டிகேஎம் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா வேலூர் கலெக்டர் பங்கேற்பு

டிகேஎம் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா  வேலூர் கலெக்டர் பங்கேற்பு



வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டி.கே.எம் (தனபாக்கியம் கிருஷ்னசாமி) மகளிர் கல்லூரி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இனைந்து நடத்தும் பொங்கல் திருவிழா வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில்    நடைபெற்றது,
இவ்விழாவில் மாணவிகள் பட்டாடைகள் அனிந்தும், வீரவிளையாட்டுகள், நடனங்கள் என பல நிகழ்ச்சிகளுக்கிடையே கல்லூரி நிர்வாகத்தினர் கலந்துகொள்ள மாணவியர்களும் பேராசியைகளும் பொங்களிட்டனர். இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர்,  பெண்கள் படித்துவிட்டு வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பது நல்லதல்ல, பெண்களும் வேலைக்குச்சென்றால்தான் தங்கள் குடும்பம் வாழ்வுயரும்.,
ஆனாதிக்கம் நிறைந்த இவ்வுலகினில் பெண்கள் அடிமைப்பட்டுகிடப்பது நல்லதல்ல என்றும், ஆணாதிக்க கொடுமையை விளக்கும் வண்ணமாக " என் மறைவுக்குப்பின் என் நினைவுகளுடன் உன் வாழ்க்கை"
ஆனால் உன் மறைவுக்குப்பின் உன் தங்கையுடன் என் வாழ்க்கை" என ஆணாதிக்கத்தின் கொடுமையை கலகலப்பாக கூறினார். மேலும் இந்த காலத்திலும் பெண்கள் தங்களது படிப்புக்காக அண்ணன், தம்பி அப்பா என யாராவது ஆண்கள்  அழைத்துச்செல்லவேண்டிய சூழலில் இருந்தனர், அந்த நிலையை மாற்றியவர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களாவார், அவரது திட்டங்களான மாணவ மாணவியருக்கு மிதிவண்டி, மடிக்கனினி, படிப்புக்கான உபகரணங்கள் வழங்குதல் என சீரிய பல திட்டங்களால் பெண்கள் சுயமாக முன்னேற வழிசெய்தவர் என்றவகையில் முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா அவர்களமீது நான் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன் என பெண்கள் வாழ்வுயரவேண்டும் என வலியுறுத்தி பேசினார். டி.கே.எம். கல்லூரி  செயலாளர் டாக்டர் மணிநாதன், பேராசிரியைகளுக்கும், மாணவமாணவியருக்கும், தமிழ்நாடு சுற்றுலாத்துறையினருக்கும் பொங்கல் வாழ்த்துக்களும் நன்றியும் கூறினார்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.