளல் பெருமான்:-


 வள்ளலார் இறைவனை அல்லாது மக்களைப் பாடாத பெருமகனார், அவரிடம் ஒருமுறை கந்தசாமி  முதலியார் என்பார் தாங்கொணா வறுமையினால் அடிகளிடம் அணிகி எனது வறுமையை நீக்கக் கொள்ளும் பொருட்டாக சுவாமிகள் சில பிரபுக்களுக்கு சீட்டுக் கொடுத்தருள வேண்டும் என வேண்டினார். வள்ளலாரும் அவரை நோக்கி 


"ஏட்டாலுங் கேளய லென்பாரை


நான் சிரித்து என்னை வெட்டிப் 


போட்டாலும் வேறிடம் கேளேன்,


என்னானைப் புறம் விடுத்துக்


 கேட்டாலும் என்னை யுடையா


னிடஞசென்று  வாயுறை பாட்டாலுஞ் 


 சொல்லி நிறுத்து வனே."


என்று திருப்பாடல் கூறி நாம் எதற்கும் எல்லாம் வல்லராகிய அருட்பெருஞ்ஜோதி இறைவனையே வேண்டுவமல்லது.  இவ்வுலக மாந்தரை மதித்து ஏற்கமாட்டோம். நீரும் அவ்வழியே பற்றி அவனருளால் உமது வறுமை சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும் என்று உபதேசித்து அனுப்பினார்.


 அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி !


செய்தி..வேலூர் நண்பன் இதழ் 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.