Posts

Showing posts from March, 2020

ஓடிஷாவில் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமணை தயார்..

Image
கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் பணிகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதல்வர்களுக்கு  பிரதமர் உத்தரவு பிறப்பித்தது அடுத்து மாநிலம் முழுவதும் அரசு அதிகாரிகள் முழுமையாக கொரோனா வில் இருந்து மக்களுக்கு முழுமையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனகளத்தில் இறங்கி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒடிஷாவில் bhubanedwar இல்  1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார். நிலையில் உள்ளது. இதற்கு  பணியாற்றிய மதுரையை சார்ந்த சாதித்த தமிழன் திரு கார்த்திகை பாண்டியன் I A S. அவர்களின் பணி மிகவும் பாராட்டு பெற்றதாகும். 

டிவிஎஸ் நிறுவனம் முப்பது கோடி நிதி வழங்கியது....

Image
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனா வைரசுக்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவி  செய்வதற்கு நிதி பற்றாக்குறை காரணமாக பல்வேறு அமைப்புகளுக்கும்,நிறுவனங்ளுக்கும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் அவர்களிடம் ஏராளமான நிறுவனம் நிதி வழங்கி வரும் நிலையில் டிவிஎஸ் நிறுவனம் 30கோடி நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா தடுப்பூசி ஆய்வு பணி தீவிரம்...மத்திய அரசு..

.                       கொரோனா தடுப்பூசி ஆய்வு பணிகள் தீவிரம்-மத்திய அரசு. கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் ஆய்வு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த சுகாதார அமைச்சக இணைச் செயலர் லவ் அகர்வால், அந்த ஆய்வு சரியான திசையில் பயணிப்பதாக கூறினார். கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு கவசங்களை தென் கொரியா, துருக்கி, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். கொரோனா பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்ற அவர், எல்லோரும் மாஸ்க் அணிவது அவசியம் இல்லை என அறிவுறுத்தினார். எந்த விலை கொடுத்தாவது சமூக விலகியிருத்தலை பினபற்றுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். அறிகுறிகள் குறித்து அரசுக்கு உரிய நேரத்தில் தகவல் அளிக்கப்படாததால், தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இலவச வாகன சேவையில் வேலூர் மாவட்ட மாணவர்கள்..

Image
பயணம்1️⃣ வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சார்ந்த கர்ப்பிணி பெண் வாணியம்பாடி பகுதியில் உள்ள AR.￰ரஹமான் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக ￰சுபலக்ஷ்மி W/O  ￰குணசேகரன் என்ற பெண்மணி இரட்டை குழந்தை பிறந்ததால் மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றோம் பயணம் 2️⃣ ராணிப்பேட்டையில் இருந்து வடுகன்தாங்கல் பகுதியை சார்ந்த கோடீஸ்வரி கணவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்Scudder Memorial Hospital Ranipet அறுவை சிகிச்சை முடிந்து வீடு அழைத்துச் சென்றோம் பயணம்3️⃣ வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு  பகுதியை  சேர்ந்த  பானுப்ரியா W/O சிவகுமார் என்பவருக்கு  3 நாட்களுக்கு  முன்பு வேலூர் வள்ளலார்  உள்ள தனியார்  மருத்துவமணையில் இரட்டை  குழந்தை பிறந்துள்ளது... அவர்களை பத்திரமாக  வீட்டில்  சேர்த்தோம் ..... பயணம்4️⃣ நிஷாத் அஹமது S/O சபீர் அஹமத் வாகன விபத்து காரணமாக மருத்துவமனைக்கு செல்ல வாகனம் இன்றி தவித்த வீட்டிலிருந்து பரிசோதனை செய்ய மின்னுரில் ஊ...

ஆன்மீக செய்தி..எத்தனை முகம் ருத்ராட்சம் அணிந்தால் என்ன பயன்கள் கிடைக்கும்...

Image
.எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா... என்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா... சிவனின் வடிவமான ருத்ராட்சத்தி எத்தனை முகங்கள் உண்டு, அவற்றின் முக்கிய பயன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். rudraksha faces ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள், வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. சிவ பெருமான் தன்னை பொன்னால் அலங்கரிக்காமல் ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் அதிகமாகத் தானே இருக்கும். இங்கு நாம் ருத்ராட்சம் முகம் குறித்தும், எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம் என்பது குறித்தும் விரிவாக பார்ப்போம். சிவபெருமானின் கண் : ருத்ராட்சம் என்பது சிவனின் கண் என போற்றப்படுகின்றது. ருத்ரானான சிவனின் அருளை நமக்கு கொண்டுவருவதற்காக ருத்ராட்சம் அணியப்படுகின்றது. ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது. ருத்ராட்சம் முகம்ங்கள் : ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுக...

தேங்காய் க்கு இன்னும் பல பெயர் உண்டு.....

Image
தேங்காயின் தோற்றமும் அது கோவிலில் உடைக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியமும் இது தான். உலகில் அதிக கோவில்கள் இருக்கும் நாடு இந்தியாதான். இந்து மத சடங்குகளிலும், வழிபாட்டிலும் தேங்காய்கென ஒரு முக்கியத்துவம் உள்ளது. இது பல மத மற்றும் சமூக அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆச்சரியப்படுவதற்கில்லை, இது ஒரு இந்து கோவிலில் மிகவும் பொதுவான பிரசாதங்களில் ஒன்றாகும். தேங்காய்க்கு பல பெயர்கள் உள்ளது, தேங்காய் சமஸ்கிருதத்தில் நரிக்கேலா என்று அழைக்கப்படுகிறது. இது ஸ்ரீஃபாலா அல்லது "நல்ல பழம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாபாலா அல்லது கடவுளுக்கு வழங்கப்படும் பெரிய பழம் என்றும் அழைக்கப்படுகிறது. கோவில்களில் தேங்காய் உடைக்கப்படுவதற்கும், அது பிரசாதமாக வழங்கப்படுவதற்கும் பின்னால் இருக்கும் காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். வேதங்களில் தேங்காயைப் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை. தேங்காயைப் பற்றிய குறிப்புகள் புராணங்களில் இருந்துதான் தொடங்குகிறது. உலகில் முதன் முதலாக தேங்காய் இந்தோனேசியாவில்தான் கண்டறியப்பட்டது. அங்கிருந்து முதலாம் நூற்றாண்டில் தேங்காய் இந்தியாவிற்கு வந்தது தேங...

நெற்றியில் இடும் நாமகட்டியின் பயனும், மருத்துவ குணமும்...

Image
நெற்றியில் இடும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மருத்துவ குணம் இருக்கும். இதனை ஆராய்ச்சி மையங்கள் கருவிகள் இல்லாமல் அனுபவமாகவே கூறியவர்கள் தான் நம் முன்னோர்கள்.. திருநாமம் இடுதல், திருமண் இடுதல் என்பது ஒரு பழக்கம்.. இதனை பெரும்பாலும் வைணவர்கள் தினமும் இட்டுகொல்வார்கள்.. ஆனால் பெரும்பாலும் நம் மக்கள் சனிக்கிழமை , புரட்டாசி தினங்களில் தவறாது வைத்துக்கொள்வார்கள்... நாமக்கட்டி களிமண்ணில் இருந்துதான் தயாரிக்கபடுகிறது... (தெய்வீக நோக்கில் இம்மன் திருமண் என கூறப்படுகிறது) அதனால் தான் இதில் கால்சியம் முக்கியபங்கு வகித்துள்ளது. திருநாமம் இடும்போது கிடைக்கும் கால்சியம் சக்தி, இரத்த ஓட்ட அமைப்பிலும், மூளை செயல்பாடுகளிலும், நோய் எதிர்ப்பு திறனும், இதய துடிப்பு கட்டுப்பாடு என பல நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளது. 120 வயது வரை வாழ்ந்த இராமானுஜர், 101 வயது வரை வாழ்ந்த சுவாமி தேசிகன் ஆகியோர்  வாழ்விற்கு  சட்விக் உணவு கட்டுப்பாடும் (சட்விக் உணவு - தூய அத்தியாவசிய, இயற்கை, மற்றும் எரிசக்தி கொண்ட, சுத்தமான, உணர்வு, உண்மை, நேர்மையான, ஞானம் 'என்று பொருள்) “நாம தர்மம்”  (கால்சியம் மொத்த விளைவு) ஆகியவை...

ஒரு ரூபாய் க்கு சானிட்டைசர் பிரபல நிறுவனம் அறிவிப்பு...

Image
சானிடைசர்களின் தேவை அதிகரித்துள்ளதால், ஒரு ரூபாய்க்கு சிறிய பாக்கெட் சானிடைசர்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கவின்கேர் நிறுவனம், புதிய முயற்சியாக ஒரு ரூபாய்க்கு, சானிடைசர் பாக்கெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.  சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், எளிய மக்களிடையே shampooவை கொண்டு செல்லும் வகையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் 50 பைசா விலையில் shampoo பாக்கெட்டுகளை அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும், சிறிய பாக்கெட்டுகளில் shampooவை அறிமுகம் செய்தன.  தற்போது, CHIK, NYLE போன்ற பிராண்டில், SHAMPOO, எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்வதை தொடர்ந்து, இதே பெயரில், சானிடைசர் பாக்கெட்டுகளையும் ஒரு ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக, சானிடைசர்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு 2 மில்லி அளவில் பாக்கெட்டுகளில் சானிடைசர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கவின்கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதேசமயம் தனது மற்றொறு பிராண்டான NYLEன் பெயரில், 90ML, 400ML, 800ML மற்றும் 5 லிட்டர் என்ற அளவுகளில் சானிடைசர் விற்பன...

தமிழக ஆளுநரை சந்தித்தார்..தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

Image
இன்று (31.3.2020) மேதகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்களை, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சந்தித்து தமிழ்நாட்டில் #CoronaVirus பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

ஓட்டுநர் உரிமம் ,பர்மிட் ஜூன் வரை தள்ளி வைப்பு..மத்திய அரசு

Image
பிப்.1 முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஜூன் 30 வரை செல்லும்..:மத்திய அரசு அறிவிப்பு : சென்னை: பிப்ரவரி 1முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.    போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் மோட்டார் வாகன ஆவணங்கள் புதுப்பிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. ஆவணங்களை செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெளியூர் செல்ல பாஸ் எங்கே பெற வேண்டும்...

திருமணம், இறப்பு, அவசர மருத்துவம் என மூன்று காரணங்களுக்கு மட்டுமே அவசர பாஸ் - பாஸ் எங்கு பெற வேண்டும்...   சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர்  பெரு நகராட்சி ஆணையரிடம் அவசர பாஸ் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.   இதர மாநாகராட்சி பகுதியில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல மண்டல அதிகாரியிடம் அவசர பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரே மாவட்டத்திற்குள் பயணிப்பவர்கள் வட்டாட்சியரிடம்  பாஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  சென்னைக்கு வெளியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமென்றால், எங்கிருந்து பயணம் தொடங்குகிறதோ, அந்த மாட்ட ஆட்சியரிடம் அவசர பாஸ் பெற வேண்டும் என தமிழக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.  நெருங்கிய உறவினர் திருமணம், இறப்பு, அவசர மருத்துவ தேவை ஆகிய மூன்று காரணங்களுக்காக மட்டுமே அவசர பாஸ் வழங்கப்படும் என  கூறப்பட்டுள்ளது.

நூறு கோடி நிதி வழங்கிய வங்கி.....

  கொரோனா நிவாரணம் – 100 கோடி அறிவித்த வங்கி ! கொரொனா நிவாரணத்துக்காக எஸ்பிஐ வங்கி 100 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே ஸ்தம்பித்து போக வைத்துள்ளது. இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சமூகத் தொற்று எனும் மூன்றாம் நிலை பரவலுக்கு இன்னும் உருவாகவில்லை என்பதே ஒரே ஆறுதல். இந்நிலையில் கொரோனா நிவாரணத்துக்காக பிரதமர் மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நிதி கேட்டுள்ளார். இதையடுத்து ரத்தன் டாடா 1500 கோடி ரூபாயும், அம்பானி 500 கோடி ரூபாயும் அளித்துள்ளனர். இதையடுத்து எஸ்பிஐ வங்கி தனது ஊழியர்களின் இரு நாள் சம்பளத்தை பிரதமர் நல நிதிக்காக கொடுத்துள்ளது. 2,56,000 ஊழியர்களின் சம்பளமான 100 கோடி ரூபாயை கொடுத்துள்ளது..     

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி யில் தயார் நிலையில் ஆயிரம் படுக்கை வசதிகள்...

Image
திருப்பத்தூர் மாவட்டத்தில்  பள்ளி கல்லூரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரம் படுக்கைகளுடன் தயார்  நிலையில் தற்காலிக மருத்துவமனைகள்....                   மாவட்ட ஆட்சியர் 

கேபிள் டிவி துண்டித்தால் ...அமைச்சர் கடம்பூர் ராஜீ எச்சரிக்கை...

Image
  பணம் கட்டவில்லை என்பதற்காக கேபிள் டிவி இணைப்பை துண்டித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.என அமைச்சர் கடம்பூர் ராஜீ அறிக்கை விடுத்துள்ளார்.  -

திருப்பத்தூர் மாவட்ட எஸ் பி கருணை இல்லத்தில் குழந்தைகளுக்கு உதவி...

Image
  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தோல் கையுறை தயாரிக்கும்  தொழிற்சாலையில் கடந்த 6 வருடமாக பணிபுரிந்துவரும் மேற்கு வங்கம்(WEST BENGAL) பகுதியை சேர்ந்த 77 பேருக்கு அவர்கள் தங்கியுள்ள  தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் சார்பில் பிஸ்கட் அரிசி பழங்கள் முக கவசம் போன்ற பொருட்களை வழங்கப்பட்டது அதேபோல் பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள சரணாலயம் கருணை இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு மற்றும் முதியவர்களுக்கு அரிசி பிஸ்கட் பழங்கள் முக கவசம்  சனிடைசர் போன்ற பொருட்களை வழங்கினர்

இராணிபேட்டை யில் கபசுரக்குடிநீர் வழங்கிய சமூக ஆர்வலர்

Image
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சமூக ஆர்வலர் ஜெய சங்கீதா அசேன் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கினார். செய்தி. சுரேஷ்குமார் இராணிபேட்டை

மஞ்சளில் பிள்ளையார் வைப்பதன் பலன்கள்.....

Image
    1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்  2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்  3. புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்  4. வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.  5. உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார்.  6. வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்  7. விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.  8. சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.  9. சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.  10. வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.  11. வெண்ணெயில் பிள...

எட்டாம் நாள் யுத்தம்...நிம்மதிஆகட்டும் நாடு....கவிஞர் ச லக்குமிபதி...

Image
                 !!நிம்மதி ஆகட்டும்நாடு!         ஸ்ரீ ராமா நீ நாமம் எந்தருசிரா என்று அனுபவித்து பாடுகிற பங்குனி மாதம் இது! ஸ்ரீ ராமாநவமி வருகின்ற வேளை இது! நம்ம நிலைமையினை சொல்லுகின்ற நேரமிது! சின்னத்திரையில் பொழுது போக மீண்டும் ராமாயணம் ஒளிபரப்பாம்.. கூடவே கோசலை ராமனை கும்பிட்டு கோரிக்கை ஓன்று வைப்போம்!! சின்ன வயதில் ராமர் வீதியில் நடந்து வரும் போது வழியில் பார்ப்பவர் யாரையும் நலமா என்று கருணை ததும்ப விசாரித்து மகிழ்வாராம்! யுத்த தர்மம் காத்த கோதண்டராமா! இப்போது பூமியெங்கும் ஒருவித புதுயுத்தம்! எங்களைக் காப்பாற்ற கருணை காட்டு! இராவணன் களத்தில் இல்லை அரக்கர்கள் அதிரடியாய் போர் புரிய அருகில் இல்லை! ஆனாலும் எதிரி எங்கிருந்தோ கொண்டு மக்களை கொன்று குவித்து கும்மாளம் இடுகிறான்! ராக்கெட் இருக்கிறது! கண்டங்கள் தாவும் அண்டங்களை அழிக்கும் ஏவுகணைகள் இருக்கிறது! கண்ணிமைக்கும் நேரத்தில் கொன்று குவித்து கண்ணிமைக்கும் நேரத்தில் திரும்பி விடும் விமானம் இருக்கு ஆனால்... சீதா ராமா! எங்களை இம்சித்து வரும் கொரானாவின் கொட்டத்தை யாராலும்...

முதியோர் உதவித் தொகை வீடு தேடி வருகிறது...தமிழக முதல்வர் அறிவிப்பு..

  வீடுதேடி வரும் முதியோர் உதவித்தொகை: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு வீடுதேடி வரும் முதியோர் தொகை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த சில நாட்களாக அமலில் இருந்துவரும் நிலையில் வங்கிகளில் வேலை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே இயங்கி வருகின்றன வீடுதேடி வரும் முதியோர் தொகை வீடுதேடி வரும் முதியோர் தொகை இந்த நிலையில் நாளை மாதத்தின் முதல் நாள் என்பதால் முதியோர் உதவித்தொகை மற்றும் பென்சன் தொகை வாங்குவதற்கு வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து சேரும் என்றும் இதற்காக வங்கிகளுக்கு அவர்கள் வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் மூலம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தல் செய்யும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார் .மேலும் வட்டாட்சியர் வங்கி மற்றும் தபால் ஊழியர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஆட்சியர்களுக்...

ஆற்காடு எம் எல் ஏ பொது மக்களுக்கு அறிவுறுத்தல்....

Image
  ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன்  நகராட்சியில் அமைந்துள்ள சந்தையில், கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார் பின்னர் நோய் தடுப்பு முன் ஏற்பாடுகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார் ..

ரூ.116 கோடி நிதி வழங்கிய துணை ராணுவ படையினர்.....

Image
பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு துணை ராணுவப்படையினர் ரூ.116 கோடி வழங்கினர் பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு, துணை ராணுவப்படையினர் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்கி உள்ளனர்.        பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு, துணை ராணுவப்படையினர் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்கி உள்ளனர். 116 கோடி ரூபாய்க்கான காசோலையை துணை ராணுவப் படை அதிகாரிகள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினர். அதற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இராணிபேட்டை மாவட்ட எஸ் பி...தன்னார்வலர்க்கு பாதுகாப்பு ....

Image
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் காவல்துறைக்கு உதவியாக செயல்பட்டு வரும் தன் ஆர்வலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவரை கொண்டு தயார் செய்யப்பட்ட அமிர்தவல்லி துளசி கசாயத்தை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம்  வழங்கினார்.    செய்தி:சுரேஷ்குமார் , இராணிபேட்டை  

வாலாஜா மகளிர் கூட்டமைப்பு சார்பில் நிதி...மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

Image
வாலாஜா வட்டம் நவ்லாக் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் செயலாளர் திருமதி ஜெயந்தி மற்றும் பொருளாளர் வேதவல்லி ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் பத்தாயிரம் காசோலையாக வழங்கினார்கள்            செய்தி:சுரேஷ்குமார்   , இராணிபேட்டை  

மேல்விஷாரம் பகுதியில் காந்தி எம் எல் ஏ திடீர் ஆய்வு .....

Image
  இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தி  கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க தடுப்பு பணி குறித்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மேல்விஷாரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேல்விஷாரம் நகராட்சி ஆணையாளர் அவர்களுடன் மேல்விஷாரம்  நகரத்த்தில்கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்  கலந்தாலோசித்து நோய் தடுப்பு முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது  தொழிலதிபர்கள் ராணிடெக் சேர்மன் ரமேஷ்கே.எச்.குரூப்ஸ் கலிமுல்லாஇப்ராஹீம்  ராணி டெக் ஜபருல்லா சௌக்கார் முன்னாபாய்   மற்றும் தி.மு.க.நகர செயலாளர்  ஏ.மன்சூர் பாஷா மற்றும் அனைத்து கழகத்தினர் உடனிருந்தனர். மேலும்,  வாலாஜாப்பேட்டை  நகராட்சி ஆணையாளருடன்  கொரோனா     தொற்று  நோய்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்  கலந்தாலோசித்து நோய் தடுப்பு முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது  தி.மு.க.நகர செயலாளர்  த.க.பா.புகழேந்தி  இளைஞரணி  உமர் மற்றும் அ...

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் கே சி. வீரமணி ஆய்வு கூட்டம்...

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்களும் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நீலோபர்கபீல் அவர்களும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பிற்க்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகள் மற்றும் துறை சார்ந்த அனைத்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்.இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஜெ.பார்த்தீபன் உள்ளனர். (30-௦3-2௦2௦) ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..( 9150223444 )

முன்னாள் துணைவேந்தர் எஸ். வி.சிட்டிபாபு காலமானார்....

Image
தமிழகத்தில் முதன் முறையாக அஞ்சல் வழிக் கல்வியை அறிமுகம் செய்தாா் முன்னாள் துணைவேந்தா் எஸ்.வி.சிட்டிபாபு காலமானாா் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பேராசிரியா் எஸ்.வி. சிட்டிபாபு (100) ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் காலமானாா். அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். அவரது மனைவி சகுந்தலா கடந்த 2001-ஆம் ஆண்டு காலமானாா். பேராசிரியா் சிட்டிபாபு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வரலாறு பாடப்பிரிவில் பி.ஏ (ஹானா்ஸ்) பட்டம் பெற்றாா். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றாா். தொடா்ந்து கல்விப் பணியில் ஈடுபட்டு வந்த அவா், பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பதவி வகித்தாா். அதைத் தொடா்ந்து மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் துணைவேந்தராகப் பணியாற்றினாா். பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய காலகட்டத்தில், கல்வி மற்றும் நிா்வாகத்தில் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டாா். மாநில உயா்கல்வி மன்றத்தின் முதல் துணைத் தலைவராகப் பதவி வகித்தாா். தொடா்ந்து அவா் கல்விக்காக பல்வேறு பணிகளை செய்து வந்தாா். மேலும் தமிழகத்தில் வரலாற்றின் முக்கியத்துவத...

மகாவிஷ்ணு வை கணவனாக அடைய விரும்பினால்.....

Image
ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார். "என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று சாபமிட்டாள். அந்த கல்தான் சாளக்கிராம கல். உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி.   புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு. "அஞ்சாதே துளசி! எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது. க்ருஷ்ணஅவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன. என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான். என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய். என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன். நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன்,...

திருப்பத்தூர் பகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு....

Image
. மாவட்ட  ஆட்சியரின் துரித செயல்பாடு..  திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவை  அண்ட விடமாட்டோம் . அமைச்சர் கே.சி.வீரமணி... திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட், அம்மா உணவகம், உழவர் சந்தை, அரசு மருத்துவமனை ஆகியவற்றை அமைச்சர் கே சி வீரமணி ஆய்வு நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரையில் திருப்பத்தூர் பகுதியில் எந்த நபருக்கும் கரோனா வைரஸ் தாக்கம் இல்லை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அதிவேகமாக செயல்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கி மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகிறார். எனவே திருப்பத்தூர் மாவட்ட மக்கள் வீட்டைவிட்டு அனாவசியமாக வெளியே வராமல் ஒத்துழைப்பை கொடுத்தால் ஒரு நபருக்கு கூட கரோனா வைரஸ் வராது என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புப...

இராணிபேட்டை காந்தி எம் எல் ஏ முககவசம் இலவசமாக வழங்கினார்...

Image
திமுக கழக தலைவர்  அவர்களின் ஆனைக்கினங்க, இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மக்கள் சேவகர் ஆர்.காந்தி.எம்எல்ஏ அவர்கள் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் வாலாஜாபேட்டை நகரத்தில் கொரோனா  தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னிட்டு 900  முககவசம் வழங்கினார் ...இதில் நகர செயலாளர் த.க.பா.புகழேந்தி இர்பான்ExMc இளைஞரணி உமர் உடனிருந்தனர்...செய்தி. சுரேஷ்குமார், இராணிப்பேட்டை.

ஏழாம் நாள் யுத்தம்...அருட் கதிர்களை அள்ளி வீச அழையுங்கள்...கவிஞர் ச லக்குமிபதி...

வைரஸின் வீரியம்  குறையட்டுமே!! எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது கேட்பினும் அங்கெங்கிருந்து அருள. அந்த அருட்பெருஞ்ஜோதி! ஆண்டவருக்கே அன்பாய் கட்டளையிட்டாய் வள்ளல் பெருமானே! இன்று  எம் மக்கள் கோவிட் வைரஸ் கொடுமைக்கு ஆளாகி அல்லல் படும் அவலம் எங்கும்! இது கட்டாயம் மறைய வேண்டும்! மறைபொருளாய் இருக்கும் கனகசபை யான் நீ அழைத்த போதெல்லாம் அருகில் வந்து நின்றாரே! கேட்டதையெல்லாம் கொடுத்தாரே! அவரை எங்களுக்காக மீளவும் அருட்பெருஞ் ஜோதி அருட்கதிர்களை அள்ளி வீச அழையுங்கள்! வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி வருந்திய வடலூர் பெருமானே! செய்வதரியாது தவிக்கின்றோம்! எத்தனை நாள் கொரானா கொடுமைநீடிக்கும்? சூரிய நாராயண பெருமாளை நாங்கள் வெளியில் வந்து கும்பிடுவது எக்காலம்? ஊரடங்கில் எம்மக்கள் ஒத்துழைத்தால் போதும்! அடங்கிப் போவான் கோவிட் அரக்கன்!!ஆருயிருக்கெல்லாம் அன்பு செய்ய வரம் கேட்ட வள்ளல் பெருமானே! உன்னை வணங்கி நின்று வேண்டுகின்றோம்! கொரானா இரண்டாம் ஸ்டே‌ஜில் முடங்கட்டுமே ! வைரஸ்ஸின் வீரியம் முற்றிலும் அடங்கட்டுமே! மக்கள் மனம். விடிந்தது என்று முழங்கட்டுமே! மருதூர் மாணிக்கம் நமக்கு ஆசி    வழங்கட்ட...

தமிழக முதல்வர் சிறப்பு பேட்டி....

தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி. தமிழகத்தில் கொரோனா பாதித்த 5 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - முதலமைச்சர்.   கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது தமிழகத்தில் கொரோனாவுக்கு தனி சிகிச்சை அளிக்க 17,089 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன தமிழகத்தில் 3018 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன -முதலமைச்சர் ஒன்றரை கோடி முகக்கவசங்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளன- முதலமைச்சர் *கொரோனா அறிகுறி இருக்கும் நபர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் -முதலமைச்சர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு - முதல்வர் பழனிசாமி சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல, நன்மைக்காகவே - முதல்வர். இது போன்ற ஒரு சவாலான நிலையை தமிழக அரசு எதிர்கொண்டது இல்லை - முதலமைச்சர்

சென்னை யில் ஏழைகளுக்கு அரிசி வழங்க உதவிய காவல்துறை....

Image
ஏழை எளிய மக்களுக்கு 340 அரிசி மூட்டைகளை வழங்க உதவிய காவல்துறையினர்     சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த் பாபு அவர்கள் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரின் உதவியுடன் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிட ஏற்பாடு செய்தார். இதனையடுத்து 29.03.2020-ம் தேதியன்று திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் திரு. தர்மராஜன் இ.கா.ப அவர்கள் மற்றும் உதவி ஆணையர் திரு. முத்துவேல் பாண்டி அவர்கள் சுமார் 340 அரிசி மூட்டைகளை வழங்கிட அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் திருநங்கையினர் நன்றி தெரிவித்து பெற்று சென்றனர்.

ஊரடங்கில் உறங்காத விழிகள்..காவல் துறையின் பனிகள்...

Image
ஊரடங்கில் உறங்காத விழிகள்...காவல் துறையின் களப்பணி..! கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையின் பணி முக்கியமானது. ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய சாலைகளில் காவல் காக்கும் பணியோடு, விழிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபடும் தமிழக காவல்துறை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... தமிழகத்தில் ஒவ்வொரு பேரிடர் காலங்களின் போதும் காவல்துறையின் பங்களிப்பு, "காவல் துறை உங்கள் நண்பன்" என்பதற்கு அர்த்தம் சேர்க்கும் அளவிற்கு இருக்கும்.  ஊரடங்கில் ஊரே அடங்கிவிட உணவு அளிக்க ஆள் இல்லாத சாலையில், காக்கைக் கூட்டத்திற்கும், நாய்களுக்கும் தினமும் உணவு அளித்து வருகின்றனர் போக்குவரத்து போலீசாரான சேகரும், வெங்கடேசனும். கொரோனா அச்சத்தில் தமிழ்நாடே ஊரடங்கு உத்தரவில் முடங்கிவிட, களத்தில் இறங்கி காவல் காக்கும் பணிகளை மட்டுமே இல்லாமல் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவுக்கு அடங்காத நபர்களை, மற்ற மாநில போலீசார் லத்தியால் முட்டியை பெயர்க்க, நம்ம ஊர் போலீஸோ கையெடுத்து வணங்கி "உங்கள் காலில் விழுகிறேன், விளைவுகள் அறியாமல் வெளியில் வராதீர்கள்" என்று உருக, ம...

ஏப்ரல் 4. ஒரே நேரத்தில் தீபம் ஏற்றி வழிபடுவோம்......

Image
தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் வழிபாடு ! ( சைவ நெறியும் , ஆன்மீகமும் பிடிக்காதவர்கள் இதை தொடர்ந்து படிக்க வேண்டாம் ) வருகின்ற ஏப்ரல் 4 ம் தேதி ஏன்  நாம் கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்? வருகின்ற 04/04/2020 அன்று தமிழ் தேதியும் பங்குனி 22  ஆகும். எண் கணித ஜோதிடம் எனும் numerology  ன் படி 4/4/2020 அன்று , தேதி    :-  4 மாதம் :-   4 வருடம்:-  4 (20+20=40 :- 4+0=4) பங்குனி 22 :- 4 (2+2=4) ராகுகாலம்:- 4 ( 9 - 10.30 :- 9 +10.30=22 :- 2+2=4) என அன்று அனைத்தும் 4 ம் எண்ணிற்கு உரிய ராகுபகவானின் ஆதிக்கத்தில் வருகிறது! ராகுபகவானானது, சூரினையே சில நிமிடம் விழுங்கும் மிக வலிமையான   சர்ப்ப (பாம்பு ) கிரகம் ஆகும். விஷக்கிருமியான கொரனாவானது , சீன மக்கள் பாம்பு கறி உண்டதால் பரவியதாக சொல்லப்படுகிறது. சர்ப்ப விஷமான கொரனா  வைரஸ் , சர்ப்ப கிரகமான ராகுவின் ஆதிக்கத்தின் கீழ் வரும் 4/4/2020 அன்று , அன்றைய  விஷ காலமாக கருதப்படும் ராகுகாலமான காலை 9 முதல் 10.30 வரை அதி தீவிரம் அடையலாம்  என எண்கணித ஜோதிட ரீதியாக  நம்பப் படுகிறது. திருப்பாற் கடலில் அமிர்தம...

வீட்டு வாடகை கேட்க கூடாது. மத்திய அரசு...

Image
            மாணவர்கள், தொழிலாளர்களிடம் 1 மாதத்திற்கு வாடகை கேட்க கூடாது.. உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு. டெல்லி: மாணவர்கள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரிடம் இருந்து ஒரு மாதத்திற்கு வாடகையை கேட்கக் கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு மீறி கேட்டாலும் வீட்டை காலி செய்ய சொன்னாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் ஏழை மக்கள், புலம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள், உணவுகளுக்கான ஏற்பாடுகளை மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் உறுதிப்படுத்த வேண்டும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசோ அல்லது யூனியன் பிரதேச அரசோ அவர்களை சோதனை செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். இதற்காக தற்காலிக தங்குமிடங்கள் அமைக்க வேண்டும். நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களின் முழு ஊதியத்தை எந்த பிடித்தமும் செய்யாமல் ...

சிவகங்கையில் 800ரேஷன் அட்டைக்கு...சேக்கப்பசெட்டியார்...

Image
      தர்மம் தலைக்காக்கும் ஒக்கூர் சேக்கப்ப செட்டியார்,நாகம்மை ஆச்சி தங்கள் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தில் உள்ள  800 ரேஷன் கார்டுகளுக்கும் தலா 10 kg அரிசி உபயமாக அளித்துள்ளார்கள்.. பணம் யாரிடமும் இருக்கலாம் ,இல்லாமலும் இருக்கும். இந்த நேரத்தில் உதவி செய்வதை அப்பகுதி மக்களும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துவருகிறார்கள்   

ஆயிரம் ரூபாய் டோக்கன் வீடு தேடி வருகிறது. தமிழக அரசு...

Image
கொரோனா சூழலில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்அறிவுறுத்தப்பட்டுள்ளது மருந்தகங்கள், மளிகை கடைகள், பால் வியாபாரம் போன்றவை தொடர்ந்து நடந்து வருகிறது.இதனிடையே ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அரிசி ரேஷன் கார்டு காரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஏப்ரல் மாதத்திற்கு இலவசமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த நிவாரண உதவிகள் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது அதன்படி நிவாரண உதவித் தொகையான ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் அனைத்தும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. நிவாரண பொருட்கள் வழங்கும் நேரங்களில் ரேஷன் கடைகளில் மக்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் தெரு வாரியாக டோக்கன் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன் அச்சிடப்பட்டு வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வாகன வசதி இருந்தால் நேரடியாக வீடுகளுக்கே சென்று அந்த த...

வாடகைக்கு குடியிருப்போர் க்கு..முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..

Image
டெல்லியில் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வாடகை பணம் கேட்டு தொல்லைத் தரவேண்டாம் வாடகை தரமுடியாமல் இருப்பவர்களுக்கு அரசே மூன்று மாதங்களுக்கு வாடகை தொகையை தரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.இதனால் வாடகைக்குக் குடியிருப்போர் மத்தியில் ஒரு ஆருதலா இருக்கிறது என்பதை பேசி வருகின்றனர்.இதேபோல் பிற மாநிலங்களின் முதல்வர்கள் அறிவிப்பார்கள்,என எதிர்பார்க்கிறார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது..

விழுப்புரத்தில் ஆதரவற்று இறந்தவரை..நல்லடக்கம் செய்த காவல்துறையினர்....

Image
  விழுப்புரம் மாவட்டம்  அனந்தபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுணாம்பூண்டி கிராமத்தில்,  உறவினர்கள் இன்றி ஆதரவற்று இறந்து கிடந்தவரை, கொராணா வைரஸ் காரணமாக, பொதுமக்கள் யாரும் தூக்க முன் வராத நிலையில், அனந்தபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர்கள் உதவி செய்து, இறந்தவரின் இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நல்லடக்கம் செய்தனர். நன்றி.. விழுப்புரம் மாவட்ட காவல் துறை.

கண்ணீர் விடும் தர்பூசணி விவசாயிகள்.....

Image
.                               கண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்..! கொடியில் பழுத்து அழுகும் அவலம். கொரோனா பீதி மற்றும் காய்கறி ஏற்றும் வாகனங்கள் இருமடங்கு கட்டணம் கேட்பதாலும், ஊரடங்கால் வியாபரிகள் கொள்முதல் செய்யாமல் தவிர்ப்பதாலும் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்களை அறுவடை செய்ய இயலாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த காட்டுக்கரணை கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் தர்பூசணி பயிரிட்டிருந்தனர். கடந்த பிரவரி மாதம் முதலே அறுவடைக்கு தயாரான தர்பூசணி பழங்கள் டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதால் ஏப்ரல், மே மாதங்களில் நல்ல விலை கிடைக்கும் என்று நம்பி இரவு பகலாக தண்ணீர் பாய்ச்சி வந்த விவசாயிகளின் தலையில் கொரோனா பீதியும், ஊரடங்கு உத்தரவும் பேரிடியாக இறங்கி உள்ளது. ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் செல்வழித்து தர்பூசனியை பயிரிட்டு பார்த்த விவசாயிகள், பலனை அனுபவிக்க இயலாமல் கடும் அதிச்சியில் தவித்து வருகின்றனர். இங்கிருந்து சென்னை மட்டு...

இராணிபேட்டையில் 24மணி நேரம் சேவை மையம்..கலெக்டர் நடவடிக்கை...

Image
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா  வைரஸ் COVID -19 பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின்பேரில் அணைப்பட்டி மாவட்டத்தில் 24  × 7 என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா  வைரஸ் தடுப்பதற்காக இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் இன்று முதல் ஒரு மனநல மருத்துவர் கட்டுப்பாட்டு அறையில் உள்ள குழுவுடன் இணைந்து செயல்படுவார்   7708686024 என்ற கைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது..செய்தி. சுரேஷ்குமார் இராணிபேட்டை 

பாரதபிரதமர் வானொலி காட்சி மூலமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டார்....

Image
""வாழ்வா சாவா போராட்டம்- மக்களிடம் மன்னிப்பு  கேட்கிறேன் - மோடி பேச்சு!!!!! வாழ்வா சாவா போராட்டத்தில் நான் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வானொலி மூலம் மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசி வருகின்றார். இன்று பேசிய பிரதமர் கொரோனா குறித்து பேசினார். அதில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் எடுத்த இந்த முடிவால் என் மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிகிறேன்.கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம். மருத்துவர்கள் செவிலியர்கள் பணி என்பது சிறப்பானது என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். நோய் என்பது ஆரம்ப காலத்திலேயே தடுக்கப்பட வேண்டிய ஒன்று அதைத்தான் தற்போது இந்தியா செய்து கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற சில கட்டுப்பாடுகள் அவசியம். அனைவரும் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும்.என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தொகுப்பு ஒருங்கிணைந்த வே லூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார...

வாலாஜா நகராட்சி ஆணையாளரிடம் காந்தி எம் எல் ஏ ஆலோசனை....

Image
கழக தலைவர்  அவர்களின் ஆனைக்கினங்க, இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி.எம்எல்ஏ அவர்கள் வாலாஜாப்பேட்டை நகராட்சி ஆணையாளர் அவர்களுடன் வாலாஜாப்பேட்டை நகரத்தில் கொரோனா  தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்  கலந்தாலோசித்து நோய் தடுப்பு முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்....இதில் தொழிலதிபர் ராணிடெக் சேர்மன் PRC.ரமேஷ் நகர செயலாளர் த.க.பா.புகழேந்தி இளைஞரணி உமர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்...செய்தி. சுரேஷ்குமார் இராணிபேட்டை 

இராணிபேட்டை பகுதியில் காவலருக்கு உணவு வழங்கிய காந்தி எம்எல்ஏ அவர்கள்....

Image
கழக தலைவர் அவர்களின் ஆனைக்கினங்க, இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி.எம்எல்ஏ அவர்கள் இராணிப்பேட்டை நகரத்தில் *கொரோனா*  தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தொடர்ந்து 3வது நாளாக  மதிய உணவு இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்  ஆர்.காந்தி.எம்எல்ஏ அவர்கள் வழங்கிவருகிறார் இன்று மதிய உணவாக பிரியாணி வழங்கினார் இதில் தொழிலதிபர் PRC.ரமேஷ் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் நவல்பூர் NB.சங்கர் லெதர்ஸ் பிரகாஷ் நாராயணன் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்...செய்தி. சுரேஷ்குமார் இராணிபேட்டை 

மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார் வேலூர் எம்பி கதிர்ஆனந்த்....

Image
  கொரானா தோற்று வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி ரூபாய் நிதியும் மற்றும் தி.மு.க சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து ரூபாய் ஐம்பது லட்சத்திற்கான காசோலையினையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் வழங்கினார்.      செய்தி. வேலூர் நண்பன் இதழ்  

ஆறாம் நாள் யுத்தம்..மனதுவை மகாதேவா....கவிஞர் ச.லக்குமிபதி..

ஆலமுண்டு அமரர்க்கு அருள் புரிந்த அம்மையப்பா! சர்வேஸ்வரா! சகலருக்கும் படியளக்கும் பரமேஸ்வரா! பசுக்களின் பதி நீதானே! அப்பனே!! தென்நாடுடைய சிவனே! நீ தானே எல்லா நாட்டுக்கும் இறைவன்! இங்கு எங்கும் கொராண ஓலம்! கோவிட்19 ன்  கொடுங்கோலாட்சி! அவனை கேட்பாரில்லை! மேய்ப்பார் இல்லை! தறிகெட்டு ஆடுகின்ற வைரசின் பேயாட்டம் ஓய்ந்த பாடில்லை!! அச்சப்படுத்தி முப்புரங்களின் அரக்கர் தலைவர்கள்  மக்களை அழித்தபோது சிரிப்பாலே அன்று அழித்தாயே!சடையானே! சூலப்படையானே!! கல்லுக்குள் தேரைக்கும் உணவளிக்கும் நீலகண்டனே! நஞ்சு பரவி கொண்டிருக்கிறது!! இன்று எமக்கு தாயும் தந்தையும் ஆன மருந்தீஸ்வரா  எங்களை உடன் வந்து காப்பாற்று!வைத்தியம் பார்க்க விரைந்து வா வைத்தீஸ்வரா!! உன்னால் இந்த கொரானா பிடியிலிருந்து எங்களை எளிதாக காப்பாற்ற முடியும்!மாதவம் செய்த தென்திசை மண்டியிட்டு கேட்கிறது ..... மனது வை மகாதேவா!!  வாரியார் தாசன் கவிஞர் ச.லக்குமிபதி வேலூர் -9

இராணிபேட்டை வெளிநாட்டை சேர்ந்தவர்களை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு...

""ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் கண்கணிப்பு!!!!!! ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த ஒருமாத காலத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ள 599 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு (HOME QUARANTINER) மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார துறையின் கீழ் இயங்கும் 36 குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் வீட்டிலேயே தனிமைப்படுத்தபட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் கட்டாய தனிமையில் அடைக்கப்படுவார்கள் . மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட வீட்டிலேய கைது 18 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டன. நாளை முதல் தேவையற்ற முறையில் சுற்றித்திரிவேர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும்  மாவட்டம் முழுவதும் 600 தன்னார்வலர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகத்திற்க்கு உதவ முன்வந்துள்ளனர் இவர்கள் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவார்கள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்வியதர்ஷினி தெரிவித்தார்...

கொரோனா ப். பரவலை தடுக்கும் குறள்....கவிஞர் புனிதன்..

கொரோனாப் பரவலை  தடுக்கும் குறள் சமீபத்தில் கோவிட்-19 என்ற கொடிய உயிர்கொல்லி வைரஸ்,  கொரோனா என்ற தொற்று நோயைப் பரப்பி, உலக மக்களை அச்சுறுத்தி, ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய, இந்திய திருநாட்டிலும் புகுந்துள்ள இந்த கொரோனா தொற்று  நோய், நாடுமுழுவதும் மெல்ல மெல்ல பலரிடையே பரவி வருவது நம்மிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.   இந்த பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் வருகிற ஏப்ரல் 14 வரை ஊரடங்கை அமுல்படுத்தியிருந்தாலும், பலரும் இந்த கொரோனாவுக்கு அஞ்சாமல், அதன் வீரியத்தையும், கொடிய விளைவுகளையும் உணராமல் வெளியே சுற்றி வருகின்றனர்.   இந்த நேரத்தில் திருவள்ளுவர் நமக்கு உதவி செய்கிறார். ஆம் அவர் கூறிய குறள் ஒன்று இந்த கொடுமையான சூழலை மாற்றும் என்றும், அக்குறளின் படி நாம் நடந்தால் இந்த கொரொனா பரவலை தடுக்க முடியும் என்றும், இந்த சூழலுக்கு அக்குறளை பொருத்தி கூற விரும்புகிறேன், " அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை" ஆரிருள் உய்த்து விடும்                                    ...

இந்தியா வுக்கு 2.9மில்லியன் டாலர் நிதி ஒதுக்கிய அமெரிக்கா....

Image
இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கிய அமெரிக்கா கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் உட்பட, 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.  இந்தியாவிற்கான இந்த நிதியுதவி, ஆய்வகங்களை உருவாக்கவும், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியவும், தொழில்நுட்ப வல்லுநர்களை தயார்நிலையில் வைத்திருப்பதற்காகவும் வழங்கப்படுகிறது.  மேலும், அண்டை நாடுகளான இலங்கைக்கு 1.3 மில்லியன் டாலர், நேபாளத்திற்கு 1.8 மில்லியன் டாலர், வங்கதேசத்திற்கு 3.4 மில்லியன் டாலர், ஆப்கானிஸ்தானிற்கு 5 மில்லியன் டாலர் வரை நிதியுதவி அறிவித்துள்ளது.

பிறந்த நாள் வாழ்த்து மடல்.....

Image
இன்று பிறந்த நாள் காணும் வேலூர் தோட்ட ப்பாளைத்தின் நாயகன் கதிர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். மென் மேலும் வளர்ச்சி கான வேலூர் நண்பன் இதழ் சார்பில் வாழ்த்துக்கள்....படம். பிர சாந்த் வேலூர் நண்பன் இதழ் 

அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை....

Image
மக்களைப் பாடாத வள்ளல் பெருமான்:-  வள்ளலார் இறைவனை அல்லாது மக்களைப் பாடாத பெருமகனார், அவரிடம் ஒருமுறை கந்தசாமி  முதலியார் என்பார் தாங்கொணா வறுமையினால் அடிகளிடம் அணிகி எனது வறுமையை நீக்கக் கொள்ளும் பொருட்டாக சுவாமிகள் சில பிரபுக்களுக்கு சீட்டுக் கொடுத்தருள வேண்டும் என வேண்டினார். வள்ளலாரும் அவரை நோக்கி  "ஏட்டாலுங் கேளய லென்பாரை நான் சிரித்து என்னை வெட்டிப்  போட்டாலும் வேறிடம் கேளேன், என்னானைப் புறம் விடுத்துக்  கேட்டாலும் என்னை யுடையா னிடஞசென்று  வாயுறை பாட்டாலுஞ்   சொல்லி நிறுத்து வனே." என்று திருப்பாடல் கூறி நாம் எதற்கும் எல்லாம் வல்லராகிய அருட்பெருஞ்ஜோதி இறைவனையே வேண்டுவமல்லது.  இவ்வுலக மாந்தரை மதித்து ஏற்கமாட்டோம். நீரும் அவ்வழியே பற்றி அவனருளால் உமது வறுமை சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும் என்று உபதேசித்து அனுப்பினார்.  அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி ! செய்தி..வேலூர் நண்பன் இதழ்  

மார்ச் 28.வரலாற்றில் வேதாத்திரி மகரிஷி நினைவு தினம்...

Image
வரலாற்றில் மார்ச் 28 அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி நினைவு தினம்  அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் நாள் கூடுவாஞ்சேரியில் பிறந்தார். இவர் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பணியாற்றிய பெரியார்.  Maharishi established in. 1958 wcsc .The primary aim is  to attained through yoga.truth, anmigam. தனது சகோதரியின் மகளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.  நெசவுத் தொழிலில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை தொடங்கினார். இருப்பினும் ஆன்மிகத் தேடலில் அளவற்ற நாட்டம் கொண்டிருந்தார்.  சித்தர்களின் ஏராளமான நூல்களைப் பயின்று தன்னை பற்றி அறிதல் முயற்சியில் அகத்தாய்வு முறையை மேற்கொண்டார்.  யோகம் தியானம் போன்ற ஆன்மீகத் தேடலின் விளைவாக 35வது வயதில் ஞானம் பெற்றார்.தன்னுடைய கருத்துக்களை எழுத்துக்களின் மூலமாகவும் உரைகளின் மூலமாகவும் ஆன்மிகத்தை பரப்பினார்.  மக்கள் மகிழ்ச்சியோடு வாழும் வழிமுறைகளை ஆராய்ந்து மனவளக்கலை ஆன்மிகத்தை வளர்த்தார். 2006 ஆம் ஆண்டு 93வது வயதில் கோயம்புத்தூரில் மறைந்தார்.  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! செய்தி வேலூர் நண்பன் இதழ்    

தினம் ஒரு வெற்றிலை சாப்பிட்டால்...

Image
தினம் ஒரு வெற்றிலை போதும்,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு மருந்து இல்லை என்று சொல்லிவரும் நிலையில், சித்த வைத்தியர்கள் மருந்து இருக்கிறது என்று தமிழ்நாடு ஆயுஷ் மருத்துவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த டாக்டர். குரு செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் மருத்துவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் பேசியதில், ‘‘கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் தொண்டையிலுள்ள கிருமிகளைக் கொல்வதுதான் இதற்குத் தீர்வாகும். கொரோனா வைரஸ் கிருமிகளைக் கட்டுப்படுத்துவதில் நில வேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடு தொடா மணப்பாகு ஆகிய மருந்துகள் சிறப்புற பயனளிக்கிறது. இந்த மூலிகைகள் காய்ச்சல், சளி, இருமல், உள்ளிட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சரி செய்யும். இவை தவிர கொரோனா வைரஸ் கிருமிகளிலிருந்து தப்பிக்க தினசரி ஒரு வெற்றிலையில், ஒரு மிளகு, ஒரு கிராம்பு வைத்து மென்று தின்றால் தொண்டை பாதுகாப்பாக இருக்கும். மேலும், அடிக்கடி உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது, மஞ்சள் நீரில் ஊற வைத்த கைக்குட்டையைப் பயன்படுத்துவது, குழந்தைகள் உள்ள வீடுகளில் படிகாரம், உப்பை நீரில் கலந்து தரை மற்றும் பொருட்களைத...