Posts

Showing posts from February, 2020

மாதவரம் ரசாயன கிடங்கில் தீ விபத்து.. அச்சபடவேண்டாம்...டிஜிபி சைலேந்திரபாபு ..

Image
மாதவரம் தீவிபத்தால் மக்கள் அச்சப்பட வேண்டாம்" டிஜிபி சைலேந்திர பாபு   மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துள்ள 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு பேசியபோது " முதற்கட்டமாக 26 தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 10 தீயணைப்பு வாகனம் வந்து கொண்டு இருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் இந்த ரசாயனம் விஷத் தன்மை வாய்ந்தது இல்லை.  ஆனால் கடுமையாக புகையை ஏற்படுத்த கூடியவை.  மக்கள் பதற்றம் அடைய வேண்டாம், இன்னும் 1 மணி நேரத்தில் தீயை அனைப்போம் என நம்புகிறோம்" என்றார்.  

பொது தேர்வில் முறைகேடுகள் செய்தால் தேர்வு எழுத வாழ் நாள் தடை..

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வுத்துறையின் அதிரடி அறிவிப்பு... 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ள நிலையில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது பொதுத் தேர்வுப் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் 31 அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், இயக்கங்களை சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குனர்கள் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் பொதுத் தேர்வில் முறைகேடு செய்பவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் வகையில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது  

ஆற்காடு ஸ்ரீசக்தி சீரடி சாய்பாபா டிரஸ்ட் கோயில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

Image
""ஸ்ரீ சர்வசக்தி சீரடி சாய்பாபா டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு துவக்க விழா"" இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் உள்ள சீதாராமன் தெருவில் உள்ள ஸ்ரீ சர்வசக்தி சீரடி சாய்பாபா டிரஸ்ட் கோயிலில் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை ,மாலை 6 மணி அளவில் கலசாபிஷேகம் மற்றும் சொர்ணாபிஷேகம் அனைத்தும் பக்தர்களுடைய திருக்கரங்களால் சீரடி சாய்பாபாவிற்கு செய்யப்பட்டது மேலும் சாவடி ஊர்வலம்,ஆரத்தி, சாயி பஜனை சிறப்பாக நடைபெற்றது, இதில்  *அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் சாய் ஆதித்* அவர்கள் அறக்கட்டளையின் ஓராண்டு நிகழ்வுகளை வாசித்தார் டிரஸ்ட் இன் தலைவர் சாய்பாலசுந்தரம், து.தலைவர் வாலாஜா சாய்சுரேஷ்ஜெயின் பொருளாளர் சாய்பத்ரிநாத், சாய்வெங்கடேசன், சாய்பரணி சாய்குமரன், சாய்சந்தோஷ், சாய்சுந்தர்ராஜன் ஐயர், சரவணன், *வாலாஜா சாய்WG.முரளி* , சக்திவேலன், பாடகர் சுந்தர், *விஜய்டிவி புகழ் "கானாகவி"* கஜேந்திரன்,மனோகர், *திரளான பெண்சாயி பக்தர்கள்* கலந்து கொண்டு சாய்பஜனை பாடல்கள் பாடி பூஜைகளை சிறப்படைய செய்தனர் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சாய் பாபாவின் அருட்பிரசாதம் வழங்கப்பட்...

1094பேர் பயனடைந்தனர் இராணிபேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில்...

Image
ராணிப்பேட்டை மாவட்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 1094 பேர் பயன்அடைந்தனர்...   வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் இணைந்து படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை பெறும் நோக்கில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திறன் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டம்  ஆற்காடு பகுதியில் உள்ள SSS கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.திவ்யதர்ஷினி விழாவினை தலைமையேற்று வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற 1094 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இம்முகாமில் 5575 வேலைநாடுநர்கள் மற்றும் 91 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர் இதில் திறன் பயிற்சி அளிப்பவர்கள் 5 நபர்கள் கலந்து கொண்டனர்  வேலை வாய்ப்பு முகாமில் 1094 வேலைநாடுநர்கள் பணிநியமன பெற்றனர் Shortlisted 454 நபர்கள் மேலும் திறன் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்தார்கள் 134 அயல்நாட்டு வேலைவாய்ப்ப...

வேலூர் துணை ஆட்சியர் கைது..80லட்சம் பறிமுதல்..சென்னையில் அதிரடி சோதனை...

Image
வேலூரில் லஞ்சம் வாங்கி கைது துணை ஆட்சியர் 80 லட்சம் பறிமுதல் சென்னையில் அதிரடி சோதனை! 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனித் துணை ஆட்சியர் எப்படி கலெக்டர் கைது செய்யப்பட்ட காரில் சேஸிங் செய்து அவரை விஜிலென்ஸ் போலீசார் பிடித்தனர் மேலும் அவரது வீடு ஆபீஸ் காரிலிருந்து சுமார் 80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவுக்கு உட்பட்ட இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார்(31) விவசாயி இவர்களது முன்னோர்களின் பூர்வீக விவசாய நிலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி தனது பெயருக்கு கிரையம் செய்துள்ளார் இந்நிலையில் நிலத்தை கிரயம் செய்வதற்கான முத்திரைத்தாள் காட்டிலும் குறைவான தொகை செலுத்தி இருப்பதாக தெரிகிறது இது குறித்து விசாரிக்க வேலூர் திருவண்ணாமலை தனித்துணை ஆட்சியர் முத்திரை கட்டணம் அலுவலகத்திற்கு கடந்த மாதம் 9 தேதி கண்ணமங்கலம் சார்பதிவாளர் பரிந்துரை செய்தார் இந்நிலையில் வேலூர் திருவண்ணாமலை மாவட்ட தனித்துறை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரன்(47) என்பவர் உனது நிலத்தின் மதிப்புக்கு ஒரு 1.25 லட்சம் செலுத்த வேண்டியி...

வினோதமாக வரதட்சணை கேட்ட சப் கலெக்டர் நெகிழ்ச்சியில் நெல்லை மக்கள்

Image
       சப் கலெக்டர் கேட்ட வினோத வரதட்சணை: மக்கள் பாராட்டு தஞ்சாவூர்: 100 சவரன் நகை வேண்டாம், கார் வேண்டாம் எனது கிராமத்திற்கு வரும் போது, எனது மக்களுக்காக இலவசமாக மருத்துவம் பார்க்கும் டாக்டர் பெண் வேண்டும் என நெல்லை சப்-கலெக்டர் வரதட்சனையாக கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து,கனகா தம்பதியின் மகன் சிவகுருபிரபாகரன்,30, ஐஐடியில் எம்.டெக் முடித்த சிவகுரு பிரபாகரனுக்கு, ஐஏஎஸ் ஆவது மட்டுமே இலக்காக இருந்தது. இதனால், பிற துறைகளில் கிடைத்த வேலை வாய்ப்புகளை தட்டி கழித்தார்.  2018ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்., ஆனார். நெல்லை மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார். அத்துடன் அப்துல்கலாம் பெயரில் டாக்டர் ஏ.பி.ஜே கிராம வளர்ச்சி குழு என ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளைச் செய்து வருகிறார்.  கிராம மக்களிடம் உடல் நலம் குறித்த விழிப்புணர்வுகள் இல்லாததால், அவர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, சிவகுருபிரபாகரன், 15 மருத்துவர்கள் ...

விஷாரம் பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவி ...

Image
  வேலூர் டீம் தினேஷ் சரவணன் இன்று......வேலூர்-விஷாரம் பகுதியில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் வசிக்கும் இரு ஏழைக் குடும்பங்களுக்கு பிப்ரவரி மாதம் சார்பாக மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. முதல் பயனாளி திரு.இஸ்மாயில், தன் மனைவிக்கு மனநலம் குன்றியதால் அவரை கண்காணிப்பதிலே முழுநேர செலவு செய்வதால் பெரிதாக வருமானம் இல்லை. மூன்று பெண் குழந்தைகள் இவருக்கு. இந்த குழந்தைகளுக்கு தான் சமீபத்தில் புத்தாடைகளும் வழங்கினோம். இரண்டாம் பயனாளிதிரு.அகமது, பீடி சுற்றும் தொழில், மாத வருமான 1500. மளிகைப் பொருட்கள் கிடைத்ததால் அடுத்த 3 மூன்று மாதங்களில் தனக்கு வரும் வருமானத்தை வைத்து இருக்கும் கடனை அடைக்கப்போவதாக கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் குடியாத்தம்.தி.மு.க எம். எல். ஏ. காத்தவராயன் உடலுக்கு அஞ்சலி...

Image
திமுக தலைவர் ஸ்டாலின் மறைந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வாலாஜாப்பேட்டை முன்னால் நகர செயலாளர் அகியோருக்கு அஞ்சலி ராணிப்பேட்டை மாவட்டம் குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ  காத்தவராயன் உடலுக்கு  அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் அதனைதொடந்து  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் நேற்று காலமான திமுக முன்னால் நகர செயலாளர் நித்யானந்தம் அவர்களின் உருவபடத்திற்க்கு மலர் தூவி மறியாதை செலுத்தி அவர் குடும்பத்தினருக்கு அறுதல் தெரிவித்தார் உடன் ராணிப்பேட்டை சட்ட மன்ற காந்தி மற்றும் ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் ஈஷ்வரப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

JOB ALERT

Image
UPSC CIVIL SERVICES RECRUITMENT

50ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் தனி துணை ஆட்சியர், லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது

Image
வேலூர் மாவட்டம். 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது. வேலூர் இரும்புலி கிராமத்தை சேர்ந்த ரன்ஜித்குமார் என்பவரின் நில பத்திரத்தை விடுவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தே 50,000 லஞ்சம் வாங்கியை தனிதுணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரன் மற்றும் அவரது ஓட்டுனர் ரமேஷ் ஆகிய இருவர் வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்* *மேலும் தினகரனிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்தி 86- ஆயிரம் ரூபாய் மற்றும் லஞ்சப்பணம் 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல். காரில் வைத்து லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்ப முயன்ற தனித்துணை ஆட்சியர் தினகரனை லஞ்ச ஒழிப்பு துறையினர் விரட்டிச்சென்று கைது செய்தனர். தினகரன் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக பணியிட மாற்றம் செய்த பின்னரும் மாறுதல் ஆகாமல் இருந்து லஞ்சம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது*

வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு சண்முகசுந்தரம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேரணி துவக்கி வைத்தார்

Image
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 28-2-20  வெள்ளிக் கிழமை காலை10.30க்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிக நிறுவனங் களின் பெயர் பலகை தமிழில் அமைப்பது குறித்து பேரணியை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சண்முக சுந்தரம் அவர்கள் துவக்கி வைத்தார் தாமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் திருமதி ராஜேஸ்வரி தலைமை வகித்தார் விழாவில் தமிழ்ச் சான்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.  தொல்லியல்,கல்வெட்டு ஆய்வாளர் திரு தமிழ் புகழேந்திக்கு சால்வை அ ணிவித்து நினைவு பரிசு வழங்கினைர்.இந்நிகழ்ச்சியில் திிரு.த.வ.சிவசுப்பிரமணியம், குமரன் இரா சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர் 

சினிமாவில் மீண்டும் இணையும் ரஜினி,கமல்

Image
""மீண்டும் சினிமாவில் இணையும் ரஜினி - கமல்"" 40 ஆண்டுகள் கழித்து, ரஜினியும் கமலும் சினிமாவில் இணைய உள்ளனர். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.    இந்தப் படம் முடிவடைந்ததும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ‘தில்லுமுல்லு’ படப்பாணியில் இந்த படத்தில் கமல் கவுரவ கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கான அறிவிப்பை மார்ச் 5ம் தேதி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.   அப்போது ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து நடிக்க இருக்கும் படம் உறுதியாகும். மார்ச் மாதமே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டதாகவும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த எதிர்பாராத விபத்தால் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தின் மூலமாக, மறைந்த பாலச்சந்தர் குடும்பத்தினருக்கு உதவ, கமலும், ரஜினியும...

வேலூரில் குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்து பாஜக பேரணி...

Image
 இன்று குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்து தமிழக முழுவதிலும் பாரதிய ஜனதா கட்சியினர் பேரணி நடத்தினர். வேலூர் மாநகரில் பாஜக மாவட்ட தலைவர் தசரதன் தலைமையிலான பேரணி ஆற்காடு சாலை காகிதபட்டடையில் இருந்து பேரணி துவக்கி கலெக்டர் அலுவலகம் அருகே வந்து நிறைவடைந்தது. பின் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் குடியுரிமை சட்ட மசோதா ஆதரவு  மனுவை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பாஜகவின் சார்பில் பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொண்டர்கள் ஆண்களும், பெண்களும், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பத்திர எழுத்தர்கள் ஆவண தயாரிப்புக்கு இனி கட்டணம் கட்டாயம்..

மார்ச் 1ம் தேதி முதல் பத்திர எழுத்தர்கள் ஆவண தயாரிப்புக்கு கட்டண ரசீது கட்டாயம்... பத்திர எழுத்தர்கள் ஆவண தயாரிப்புக்கான கட்டண ரசீது வழங்குவது வரும் மார்ச் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.  மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள், துணை சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள், பத்திர எழுத்தர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்பதுடன், ஆவண எழுத்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளன.  ஆனாலும் ஆவண எழுத்தர்கள் மீதான புகார்கள் தொடர்ந்து வருகிறது. எனவே, ஏற்கனவே அறிவுறுத்தியபடி சார்பதிவாளர், துணை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர எழுத்தர்கள், இடைத்தரகர்களை அனுமதிக்க கூடாது.  அதோடு பத்திர எழுத்தர்கள் கண்டிப்பாக ரசீது புத்தகத்தை தங்களுடன் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் பொதுமக்களுக்கு பத்திர எழுத்தர்களால் ஆவணம் தயாரிப்பதற்கான கட்டண ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.  ஆகவே, பத்திர எழுத்தர்கள் தங்களால் தயாரிக்கப்படும் ஆவணங...

தமிழ் நாட்டில் கோடைகாலத்தில் மின்தடை ஏற்படாது:அமைச்சர் தங்கமணி

Image
       தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்துறைக்கு கடன் இருந்தாலும், தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார். சென்னை - அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகத்தில் மத்திய அரசின் மின் துறை அமைச்சகம் சார்பில் 49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் இந்த தகவலை வெளியிட்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய 100 யூனிட் வரையிலான, இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தைக் கைவிடும் உத்தேசம் இல்லை என்று கூறிய அவர், தமிழகத்திற்கு தேவையான அளவு, மின் உற்பத்தி இருப்பதாக விளக்கம் அளித்தார். கடலாடியில் மத்திய அரசு ரத்து செய்த சூரியசக்தி மின்சார உற்பத்தி திட்டம் கமுதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்     

இராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் தொடங்கி வைத்தார்

Image
ராணிப்பேட்டையில் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு ராணிப்பேட்டையில் கால்நடைகளுக்குக் கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில்,  ராணிப்பேட்டை மாவட்டத்தில், சுமார் 2.36 லட்சம் கால்நடைகளுக்கு முதல் தவணை கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தை  தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில்,  ராணிப்பேட்டை மாவட்டத்தில், சுமார் 2.36 லட்சம் கால்நடைகளுக்கு முதல் தவணை கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தை   ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி இன்று துவக்கி வைத்தார்.மாவட்ட கால்நடை உதவி இயக்குநர் வி.பாஸ்கர்  தலைமையில் மாவட்டத்தில் 47 கால்நடை மருத்துவக் குழுக்களைக் கொண்டு இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை வலை தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

பள்ளி மேலான்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி...

Image
""பள்ளிமேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான குறுவளமைய அளவிலான பயிற்சி"" ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் சார்பில் பள்ளிமேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான குறுவளமைய அளவிலான பயிற்சி குழுவில் அமையத்தின் சார்பில் பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி பூண்டி வட்டார வள மையத்தின்  வாலாஜா மேற்கு..14 பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கான ஒரு குழுவில் 6 உறுப்பினர்கள் வீதம் 14 பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் இதன் ஒருங்கிணைப்பாளர் பூண்டி தலைமையாசிரியர் குமார்   ஆசிரியர் பயிற்சியினர் சித்ரா வி.சி.மோட்டூர் பள்ளி தலைமை ஆசிரியை வசந்திரூபி முன்னிலையில் நடை பயிற்சி நடைபெற்றது ஆசிரியர் பயிற்சியாளர் மாற்றுத்திறனாளிகளுக்கான பொறுப்பாளர் விமலா ஆகியோர் பயிற்சி அளித்தனர் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் ஒவ்வொரு பள்ளியின் கட்டமைப்பு கல்வி மாணவர்கள் வருகை கற்றல் ஆர்வம் ஆகிய பற்றி கருத்து  நடைபெற்றன 84பேர் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திரளாக கலந்து கொண்டனர் பள்ளி மேலாண்மை குழு சாதனைகள் பற்றி கலந்துரையாடல...

இராணிபேட்டை யில் பாஜக குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ஆதரித்து பேரணி

Image
CAA, NRC, NRC, NPR,  குடியுரிமை  திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு!!!! ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை எதிர்க்கட்சிகளின் தேசவிரோத பொய் பிரச்சார போராட்டங்களை குடியுரிமை  திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து 700க்கும் மேற்பட்ட மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக  ஆதரவு பேரணி நடைபெற்றது பேரணியில் மசோதாவை குறித்து ஆதரவான விவரங்களை  முழக்கமிட்டு ஊர்வலமாக சென்று முக்கிய பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆதரவு மனுக்களை வழங்கினார்கள் இதில் அரகோணம் பாராளுமன்ற பொறுப்பாளர் வி.கே.சிணிவாசன்  வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் விஜயன்  எ.ஆர்.எஸ் அருள்  மு.மாவட்ட தலைவர் பாபாஸ் பாபு ஆற்காடு வர்த்தக அணி தலைவர் பாலச்சந்தரம் ஆற்காடு நகர தலைவர் சரவணன்  சமுக சேவகர் டாக்டர் சாய்ஆதித் டி.கோபிநாத் பத்ரிநாத், கார்த்தி, நகர ஒன்றிய பி.ஜே.பி நிர்வாகிகள் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய அணைகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள...

மார்ச் மாதத்தில் எட்டு நாட்கள் வங்கி விடுமுறை......

   மார்ச் 8 முதல் 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்  8 மார்ச் ஞாயிறு  மார்ச் 9 மற்றும் 10 தேதிகளில் ஹோலி விடுமுறை  மார்ச் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வங்கி வேலைநிறுத்தம்  மார்ச் 14 அன்று இரண்டாவது சனிக்கிழமை  மார்ச் 15 ஞாயிறு  இந்த வழியில், அனைத்து வங்கிகளும் 8 நாட்களுக்கு மூடப்படும்  பொது நலனுக்காக வெளியிடப்பட்ட தகவல்கள்  

3.40கோடி யை தானம் செய்த சிறுவன் குவாடன்

Image
பல கேலி கிண்டலுக்கு உள்ளாகி இணையத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்ததன் மூலம் உலக நாடுகளின் பேராதரவை பெற்ற சிறுவன் குவாடன் தனக்கு கிடைத்த  3.40 கோடி ரூபாய் பணத்தை ஆதரவற்றோர் அறக்கட்டளைக்கு கொடுத்து அனைவரையும் மனம் நெகிழ செய்துள்ளான்! வாழ்வில் அன்றாடம் சில பேர் சில அவமானங்களை சந்திப்பார்கள் அவர்களெல்லாம் கன்டிப்பாக ஒரு நாள் உச்சத்தை அடைவார்கள் அன்று பல பேர் சொல்வார்கள் இவர் இப்படி வருவார் என்று எனக்கு அப்போதே தெரியும் என்று. கஷ்ட்டங்களை கடந்தவனுக்கு தான் தெரியும்  தான்  பட்ட வலியை ஒரு போதும் பிறர் படக்கூடாதென்று...  *அந்த மனசு தான் சார் கடவுள்* . அன்பன் , நல்ல நன்பன், தங்கமானவர் வைரமானவர் , அமைதியானவர் என்பார்கள் எல்லா பேரும் புகழும் இறப்பதற்கு முன்னால் தான் இறந்த பிறகு புகழ்ந்த அனைவரும்  பாடியை  எப்போது எடுப்பீங்க என்பார்கள். இந்த குவாடனை போல் நாமும்  மற்றவர்களுக்கு உதவினால் பல மடங்கு நாமும் வளரலாம் வாழலாம். வாழ்வோமாக வாழ்த்துக்கள் குவாடன்

நம் பெரியோர்கள் வாழ்த்தும் பதினாறும் பெற்று....

Image
16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும் ! நம் பெரியோர்கள் 16 ம்பெற்று பெரும் வாழ்வு வாழ்க எனவாழ்த்துவார்கள்  அந்த 16ல் என்ன,என்ன என்று கீழேவிபரம்  பார்ப்போம் அதற்காக பொருளையும் காண்போம்.. 1. புகழ் 2. வெற்றி 3. பணம் (பொன்) 4. இரக்கம் 5. அறிவு 6. அழகு 7. கல்வி 8. நோயின்மை 9. வலிமை 10. நல்விதி 11. உணவு 12. நன் மக்கள் 13. பெருமை 14. இனிமை 15. துணிவு 16. நீண்ட ஆயுள் 16 செல்வங்களைப் பெரும் வழிகள்: 1. புகழ் யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும். 2. வெற்றி வெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. நம்மை நாமே வெற்றி கொள்வதாகும். இன்றைய நிலையை விட நாளைய நிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும். 3. பணம் (பொன்) செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவைகளில் பணமும், பொன்னும் ஆகும்.அவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள் தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது. 4. இரக்கம் இருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர...

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு பற்றிய கூட்டம்.....

Image
இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற Parliamentary Constituency  Committee For Road Safety - District Level Review Meeting. வேலூர் பாராளுமன்ற தொகுதி சாலை  பாதுகாப்புக்குழு கூட்டத்தில்  சாலை பாதுகாப்புக்குழு தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சண்முகசுந்தரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

கீழ்விஷாரம்ராசாத்திபுரத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

Image
  இராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் ராசாத்திபுரம் அரசு இந்து மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்றஉறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10.00 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கலையரங்கம் திறப்புவிழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக இராணிப்பேட்டை மாவட்டசெயலாளர் சாதனைசெம்மல் ஆர்.காந்தி.எம்எல்ஏ.அவர்கள் கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு 75 மிதிவண்டிகள்வழங்கினார் இதில் காங்கிரஸ்கட்சி மாவட்டதலைவர் சி.பஞ்சாட்சரம் நகரசெயலாளர் ஏ.மன்சூர்பாஷா கீழ்விஷாரம் ரமேஷ் சங்கர் வாலாஜாஇர்ஃபான்  வாலாஜா உமர்பாய்  சுரேஷ் ஜபியுல்லா காதர்பாய் இம்தியாஸ் அக்தர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

முன்னாள் படைவீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார் இராணிபேட்டை மாவட்ட கலெக்டர்

Image
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர். 2017 படைவீரர் கொடி நாளில் அதிக நிதி வசூல் செய்து கொடுத்த அரசு அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து முன்னாள் படைவீரர் குடும்பங்களுக்கு திருமண நிதி உதவியாக தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் 8 நபர்களுக்கு ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். குறைதீர்வு நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர் குடும்பங்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கொடுத்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக்கொண்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்துள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு ஆர் ஜெயச்சந்திரன், முன்னாள் படைவீரர் உதவி இயக்குனர் க.செந்தில்குமார் (ஓய்வு) முன்னாள் படைவீரர் ந...

இராணிபேட்டை யில் மதுபான தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி...

Image
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இன்று (27.2.2020) மதுபானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியைமாவட்ட ஆட்சித் தலைவர் ச. திருமதி. திவ்யதர்ஷினி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு மயில்வாகனன்   அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்தப் பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்குபெற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் துண்டுப்பிரசுரங்கள் கொடுத்தும் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர் இந்த பேரணி முத்துக்கடை பேருந்து நிலையத்திலிருந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நவல்பூர் பேருந்து நிலையம் வழியாக முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. உடன் , உதவிஆணையர் (கலால்)திருமதி. தாரகேஸ்வரி , அலுவலக மேலாளர் (குற்றவியல்) திரு.பாபு, ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

வேலூர் நண்பன் இதழை பாராட்டிய ஸ்வாமி இராமகிருஷ்ணானந்தா அவர்கள்

Image
வேலூரில் சின்மயா மிஷன் வழங்கிய சொற்பொழிவு தமிழில் ஸ்வாமி இராமகிருஷ்ணனாந்த அவர்கள் கம்பராமாயணம் பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சி வேலூர் லஷ்மி கார்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நான்கு நாட்களும் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.நான்கு நாட்கள் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் மிகவும் அருமையான நிகழ்ச்சி என ஒவ்வொரு வரும் பாராட்டி சென்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சியை பற்றிய தகவல் களைத் தொகுத்து செய்திகளும், விளம்பரம் செய்து மக்களிடத்தில் கொண்டு போய்சேர்த்ததற்காக ஸ்வாமி இராமகிருஷ்ணனாந்த அவர்கள் வேலூர் நண்பன் இதழ் இரா. மாசானமுத்து க்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். 

வேலப்பாடி ஆணைக்குளத்தம்மன் கோயில் தேர்திருவிழா மக்கள்வெள்ளத்தில் இன்று காலை தேர்வீதிஉலாவந்தது.

Image
வேலூர் வேலப்பாடி ஆணைக்குளத்தம்மன் கோயில் தேர்திருவிழா இன்று மக்கள் வெள்ளத்தில் வீதி உலா வந்தது    கூல்வார்த்தல் நடைபெற்றது. மார்ச் 3ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.13ஆம் தேதி அம்மனுக்கு பால்குட அபிஷேகமும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி, இரவில் வீதி உலாவும் நடந்தது. 14ஆம் தேதி காலை 7.30மணிக்கு தேரோட்டம் தொடங்கியது . பகல் 1மணி க்கு அன்னதானமும், இரவு பக்தி நாடகம் நடந்தது . 15ஆம் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 9மணிக்கு படவேட்டம்மணுக்கு காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. 17ஆம் தேதி படவேட்டம்மன் உற்சவமும் இரவில் அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று செல்லும் மாறு அன்புடன் விழா குழுவினர் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம் 

வேலூர் விருதம்பட்டில் மதுரை முத்து பட்டி மன்றம்

Image
வேலூர் விருதம்பட்டில் மயானக் கொள்ளையை முன்னிட்டு மதுரை முத்து பட்டி மன்ற பேச்சாளர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது..இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பட்டிமன்ற நிகழ்ச்சியை ஆர்வமாக கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியை அப்பகுதியில் உள்ள பொருப்பாளர்கள் செய்தனர்

சிஎம்சி முன்னாள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்டான்லி ஜான் காலமானார்

Image
CMC முன்னாள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்டான்லி ஜான் சென்ற 23 ஆம் தேதி பெங்களூரில் தனது இல்லத்தில்  காலமானார். CMC யின் இருதய அறுவை சிகிச்சை பிரிவில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். இவரது மனைவி டாக்டர் லில்லி ஜான் மருத்துவ பிரிவு தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1961 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் முதல் செய்யப்பட்ட இருதய அறுவைசிகிச்சை ( Open Heart Surgery ) CMC யில் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையை நிகழ்த்தின குழுவில் டாக்டர் ஸ்டான்லி ஜான் முக்கிய பங்கு வகித்தார். இவருடைய சாதனைகளின் காரணமாக B.C.ராய் விருது மற்றும் 1975 ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். இவருடைய இரண்டு மகன்கள் டாக்டர் ரஞ்சித் ஜான் மற்றும் ரோஹன் ஜான் வெளிநாட்டில் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவரது உடல் நல்லடக்கம் பெங்களூரில் வருகின்ற வெள்ளிக்கிழமை 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஹலோ செயலியின் கலந்தாய்வு கூட்டம்

Image
வேலூர்   மாவட்டத்தை சேர்ந்த ஹலோ செயலியின் படைப்பாளிகள்15ந்துக்கும் மேற்பட்டடோர்களை ஹலோ செயலி செயலாளர் " விக்கி பிரசாந்த் " தலைமையில் கலந்தாய்வு கூட்டம் வி. ஜ. டி எதிரில் இருக்கும் ஒட்டல் சாக்லெட் ரூமில் நடந்தது.  வந்திருந்தபடைப்பபாளிகள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.

பிரிண்டர்கள் தின நல்வாழ்த்துக்கள்

Image
அச்சுத்தொழில் எல்லாத் தொழில்களையும் விட முதன்மையானது இத்தொழில் சிறந்த தொழில் ஒரு வியாபாரத்திற்கும் விளம்பரத்திற்கும் இத்தொழில் இல்லை எனில் வளர்ச்சி அடைய முடியாது இத்தொழில் மூலம் நல்ல கட்டுரைகள் கவிதைகள் செய்திகளை அறியப்படுகின்றன இந்த தொழிலில் மென்மேலும் வளர உங்களின் நல்ல ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்  இங்கனம்  அம்மன் பிரஸ் தோட்டப்பாளையம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் எதிரில்  வேலூர்.

வேலூர் மாவட்ட திமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது...

Image
பொது உறுப்பினர்கள் கூட்டம்  : வேலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கழக பொருளாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் அண்ணன் *திரு.துரைமுருகன்MA. BL.,MLA* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார், கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த் MP*, வேலூர்    மத்திய மாவட்ட செயலாளர் *திரு.ஏ.பி.நந்தகுமார்MLA* அவர்கள் மாவட்ட அவைத் தலைவர் திரு.தி.அ.முகமது சகி, வேலூர் மாநகர செயலாளர் திரு.ப.கார்த்திகேயன்MLA, கழக தேர்தல்  பொறுப்பாளர் திரு.சரவணன், மாவட்ட  பொருளாளர்    நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர் மலர்விழி லோகநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர், பகுதி கழக செயலாளர்கள், நகர கழக, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

தோட்டப்பாளையத்தில் புரட்சி தலைவி பிறந்த நாள் விழா

Image
வேலூர் தோட்டப் பாளையம் 29வதுவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாள் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

வேலூர் தோட்டப்பாளையம் நீண்ட நாள் கோரிக்கை இப்போது....

Image
வேலூர் தோட்டப்பாளையம் பச்சையப்பாஸ் எதிரில் இருக்கும் கான ஆறு சுவர் இல்லாமல் இருந்தது நீண்ட நாட்களுக்கு பிறகு சுவரை கட்டியுள்ளார்கள்.இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது