இராணிபேட்டை யில் மதுபான தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி...
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இன்று (27.2.2020) மதுபானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியைமாவட்ட ஆட்சித் தலைவர் ச. திருமதி. திவ்யதர்ஷினி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு மயில்வாகனன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்தப் பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்குபெற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் துண்டுப்பிரசுரங்கள் கொடுத்தும் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர் இந்த பேரணி முத்துக்கடை பேருந்து நிலையத்திலிருந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நவல்பூர் பேருந்து நிலையம் வழியாக முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.
உடன் , உதவிஆணையர் (கலால்)திருமதி. தாரகேஸ்வரி , அலுவலக மேலாளர் (குற்றவியல்) திரு.பாபு, ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment