வேலூரில் குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்து பாஜக பேரணி...
இன்று குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்து தமிழக முழுவதிலும் பாரதிய ஜனதா கட்சியினர் பேரணி நடத்தினர். வேலூர் மாநகரில் பாஜக மாவட்ட தலைவர் தசரதன் தலைமையிலான பேரணி ஆற்காடு சாலை காகிதபட்டடையில் இருந்து பேரணி துவக்கி கலெக்டர் அலுவலகம் அருகே வந்து நிறைவடைந்தது. பின் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் குடியுரிமை சட்ட மசோதா ஆதரவு மனுவை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பாஜகவின் சார்பில் பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொண்டர்கள் ஆண்களும், பெண்களும், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment