மார்ச் 28.வரலாற்றில் வேதாத்திரி மகரிஷி நினைவு தினம்...
வரலாற்றில் மார்ச் 28 அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி நினைவு தினம்
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் நாள் கூடுவாஞ்சேரியில் பிறந்தார். இவர் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பணியாற்றிய பெரியார்.
Maharishi established in. 1958 wcsc .The primary aim is to attained through yoga.truth, anmigam.
தனது சகோதரியின் மகளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். நெசவுத் தொழிலில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை தொடங்கினார். இருப்பினும் ஆன்மிகத் தேடலில் அளவற்ற நாட்டம் கொண்டிருந்தார்.
சித்தர்களின் ஏராளமான நூல்களைப் பயின்று தன்னை பற்றி அறிதல் முயற்சியில் அகத்தாய்வு முறையை மேற்கொண்டார்.
யோகம் தியானம் போன்ற ஆன்மீகத் தேடலின் விளைவாக 35வது வயதில் ஞானம் பெற்றார்.தன்னுடைய கருத்துக்களை எழுத்துக்களின் மூலமாகவும் உரைகளின் மூலமாகவும் ஆன்மிகத்தை பரப்பினார்.
மக்கள் மகிழ்ச்சியோடு வாழும் வழிமுறைகளை ஆராய்ந்து மனவளக்கலை ஆன்மிகத்தை வளர்த்தார்.
2006 ஆம் ஆண்டு 93வது வயதில் கோயம்புத்தூரில் மறைந்தார்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
செய்தி வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment