புத்தக கண்காட்சியில் வேலூர் வைத்தியர் பாஸ்கரனுக்கு பரிசு...

புத்தக கண்காட்சியில் வேலூர்
வைத்தியர் பாஸ்கரனுக்கு பரிசு
வேலூர், ஜன. 22
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 43-வது புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய “காற்றலையில் கண்ணதாசனின் பாட்டு தேரோட்டம்” மற்றும் டாக்டர் ஃபஜிலா ஆசாத் எழுதிய “24 சிt. (கேரட்) வாழ்க்கை” நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் டிவி புகழ் ரங்கராஜ் பாண்டே, கற்கண்டு இதழின் ஆசிரியர் லேனா ரவி, மதுரா டிராவல்ஸ் பாலன், வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் டாக்டர் கே.பி.அருச்சுனன் மருத்துவமனை நிர்வாகியான டாக்டர் டி.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  இதில் காவிரிமைந்தன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்தி நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார்.



Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.