ஸ்ரீ நாராயணி பள்ளியில் ஓவியப் போட்டி
ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் திரு. பாலாஜி பரிசுகளை வழங்குகிறார். உடன் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் இயக்குநர் திரு. சுரேஷ்பாபு மற்றும் முதன்மை முதல்வர் சீ.முரளீதர்.
ஸ்ரீ சக்தி அம்மாவின் 44 வது ஜெயந்தியை முன்னிட்டு வேலூர், ஸ்ரீபுரத்திலுள்ள நாராயணி பள்ளிகள் மற்றும் ஹலோ எப்.எம் (Hello FM) இணைந்து மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகள் ஸ்ரீ நாராயணி பள்ளியில் நடந்தது. இந்த ஓவியப் போட்டி களில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பறவைகள், பூக்கள் தலைப்பு களிலும், நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரை பழங்கள் காய்கறிகள் தலைப்புகளிலும், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இயற்கை காட்சிகள் என்ற தலைப்பு களில் ஓவியப்போட்டிகள் நடைப்பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிச ளிப்பு விழா ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் இயக்குனர் டாக்டர். சுரேஷ்பாபு தலைமையில் நடை பெற்றது. ஸ்ரீ நாராயணி பீடத்தின் தலைமை நிர்வாக அலுவலர் திரு. இராஜசேகர் , நாராயணி மெட்ரிக் பள்ளி முதல்வர் திரு. பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ நாராய ணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத் தின் இயக்குனர் டாக்டர். பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் ஒவ்வொரு பிரிவி லும் ஓவியப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எல்.ஈ.டி டிவி, ஹோம் தியேட்டர் ஆகிய பரிசுகளை வழங்கினார். மாவட்ட அளவிலிருந்து சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் பல்வேறு பள்ளிகளி லிருந்து தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். மேலும் நாராயணி பள்ளிகளின் சார்பாக மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியும் நடை பெற்றது. இதில் முதலிடம் பெற்ற டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி மாணவன் விக்னேஷ்வருக்கு எல்.ஈ.டி டிவியும், இரண்டாம் இடம் பெற்ற துளிப் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் நரேஷ், பிரபு ஆகியோருக்கு ஹோம் தியேட்டர் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தருண், சந்திரகாந்த் ஆகியோருக்கு புளூ டூத் ஆகிய பரிசுப் பொருட்கள் வழங்கப் பட்டன. நாராயணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர்கள் திருமதி . நித்யா, திரு. மோகன சுந்தரம், நாராயணி வித்யாஸ்ரம் பள்ளி துணை முதல்வர்கள் திருமதி. | | அனிதா, திருமதி. ஆற்றல ரசி, நிர்வாக அலுவலர் திரு. ஆதிகேசவன் மற்றும் | ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் முதன்மை முதல்வர் திரு. சீ.முரளீதர் நன்றி கூறினார்.
Comments
Post a Comment