வேலப்பாடி ஆணைக்குளத்தம்மன் கோயில் தேர்திருவிழா மக்கள்வெள்ளத்தில் இன்று காலை தேர்வீதிஉலாவந்தது.
வேலூர் வேலப்பாடி ஆணைக்குளத்தம்மன் கோயில் தேர்திருவிழா இன்று மக்கள் வெள்ளத்தில் வீதி உலா வந்தது கூல்வார்த்தல் நடைபெற்றது. மார்ச் 3ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.13ஆம் தேதி அம்மனுக்கு பால்குட அபிஷேகமும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி, இரவில் வீதி உலாவும் நடந்தது. 14ஆம் தேதி காலை 7.30மணிக்கு தேரோட்டம் தொடங்கியது . பகல் 1மணி க்கு அன்னதானமும், இரவு பக்தி நாடகம் நடந்தது
. 15ஆம் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 9மணிக்கு படவேட்டம்மணுக்கு காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. 17ஆம் தேதி படவேட்டம்மன் உற்சவமும் இரவில் அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று செல்லும் மாறு அன்புடன் விழா குழுவினர் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்
Comments
Post a Comment