மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா
வேலூர், Dr.அம்பேத்கர் நகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் திரு. குமார் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். ஆசிரியர் திரு. மோகன்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கவிஞர். இலக்குமிபதி அவர்கள் சிறப்புரையாற்றினார். விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகளும், மாணவர்களின் கணகவர் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் சர்க்கரை பொங்களும், கரும்பும் வழங்கப்பட்டு ஆசிரியை திருமதி. லாவண்யா அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிந்தது.
Comments
Post a Comment