ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.
நல்லது சொல்வோம் 35. நாலடி பயில்வோர் நூறடி உயர்வோம்! ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி! இது ஒரு புகழ்பெற்ற பழமொழி! இன்றைய இளைய தலைமுறைக்கு இதன் அர்த்தம் புரிவது சிரமம் தான்! ஆலமரம் வேலமரக் குச்சிகளைக் கொண்டு பல் விளக்குவது இன்றும் கிராமத்தில் பலரின் பழக்கமாக இருக்கிறது! ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்று அனுபவித்தவர்கள் சொல்லி வைத்தார்கள்! அதேபோல நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பது நாலடிகளை உடைய நாலடியாரும் இரண்டு அடிகளை உடைய திருக்குறளும் வாழ்க்கைக்கு உறுதி தருகிற உயர்ந்த இலக்கியங்கள் என்பதை சொல்லி வைத்தார்கள்! நாலடி நான்மணி நானாற்பது, ஐந்திணை, முப்பால் கடுகாம், கோவை பழமொழி, மாமூலம், இந்நிலையை காஞ்சியோடு ஏலாது என்பது கைந் நிலையும் ஆம் கீழ்கணக்கு என்பது பழைய பாடல்! இது சங்கம் மருவிய காலத்தில் வரும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து சொல்லப்படுகிற பாடல்! சங்கப்பாடல்கள் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்கம் மருவிய காலம் கிபி மூன்றாம் நூற்றாண்டு இந்த 18 நூல்களில் மிக உயர்ந்த லட்சியங்களை வாழ்க்கைக்கு வேண்டிய உறுதிகளை சொல்லிக் ...
Comments
Post a Comment