நாட்டு நலப்பணி திட்டம்


வேலூர் அக்சிலியம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் வேலூர் மாவட்ட காவல் துறை இணைந்து சாலை பாதுகாப்பு, பெண்  குழந்தைகள் தினம், தேசிய வாக்காளர் தினம் என முப்பெரும் விழிப்புணர்வு குறித்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காட்பாடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.துரைபாண்டி தலைமை தாங்கினார். திரு.கோபால் முதன்மை கிளை மேலாளர் யுனைடெட் இந்தியா காப்பீட்டு கழகம், திரு. பாலாஜி காவல் துறை போக்குவரத்து ஆய்வாளர், திருமதி.தீபிகா காவல்துறை இணை ஆய்வாளர், திரு.தத்துப்புத்திரன் வழக்கறிஞர் ஆகியோர்  கருத்துரை வழங்கினர்.  நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர்.அமுதா, திருமதி.காயத்ரி,  திருமதி.உமா மகேஸ்வரி பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.