ஏப்ரல் 4. ஒரே நேரத்தில் தீபம் ஏற்றி வழிபடுவோம்......
தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் வழிபாடு !
( சைவ நெறியும் , ஆன்மீகமும் பிடிக்காதவர்கள் இதை தொடர்ந்து படிக்க வேண்டாம் )
வருகின்ற ஏப்ரல் 4 ம் தேதி ஏன் நாம் கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்?
வருகின்ற 04/04/2020 அன்று தமிழ் தேதியும் பங்குனி 22 ஆகும்.
எண் கணித ஜோதிடம் எனும் numerology ன் படி
4/4/2020 அன்று ,
தேதி :- 4
மாதம் :- 4
வருடம்:- 4 (20+20=40 :- 4+0=4)
பங்குனி 22 :- 4 (2+2=4)
ராகுகாலம்:- 4
( 9 - 10.30 :- 9 +10.30=22 :- 2+2=4)
என அன்று அனைத்தும் 4 ம் எண்ணிற்கு உரிய ராகுபகவானின் ஆதிக்கத்தில் வருகிறது!
ராகுபகவானானது, சூரினையே சில நிமிடம் விழுங்கும் மிக வலிமையான சர்ப்ப (பாம்பு ) கிரகம் ஆகும்.
விஷக்கிருமியான கொரனாவானது , சீன மக்கள் பாம்பு கறி உண்டதால் பரவியதாக சொல்லப்படுகிறது. சர்ப்ப விஷமான கொரனா வைரஸ் , சர்ப்ப கிரகமான ராகுவின் ஆதிக்கத்தின் கீழ் வரும் 4/4/2020 அன்று , அன்றைய விஷ காலமாக கருதப்படும் ராகுகாலமான காலை 9 முதல் 10.30 வரை அதி தீவிரம் அடையலாம் என எண்கணித ஜோதிட ரீதியாக நம்பப் படுகிறது.
திருப்பாற் கடலில் அமிர்தம் கடைந்த போது வாசுகி எனும் சர்ப்பம் கக்கிய கடும் விஷத்தை எம்பெருமான் சிவன் உண்டு , தனது தொண்டையில் நிறுத்தி திருநீலகண்டனாக இருந்து
லோகத்தையே காப்பாற்றினார்.
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், பத்மா, ஐந்து தலை உள்ள பச்சை நிற மகாபத்மா, சந்திரனின் பிறையை தலையில் கொண்டுள்ள குளிகன், பாம்புகளின் தலைவன் வாசுகி, சங்கபாலா, தக்ஷக மற்றும் கார்கோடன் போன்ற மஹா சர்ப்பங்கள் உட்பட நாகலோகத்தில் உள்ள அனைத்து சர்ப்பங்களுக்கும் தலைவனாக இருந்து ,
நாகத்தை கழுத்தில் அணிந்து திரு நடனம் ஆடிக்கொண்டு இருக்கும் எம்பெருமானிடம், 4/4/20 அன்று ராகுகாலத்தில் அவர் திருவடிகளில் பணிந்து , திருப்பாற்கடலில் உருவான ஆலகால விஷத்தை உண்டு உலகத்தை காப்பாற்றியது போல , இன்று எங்கள் மனித இனத்தையே அழித்து கொண்டு இருக்கும் கொரனா எனும் விஷத்தையும் நீயே உண்டு எங்களை காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!
என அனைவரும் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு , ஒரே நேரத்தில் சிவபூஜை செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும் ,
அதாவது, சரியாக 10 மணிக்கு கொரனாவை ஒழித்திடுங்கள் என சிவ பெருமானிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பூஜை முறை:-
வீட்டில் , சிவன் படம் அல்லது லிங்கம் முன்பாக விளக்கு ஏற்றி வைத்திட வேண்டும்.
சிவன் படம் லிங்கம் இல்லாதவர்கள் விளக்கு மட்டும் ஏற்றி வைத்து அதையே ஜோதி லிங்கமாக கருத்திட வேண்டும்.
நெற்றியில் கண்டிப்பாக திருநீறு இட்டிருக்க வேண்டும்.
விநாயகரை ஓம் கணபதியே நம என கூறி வணங்கி, உங்கள் குல தெய்வத்தை மனதில் வணங்கி,
லிங்கத்திற்கோ அல்லது சிவன் படத்திற்கோ அல்லது திரு விளக்கிற்கோ வில்வம் இருந்தால் ஓம் நம சிவாய என 3 முறை கூறி வில்வார்ச்சனை செய் வேண்டும். வில்வம் இல்லாதவர்கள் வேறு பூக்களை கொண்டும் , பூக்களே கிடைக்காதவர்கள் திருநீறு கொண்டும் அர்ச்சனை செய்திட வேண்டும்.
பின்பு கற்பூரம் காட்டிட வேண்டும்.( கற்பூரம் இல்லை என்றாலும் பரவா இல்லை, இருகரம் கூப்பி தொழுதாலே போதும்)
பின்பு சரியாக காலை 10 மணிக்கு கொரனா விஷ கிருமியை ஒழித்திடுக! ஒழித்திடுக!
என சிவ பெருமானிடம் மனதார வேண்டிட வேண்டும்.
தமிழகம் எங்கும் ஒரே நேரத்தில் பல கோடி பக்தர்களும் ஒரே விண்ணப்பம் வைத்து வேண்டிட ஈசன் மனம் இறங்கி நம்மை நிச்சயம் காப்பாற்றுவார்...
நம் கோடான கோடி பக்தர்களின் கண்ணீர் திரு நீலகண்டனின் கருணை நிறைந்த கால்களை நனைத்திட வேண்டும் , அந்த அளவுக்கு நாம் உள்ளப்பூர்வமாக வணங்கிட வேண்டும்..
தமிழகத்தில் உள்ள ஒவ்வோர் இந்துக்களின் வீட்டிலும் இப்பூஜை நடைபெற வேண்டும்....
நீங்களும் , உங்கள் குடும்பமும், உங்களது சொந்தங்களும், உங்களது நட்புகளும் மற்றும் இந்த மனித சமூகம் அனைவரும் நலமோடு வாழ இந்த வழிபாட்டை கண்டிப்பாக நாம் மேற்கொள்வோம்.
நோய் தொற்று உள்ளவர்கள் அல்லது அறிகுறி உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவர்களை அணுகி அவர்களின் ஆலோசனைப்படியே நடந்து கொள்ள வேண்டும்.
சிவாய நம
வாழ்க வளத்துடன். செய்தி. சதீஷ். வெளியீடு. வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment