மகரவிளக்குபூஜை


தைதிருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகரவிளக்குபூஜை   சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.  மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி இன்று மாலை 6.30 மணிக்கு சன்னிதானத்தை வந்தடையும்.  இதன் பின்னர் திருவாபரணங்களை பூட்டி ஐயப்பனுக்கு விசேஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெறும். அதே நேரத்தில் சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும்.  மகரவிளக்கு பூஜையில் பங்கேற்கவும், மகர ஜோதியை காணவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து உள்ளதால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.