தமிழ் நாட்டில் கோடைகாலத்தில் மின்தடை ஏற்படாது:அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை
கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்துறைக்கு கடன் இருந்தாலும், தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை - அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகத்தில் மத்திய அரசின் மின் துறை அமைச்சகம் சார்பில் 49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய 100 யூனிட் வரையிலான, இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தைக் கைவிடும் உத்தேசம் இல்லை என்று கூறிய அவர்,
தமிழகத்திற்கு தேவையான அளவு, மின் உற்பத்தி இருப்பதாக விளக்கம் அளித்தார்.
கடலாடியில் மத்திய அரசு ரத்து செய்த சூரியசக்தி மின்சார உற்பத்தி திட்டம் கமுதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment