கொரோனா தடுப்பூசி ஆய்வு பணி தீவிரம்...மத்திய அரசு..
.
கொரோனா தடுப்பூசி ஆய்வு பணிகள் தீவிரம்-மத்திய அரசு.
கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் ஆய்வு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த சுகாதார அமைச்சக இணைச் செயலர் லவ் அகர்வால், அந்த ஆய்வு சரியான திசையில் பயணிப்பதாக கூறினார்.
கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு கவசங்களை தென் கொரியா, துருக்கி, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
கொரோனா பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்ற அவர், எல்லோரும் மாஸ்க் அணிவது அவசியம் இல்லை என அறிவுறுத்தினார்.
எந்த விலை கொடுத்தாவது சமூக விலகியிருத்தலை பினபற்றுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
அறிகுறிகள் குறித்து அரசுக்கு உரிய நேரத்தில் தகவல் அளிக்கப்படாததால், தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment