வேலூர் துணை ஆட்சியர் கைது..80லட்சம் பறிமுதல்..சென்னையில் அதிரடி சோதனை...

வேலூரில் லஞ்சம் வாங்கி கைது துணை ஆட்சியர் 80 லட்சம் பறிமுதல் சென்னையில் அதிரடி சோதனை!


50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனித் துணை ஆட்சியர் எப்படி கலெக்டர் கைது செய்யப்பட்ட காரில் சேஸிங் செய்து அவரை விஜிலென்ஸ் போலீசார் பிடித்தனர் மேலும் அவரது வீடு ஆபீஸ் காரிலிருந்து சுமார் 80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவுக்கு உட்பட்ட இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார்(31) விவசாயி இவர்களது முன்னோர்களின் பூர்வீக விவசாய நிலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி தனது பெயருக்கு கிரையம் செய்துள்ளார் இந்நிலையில் நிலத்தை கிரயம் செய்வதற்கான முத்திரைத்தாள் காட்டிலும் குறைவான தொகை செலுத்தி இருப்பதாக தெரிகிறது இது குறித்து விசாரிக்க வேலூர் திருவண்ணாமலை தனித்துணை ஆட்சியர் முத்திரை கட்டணம் அலுவலகத்திற்கு கடந்த மாதம் 9 தேதி கண்ணமங்கலம் சார்பதிவாளர் பரிந்துரை செய்தார் இந்நிலையில் வேலூர் திருவண்ணாமலை மாவட்ட தனித்துறை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரன்(47) என்பவர் உனது நிலத்தின் மதிப்புக்கு ஒரு 1.25 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும் ஆனால் குறைந்த மதிப்பில் பணம் செலுத்தி இருப்பதால் கிரையம் செய்து செல்லாதே எனவே பணத்தை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார் இதற்கு ரஞ்சித்குமார் நான் விவசாயி என்னால் உடனடியாக அவ்வளவு பணம் செலுத்த முடியாது சிலநாட்களில் பணத்தை செலுத்தி விட்டு விடுகிறேன் என்று கூறி சென்றுள்ளார் இதனிடையில் தனித்துணை ஆட்சியர் தினகரன் கடந்த வாரம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இதனால் ரஞ்சித்குமாரை போனில் தொடர்பு கொண்டு உடனடியாக 50,000 கொடுத்தால் முத்திரைக் கட்டணத்தை குறைத்து மதிப்பிடுகிறோம் நான் பணியிட மாறுதல் செல்வதால் உடனடியாக பணத்துடன் வரவேண்டும் இல்லாவிட்டால் உன்னுடைய கிரையம் கடைசி வரை செல்லாமல் போய்விடும் என்று கூறினாராம் இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசில் புகார் கொடுத்தார் இதனையடுத்து விஜிலென்ஸ் போலீசார் ரசாயனம் தடவிய 50.000 ஆயிரத்தை ரஞ்சித்குமார் இடம் கொடுத்து அனுப்பினார் தொடர்ந்து நேற்று இரவு வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் அருகே வந்து பணத்தை கொடுக்கும்படி தனித் துணை ஆட்சியர் தினகரன் கூறினார் அதன்படி ரஞ்சித்குமார் அங்கு சென்றார் நேற்று இரவு 10 மணிக்கு அங்கு வந்த தினகரன் பணத்தை உடனடியாக வாங்காமல் ரஞ்சித்குமார் காரில் ஏற்றிக்கொண்டு பழைய பஸ் நிலையம் சென்றார் காரை போரூரை சேர்ந்த டிரைவர் ரமேஷ்குமார் 31 ஓட்டினார் வழியிலேயே பணத்தை வாங்கிக்கொண்டு பஸ் நிலையத்தில் அவரை இறக்கி விட்டு விட்டுப் புறப்பட்டார் அப்போது அவரை மூன்று கார்களில் பின்தொடர்ந்து வந்த வேலூர் திருவண்ணாமலை மாவட்ட விஜிலன்ஸ் டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, மைதிலி, எஸ்.ஐ.தினேஷ்குமார் உட்பட 10க்கும் மேற் கொண்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்த முயற்சித்தனர் ஆனால் யாரோ பின் தொடர்வதை அறிந்துகொண்ட தினகரன் காரில் வேகமாக புறப்பட்டார் அவரை போலீசார் விரட்டிச் சென்று சத்துவாச்சாரி கங்கை அம்மன் கோயில் அருகே நேற்று இரவு 10.30மணியளவில் மடக்கிப் பிடித்தனர் காரில் இருந்த 50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் அப்போது பஸ் நிலையத்தில் இருந்து இரஞ்சித் குமாரையும் போலீசார் ஒரு காரில் அழைத்து வந்தனர் மேலும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனித் துணை ஆட்சியர் முத்திரை கட்டணம் அலுவலகத்துக்கு தினகரன் கார் டிரைவர் ரமேஷ் குமார் ஆகியோரை அழைத்து சென்று சோதனை நடத்தினர் இதில் ஆவணங்களுக்கு இடையில் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத 1.94 லட்சத்தை பறிமுதல் செய்தனர் தொடர்ந்து இருவரிடமும் விடிய விடிய இன்று காலை 7 மணி வரை விசாரணை நடைபெற்றது இதனையடுத்து இருவரும் காட்பாடி அருகே உள்ள தாங்கள் கிராமத்தில் உள்ள தினகரனின் வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர் அங்கு 75 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது தொடர்ந்து அவரது சொந்த ஊரான போளூர் அருகே உள்ள  கிராமத்தில் சோதனை நடத்தப்படும் என தெரிகிறது மேலும் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறுகையில்.... தனித்துணை ஆட்சியர் தினகரன் பலரின் லஞ்சம் வாங்கி உள்ளார் இதில் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் முக்கிய மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் தினகரன் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது ஒருசிலரை அலுவலகத்துக்கு அழைத்து சிலரை வெளிஇடத்திற்கு வரவழைத்து லஞ்சம் பெற்றுள்ளார் இதற்கான சொந்தக்காரை பயன்படுத்தியதோடு அவரது சொந்த ஊரை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவரை டிரைவராக நியமித்துள்ளார் தனித்துணை ஆட்சியர் தினகரன் நேற்று காலை முதல் கண்காணித்து வந்தோம் ஆனால் குடியாத்தம் ஆர்டிஓ பொறுப்பையும் கவனிப்பதால் நேற்று காலை குடியாத்தம் சென்றிருந்தார் இதனால் நேற்று இரவு 10 மணிக்கு தான் அவர் வேலூர் வந்தார் அதன் பின்னர் லஞ்சம் வாங்கியபோது விரட்டிச் சென்று பிடித்து தினகரன் வீட்டில் 75 லட்சம் ரொக்கம் 1.44 லட்சம் மற்றும் லஞ்சப்பணம் பெற்ற 50,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தினகரன் மற்றும் ரமேஷ் குமாரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். 



நான் சொன்னா சொன்னதுதான் தற்போது சிக்கியுள்ள தனித்துணை ஆட்சியர் தினகரன் முத்திரை கட்டண விவகாரத்தில் பலரிடம் கரார் வசூலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது மேலும் அவர் குடியாத்தம் ஆர்.டி.ஓ.கூடுதல் பொறுப்பில் உள்ளார் இதன்மூலம் மாடு விடும் திருவிழா நடத்தும் விழா குழுவினரிடம் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது மேலும் பல்வேறு விசாரணைகளில் பலரிடம் லஞ்சம் வசூலித்துக் கொண்டு இருந்தாராம் அதுவும் லஞ்சமாக ஒரு தொகையை குறிப்பிட்டு விட்டால் அதிலிருந்து சற்று குறைந்த தொகையை வாங்க மாட்டாராம் நான் சொன்னா தொகையைக் கொடுத்தால் தான் முடியும் என மிகவும் கண்டிப்பு காட்டுவாராம். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.