அறநூல் போட்டிகளில் கலந்து கொண்ட தேவகோட்டை மாணவர்கள்

தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு சென்று அறநூல் போட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்...


 


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் பள்ளியில் இருந்து  காரைக்குடியில் போட்டி நடைபெறும் பள்ளிக்கே நேரடியாக சென்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோர் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.தமிழ்நாடு அரசு பேருந்து இயக்கத்தின் தேவகோட்டை கிளை மேலாளர் மணிவண்ணன்,காரைக்குடி அரசு போக்குவரத்துக்கு கழக வணிக பிரிவு துணை மேலாளர்  நாகராஜன் , நடத்துனர் விஜயகுமார் ஆகியோர் வாகனம் நல்ல முறையில் வந்து சேர உதவிகள் செய்தனர்.இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இப்போட்டிகளில் தமிழ்நாடு அரசு தனி பேருந்து மூலமாக தேவகோட்டையில் இருந்து காரைக்குடி சென்று பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் மாணவர்கள் மறந்து போன தமிழ் அறநூல்களான ஆத்திசூடி,


கொன்றைவேந்தன்,வெற்றிவேற்கை,மூதுரை ,நல்வழி,நீதிநெறி,நன்னெறி முதலியவை  இளம் பிள்ளை பருவத்திலே பள்ளிகளில்  படிக்க செய்து அதனை போட்டியாக வைத்து பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறது காரைக்குடி தமிழ்ச்சங்கம் என்பது பாராட்டுக்குரியது.மாணவர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பில் உணவும்,தேநீரும் வழங்கப்பட்டது.


 


படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் பள்ளியில் இருந்து  காரைக்குடியில் போட்டி நடைபெறும் பள்ளிக்கே நேரடியாக சென்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோர் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் பங்கேற்றனர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.