விஷாரம் பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவி ...
வேலூர் டீம் தினேஷ் சரவணன் இன்று......வேலூர்-விஷாரம் பகுதியில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் வசிக்கும் இரு ஏழைக் குடும்பங்களுக்கு பிப்ரவரி மாதம் சார்பாக மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
முதல் பயனாளி திரு.இஸ்மாயில், தன் மனைவிக்கு மனநலம் குன்றியதால் அவரை கண்காணிப்பதிலே முழுநேர செலவு செய்வதால் பெரிதாக வருமானம் இல்லை. மூன்று பெண் குழந்தைகள் இவருக்கு. இந்த குழந்தைகளுக்கு தான் சமீபத்தில் புத்தாடைகளும் வழங்கினோம்.
இரண்டாம் பயனாளிதிரு.அகமது, பீடி சுற்றும் தொழில், மாத வருமான 1500. மளிகைப் பொருட்கள் கிடைத்ததால் அடுத்த 3 மூன்று மாதங்களில் தனக்கு வரும் வருமானத்தை வைத்து இருக்கும் கடனை அடைக்கப்போவதாக கூறினார்.
Comments
Post a Comment