1094பேர் பயனடைந்தனர் இராணிபேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில்...

ராணிப்பேட்டை மாவட்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
1094 பேர் பயன்அடைந்தனர்...


 


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் இணைந்து படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை பெறும் நோக்கில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திறன் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டம் 
ஆற்காடு பகுதியில் உள்ள SSS கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.திவ்யதர்ஷினி விழாவினை தலைமையேற்று வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற 1094 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இம்முகாமில் 5575 வேலைநாடுநர்கள் மற்றும் 91 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர் இதில் திறன் பயிற்சி அளிப்பவர்கள் 5 நபர்கள் கலந்து கொண்டனர்
 வேலை வாய்ப்பு முகாமில் 1094 வேலைநாடுநர்கள் பணிநியமன பெற்றனர்
Shortlisted 454 நபர்கள் மேலும் திறன் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்தார்கள் 134 அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழக அரசு OMCL மூலம் 276 நபர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது 
இதில்
Shortlist65 நபர்கள்
இந்திய விமானப்படையில் சேருவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 166 நபர்கள் கலந்து கொண்டே விருப்பம் தெரிவித்தனர் வேலைவாய்ப்பு முகாமில் 43 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டதில் 4 மாற்றுத்திறனாளிகள் பணி நியமனம் பெற்றனர் இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் கா. பரமேஸ்வரி அவர்கள் வழங்கினார் மண்டல இணை இயக்குனர் வேலைவாய்ப்பு வே.மீனாட்சி அவர்கள் திட்ட விளக்க உரையாற்றினார் ராணிப்பேட்டை மாவட்ட சார் ஆட்சியர் க. இளம்பகவத் அவர்கள் முன்னிலை உரையாற்றினார். சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவித்து தொழில்நெறி வழிகாட்டும் நிலைய உதவி இயக்குனர் செந்தில்குமார் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.