செங்குட்டை ஸ்ரீ வைத்தியசாயி ஆலயம்.
27.1.2020குறை தீர்க்கும் நம் வைத்தியசாயின் 6ஆம் ஆண்டு வருடாபிஷேக வைபவம் மிக சிறப்பாக நடந்தேறியது. 15 விதமான ஹோமங்கள் வளர்க்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து பகல் ஆரத்தி முடிந்து அன்னதானம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது. பின்னர் பாபாவின் மாலை ஆர்த்தி நடைபெற்றது. அதன் பின்னர் மாலை 6.30 மணியளவில் வாரியார் தன் சொற்பொழிவாளர் கவிஞர் திரு.லட்சுமிபதி அவர்களின் "சாய்பாபா வின் அற்புதங்கள் " என்கிற தலைப்பில் மிகச் சிறப்பான உறையை நிகழ்த்தினார். அவருக்கு நமது செங்குட்டை, வைத்தியசாயி கோயிலின் சார்பாக நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. பின்னர் இரவு ஆர்த்தியுடன் 6 வது வருடபிஷேக நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றது. பக்தர்களும் சேவார்த்விகளும் பாபாவின் அருள்ஆசி பெற்றனர்.
Comments
Post a Comment