ராணிப்பேட்டை கலெக்டர் நலத்திட்ட உதவி ..

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் புதுப்பாடி உள்வட்டம் கீழ்வேளூர் கிராமத்தில் இன்று (30.1.2020) நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் 199 பயனாளிகளுக்கு   ரூபாய் 1,52,44.818/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச.திவ்யதர்ஷினி  இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் திரு. க. இளம்பகவத் இ.ஆ.ப.அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இம்மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சா திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் பேசியதாவது.இந்த கிராமத்தில் நெல் விவசாயம் சொட்டு நீர் பாசன விவசாயிகள் மாடி தோட்டம் அமைத்தல் விதைகள் குறித்து பேசினார். நெல் விதைகள் நிறைய விதமான நெல் விதைகளை இன்று கண்காட்சியில் பார்த்தேன் அதில் மாப்பிள்ளை சம்பா விதைகள் வந்து உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறதுவெள்ளையாக இருக்கிற அரிசி சர்க்கரை பால் போன்றவற்றை தவிர்த்து நீங்களும் முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவு வகைகளை இப்போது நீங்கள் உபயோகிக்க வேண்டும்எண்ணெய் வகைகள் செக்கில் செக்கில் ஆட்டி அந்த எண்ணெய் வகைகளை நாம் உபயோகப்படுத்த வேண்டும் ஒவ்வொரு விவசாயிகளும் தங்களுக்கு தேவையான தங்களது நிலங்களில் விவசாயம் செய்து அந்த உணவு வகைகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமஇந்த மனுக்கள் மூலமாக இந்த பகுதியில் உள்ள நரிக்குறவர் களுக்கு வீட்டுமனைப்பட்டா போன்ற உதவிகளை மனுக்கள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது வீட்டிலுள்ள பெண்கள்நேரம் கிடைக்கும் சமயத்தில் இந்த விதைகளை வாங்கி பயன்படுத்தி உங்கள் வீட்டில் பின்புறத்தில் பயிரிட்டு உங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள உபயோகமாக இருக்கும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயத்தை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்கள். இந்த மனுநீதி முகாமில் வருவாய்த்துறை சார்பில் 60 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா களும் இந்திராகாந்தி முதியோர் உதவித்தொகை சார்பில் 14 பயனாளிகளுக்கும் விதவை உதவித்தொகை இரண்டு பயனாளிகளுக்கும் வட்ட வழங்க பிரிவின் சார்பில் 23 பயனாளிகளுக்கும் தோட்டக்கலை துறை சார்பில் 6 பயனாளிகளுக்கும் வேளாண்மை துறை சார்பில் 15 பயனாளிகளுக்கும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 60 பயனாளிகளுக்கும் மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கி கடன் 19 நபர்களுக்கும் இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 199 பயனாளிகளுக்கு ரூ.1, 52,44,818 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். சிறப்பு மனுநீதி முகாமில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு ஜே எல் ஈஸ்வரப்பன் ஆற்காடு வட்டாட்சியர் திருமதி. இந்துமதி, ஆற்காடு தனி வட்டாட்சியர் திருமதி. சரஸ்வதி, வேளாண்மை துறை பொறியியல் உதவி செயற்பொறியாளர் திரு. கிருஷ்ணகுமார், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் திரு. சங்கர், தோட்டக்கலைத்துறை திருமதி சௌமியா, கால்நடை பராமரிப்புத்துறை  மருத்துவர் ராமநாதன், ஊரக வளர்ச்சி துறை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு வெங்கடாசலம் மருத்துவ ஊரக பணிகள் டாக்டர். சதீஷ், மருத்துவத் துறை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுரேஷ் பாபு ராஜ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்  திட்ட அலுவலர் திருமதி.கோமதி, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் திரு பழனி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 



Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.