வேலூர் கோட்டை மாநகர் லயன்ஸ் சங்கம் சார்பில் " பொங்கல் விழா "
12.01.2020 அன்று வேலூர் சத்துவாச்சாரி அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் வேலூர் கோட்டை மாநகர் லயன்ஸ் சங்கம் சார்பில் " பொங்கல் விழா " நடைபெற்றது. சங்கத்தலைவர் லயன்.ச.மணிபாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழா சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள், கோலப்போட்டி, பொங்கல் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் கலைமகள்.சு.இளங்கோ சுவாமி விவேகானந்தர் பற்றி சிறப்புரை ஆற்றினார். புலவர் வேலூர் மா.நாராயணன் பொங்கல் விழா பற்றி சிறப்புரை ஆற்றினார். தொழிலதிபர் ஆர்.ஜெயராமன் அவர்கள் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஊர் பெரியதனம் வேணுகோபால் முதலியார் பொங்கல் விழா தொடங்கிவைத்து அன்னதானம் வழங்கினார். மண்டலத்தலைவர் லயன்.ராஜு, வட்டார தலைவர் லயன்.தேவதாஸ், மாவட்ட தலைவர்கள் லயன்.தி.சண்முகசுந்தரம், மனோகரன், வெங்கடேசன்,தேசி, சங்க பொங்கல் விழா சேர்மென் லயன்.எம்.ஜெயவேலு, சங்க செயலாளர் லயன்.கேசவன், சங்க பொருளாளர் லயன்.காசி மற்றும் சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment