ஏழாம் நாள் யுத்தம்...அருட் கதிர்களை அள்ளி வீச அழையுங்கள்...கவிஞர் ச லக்குமிபதி...

வைரஸின் வீரியம்  குறையட்டுமே!! எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது கேட்பினும் அங்கெங்கிருந்து அருள. அந்த அருட்பெருஞ்ஜோதி! ஆண்டவருக்கே அன்பாய் கட்டளையிட்டாய் வள்ளல் பெருமானே! இன்று  எம் மக்கள் கோவிட் வைரஸ் கொடுமைக்கு ஆளாகி அல்லல் படும் அவலம் எங்கும்! இது கட்டாயம் மறைய வேண்டும்! மறைபொருளாய் இருக்கும் கனகசபை யான் நீ அழைத்த போதெல்லாம் அருகில் வந்து நின்றாரே! கேட்டதையெல்லாம் கொடுத்தாரே! அவரை எங்களுக்காக மீளவும் அருட்பெருஞ் ஜோதி அருட்கதிர்களை அள்ளி வீச அழையுங்கள்! வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி வருந்திய வடலூர் பெருமானே! செய்வதரியாது தவிக்கின்றோம்! எத்தனை நாள் கொரானா கொடுமைநீடிக்கும்? சூரிய நாராயண பெருமாளை நாங்கள் வெளியில் வந்து கும்பிடுவது எக்காலம்? ஊரடங்கில் எம்மக்கள் ஒத்துழைத்தால் போதும்! அடங்கிப் போவான் கோவிட் அரக்கன்!!ஆருயிருக்கெல்லாம் அன்பு செய்ய வரம் கேட்ட வள்ளல் பெருமானே! உன்னை வணங்கி நின்று வேண்டுகின்றோம்! கொரானா இரண்டாம் ஸ்டே‌ஜில் முடங்கட்டுமே ! வைரஸ்ஸின் வீரியம் முற்றிலும் அடங்கட்டுமே! மக்கள் மனம். விடிந்தது என்று முழங்கட்டுமே! மருதூர் மாணிக்கம் நமக்கு ஆசி  வழங்கட்டுமே!! வாரியார் தாசன்கவிஞர் ச.லக்குமிபதி வேலூர் -9


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.