Posts

Showing posts from January, 2020

வெண்புள்ளிகளைகுணப்படுத்தும் மருந்து

உடம்பில் உள்ள வெண்புள்ளிகளைகுணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன விழிப்புணர்வு இயக்கம் தெரிவித்துள்ளது இதுதொடர்பாக இந்திய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்க செயலாளர் உமாபதி கூறியதாவது .வெண் குஷ்டம் என்ற வெண் புள்ளிகள் நோயல்.அது ஒருவரிடம் இருந்து மற்றொருவர்க்கு தொற்றாது ஆனாலும் இதற்கு மாறான கருத்து சமூகத்தில் பேசப்படுகிறது இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு நிறுவனம் டி.ஆர் டிஒலூகோஸ்கின் என்ற மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளது. இம்மருந்தை 300முதல் 400நாட்கள் வரை தொடர்ந்து எடுத்து வந்தால் வெண் புள்ளிகள் நிரந்தர தீர்வு காண படுகின்றது. இதை பற்றிய விழிப்புணர்வு வேலூரில் வருகிற 2ஆம் தேதி வேலூர் ராஜா தியேட்டர் எதிரில் ஜனனி பிக் பஜார் அருகில் எஸ் கேஎம் ஹாலில் நடைபெறுகிறது பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

அலார்ட் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அலார்ட் 1-2-2020அன்று சத்துவாச்சாரி,காட்பாடி, தொரப்பாடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது, சத்துவாச்சாரியில் பகுதி 1முதல் பகுதி 5வரை காட்பாடி கல்புதூர் வரை தொரப்பாடி, பலவன் சாத்து குப்பம்  பாகாயம் வரையில் மின்கம்பங்கள்  பழுதுபார்க்க இருப்பதால் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது இத்தகவலை மின் துறை துணை பொறியாளர் நடராஜன் தெரிவித்தனர் 

ராணிப்பேட்டை கலெக்டர் நலத்திட்ட உதவி ..

Image
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் புதுப்பாடி உள்வட்டம் கீழ்வேளூர் கிராமத்தில் இன்று (30.1.2020) நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் 199 பயனாளிகளுக்கு   ரூபாய் 1,52,44.818/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச.திவ்யதர்ஷினி  இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் திரு. க. இளம்பகவத் இ.ஆ.ப.அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இம்மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சா திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் பேசியதாவது.இந்த கிராமத்தில் நெல் விவசாயம் சொட்டு நீர் பாசன விவசாயிகள் மாடி தோட்டம் அமைத்தல் விதைகள் குறித்து பேசினார். நெல் விதைகள் நிறைய விதமான நெல் விதைகளை இன்று கண்காட்சியில் பார்த்தேன் அதில் மாப்பிள்ளை சம்பா விதைகள் வந்து உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறதுவெள்ளையாக இருக்கிற அரிசி சர்க்கரை பால் போன்றவற்றை தவிர்த்து நீங்களும் முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவு வகைகளை இப்போது நீங்கள் உபயோகிக்க வேண்டும்எண்ணெய் வகைகள் செக்கில் செக்கில் ஆட்டி அந்த எண்ணெய் வகைகளை நாம் உபயோகப்படுத்த வேண்டும் ஒவ்வொரு விவசாயிக...

திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்து வாழ்த்திய லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள்

Image
இன்று மேல்விஷாரம் தில்லை மஹாலில் நடைபெற்ற MJF.Lion.A.K.ரவி மகன் திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்து வாழ்த்திய லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் MJF. லயன்.V.S தளபதி, MJF.லயன்.M.G.ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் லயன் தி.சண்முகசுந்தரம், வேலூர் கோட்டை மாநகர் லயன்ஸ் சங்க சாசனத்தலைவர் லயன்.சரளாசண்முகசுந்தரம் உள்ளிட்ட லயன்ஸ் முன்னணி தலைவர்கள் மணமக்களை வாழ்த்தியபோது எடுத்த படம் .

சாலை பணியாளர்கள் வாகனத்தில் வருபவர்கள் விழிப்புணர்வு

Image
வேலூர் மாநகரம் செல்லியம்மன் கோயில் அருகே சாலையில் வெள்ளை பெயிண்ட் அடிக்கும் சாலை பணியாளர்கள் வாகனத்தில் வருபவர்கள் விழிப்புணர்வுடன் வருவதற்காகவே சாலையில் இந்த மாதிரி வர்ணம் போடப்படுகிறது வாகனத்தில் வருபவர்கள் சாலையில் பணிகள் செய்யும் பணியாளர்கள் இடையூறு ஏற்படக் கூடாதவகையில் வாகனத்தில் சென்றால் அனைவருக்கும் பாராட்டு க்கள் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது 

கும்பாபிஷேகம்

Image
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி ஆலய கும்பாபிஷேகம் 30.01.2020 காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.

செங்குட்டை ஸ்ரீ வைத்தியசாயி ஆலயம்.

Image
   27.1.2020குறை தீர்க்கும் நம் வைத்தியசாயின்  6ஆம் ஆண்டு வருடாபிஷேக வைபவம் மிக சிறப்பாக நடந்தேறியது. 15 விதமான ஹோமங்கள் வளர்க்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து  பகல் ஆரத்தி முடிந்து அன்னதானம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது. பின்னர் பாபாவின் மாலை  ஆர்த்தி நடைபெற்றது. அதன் பின்னர் மாலை 6.30 மணியளவில் வாரியார் தன் சொற்பொழிவாளர் கவிஞர் திரு.லட்சுமிபதி அவர்களின் "சாய்பாபா வின் அற்புதங்கள் "  என்கிற தலைப்பில் மிகச் சிறப்பான  உறையை நிகழ்த்தினார். அவருக்கு நமது செங்குட்டை, வைத்தியசாயி கோயிலின் சார்பாக நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.   பின்னர் இரவு ஆர்த்தியுடன் 6 வது வருடபிஷேக நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றது. பக்தர்களும்  சேவார்த்விகளும் பாபாவின் அருள்ஆசி பெற்றனர்.  

புத்தகப் பயிற்சி நடைபெற உள்ளது.

Image
வேலூர் வேலம்மாள் போதி வளாக பள்ளியில் வரும் 29ஆம் தேதி புத்தகப் பயிற்சி நடைபெற உள்ளது இதில் சிறப்பு விருந்தினராக திரு எஸ் ஏ கலியமூர்த்தி ஐ பி எஸ் அவர்கள் கலந்துகொண்டு வேலூர் மாநகர சுற்றுவட்டார பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் சிறப்புரை ஆற்ற வருகிறார் சிறப்பானது மாலை நாலு முப்பது முதல் 7 மணி வரைஇந்நிகழ்ச்சி  நடைபெறும் அனுமதி முற்றிலும் இலவசம் வருக வருக அனைவரும் வருக

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்

Image
வேலூர் நகராட்சி வளாகத்தில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த்  அலுவலகத்தை தி.மு.கழக பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தபோது எடுத்த படம். அருகில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி்.எம்.கதிர்ஆனந்த்,  வேலூர் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி,  ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வேலூர் மாவட்ட கழக செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. திருப்பத்தூர் மாவட்ட தி.மு. கழக பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், ஆற்காடு எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் மற்றும் கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சிறந்த காவல் பணிக்கான குடியரசுத் தலைவர் விருது

Image
 சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ராஜேஸ்வரிக்கு சிறந்த காவல் பணிக்கான குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. ராஜேஸ்வரி காமராஜர் அமைச்சரவையில் போலீஸ் மந்திரியாக இருந்த கக்கனின் பேத்தி என்பதுகுறிப்பிடத்தக்கது.

வட்டார போக்குவரத்து அலுவலகம் சாலையில் கொண்டாடப்பட்டது.

Image
இன்று குடியரசுதினம் முன்னிட்டு வேலூர் மாநகர் மாவட்டம் 2வது மண்டல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்துவாச்சாரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாலையில் கொண்டாடப்பட்டது மண்டலத்தலைவர் லயன்.வி.பழனி தலைமையில் மாநகர் மாவட்ட துணைத்தலைவர் லயன்.தி.சண்முகசுந்தரம் முன்னிலையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தொழிலதிபர் திரு.ஆர்.ஜெயராமன் அவர்கள் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

 ஸ்ரீ அய்யலு ஆச்சாரியார் ஜீவசமாதி

Image
 ஸ்ரீ அய்யலு ஆச்சாரியார் ஜீவசமாதி ஆலயம் -பேரி காளியம்மன் கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம் அருகில்,  வேலூர் #.. 400 ஆண்டுகளாக வழிபாடு இல்லாமல் இருந்த வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்ய காரணமான சித்தர் அய்யலு ஆச்சாரியார்  அவர்கள் ஜீவசமாதி அடைந்த   தை மாதம் சத்யம் நட்சத்திரமான வருகின்ற 27-1-2020 திங்கட்கிழமை அன்று  மேற்படி ஆலயத்தில் சித்தர் ஸ்ரீலஸ்ரீ அய்யலு ஆச்சாரியாரின் குரு பூஜை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சித்தர் அய்யலு ஆச்சாரியாரின் அருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .

குடியரசு தினத்தை முன்னிட்டு

Image
இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் தோட்டப்பாளையத்தில் அப்புபால் பாலாஜி அவர்கள் தேசிய கொடி ஏற்றினார். அருகில் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது .

திருவள்ளுவர் விழா.

Image
தமிழியக்கம் வேலூர் மாவட்ட கிளை சார்பாக திருவள்ளுவர் விழா, மொழி ப்போர் ஈகியர் வீர வணக்க நாள் விழா வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்டிஒ சாலையில் கொண்டாட பட்டது. இந்நிகழ்ச்சியைவேலூர் மாவட்ட தமிழியக்கம் செயலாளர் அ.திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழியக்கம் மாநில செயலாளர் மு.சுகுமார் தொடக்கவுரைஆற்றினார்.தமிழியக்கம் வேலூர் மாவட்ட இணை செயலாளர் கவிஞர் த.அன்பு வரவேற்பு ஆற்றினார். தமிழியக்கம் தலைவர், நிறுவனர் வேந்தர் கல்வி கோ டாக்டர் கோ.விசுவநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழியக்கம் பொது செயலாளர் கவிஅருவி அப்துல் காதர் அவர்கள் சிந்தனை பந்தயம் என்ற தலைப்பில் எழுச்சி யுரை ஆற்றினார். தமிழியக்கம் வேலூர் மாவட்ட கிளை பொருப்பாளர் வீ.இராசேந்திரன் நன்றி யுரை ஆற்றினார். வேலூர் மாவட்ட தமிழியக்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மேலும் இவ்விழாவிற்கு தொழில் அதிபர் திரு. சோலை நாதன்,திரு.  த.வ.சிவசுப்பிரமணியன் சாந்திநிகேதன் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திறளாக கலந்து கொண்டனர்

ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில்

Image
இன்று 26ஆம் தேதி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீசத்குருதியாகராஜசுவாமிகளின் 173வது ஆண்டு ஆராதனை விழாமுன்னிட்டுவேலூரில்ஸ்ரீஜலகண்டேஸ்வரர்ஆலயத்தில்34வதுஆண்டுஆராதனைவிழாநிகழ்ச்சி26ம்தேதி காலை 9மணிக்கு நடைபெற்றது  இந்நிகழ்ச்சியில் பக்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .  

தெரிந்துக்கொள்வோம்  ஐந்துஐந்துஐந்து 

தெரிந்துக்கொள்வோம்  ஐந்துஐந்துஐந்து  1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை. 6.பஞ்சதிராவிடர் தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர். 7.பஞ்சபட்சி வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில். 8.பஞ்சபுராணம் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம். 9.பஞ்சரத்தினம் வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம். 10.பஞ்சவர்ணம் வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை. 11.பஞ்சாங்கம் கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம். 12.பஞ்சமூலம் செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு. 13.பஞ்சபாதகம் பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை. 14.பஞ்சபாணம் முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம். 15.பஞ்சாயுதம் சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில். 16.பஞ்சபரமோட்டி அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள். 17.பஞ்சசிகை தலை, உச்சி...

திருச்செந்தூர் முருகன் கோயில்.

Image
திருச்செந்தூர் முருகன் கோயில். நாழிக்கிணறு. கடற்கரையின் நிலப்பரப்பிற்கு அடியிலுள்ள நீர் கடல் மண்ணிணால் வடிகட்டப்பட்டு உவர்ப்பு நீங்கி இனிப்பு சுவையுடன் உருவெடுக்கிறது.  அதனால்தான் நாழிக்கிணற்றில் சுவையான தண்ணீர் கிடைகிறது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  இவர்களது ‘அறிவியல்’ கருத்து சரியாக இருந்தால் திருச்செந்தூர் கடற்கரையை ஒட்டியுள்ள அனைத்து கிணறுகளிலும் நல்ல சுவையுடன் தண்ணீர் இருந்திருக்க வேண்டும்.  மாறாக கடல் தண்ணீரைவிட அதிகமான உப்புதன்மையுடன் அல்லவா  தண்ணீர்  இருக்கிறது?  அது ஏன்? நாழிக்கிணற்றில் மட்டும் தண்ணீர் வடிகட்டபடுவதர்க்கு காரணம் என்ன?   முருகப்பெருமான் தனது படைவீரர்களின் தாகத்தினை தீர்ப்பதற்காக தன் வேலினால் இந்த கிணற்றை உருவாக்கியதாக கூறப்படும் புராணக்கதையை கிண்டல் செய்து ஒருவர், நாழிக்கிணறு இயற்கையாக அமைந்த ஊற்று என்றும் செயற்கையாக யாரும் உருவாக்கவில்லை என்று கருத்து தெரிவிக்கிறார்.  ஆனால் தரை மட்டத்திலிருந்து 35 அடிகள் தோண்டியபின் கிடைக்கும் ஊற்றை யாரும் இயற்கையாக அமைந்த ஊற்று என்று கூறுவதில்லை!  செயற்கையாக தோண்டப்பட்...

103 வது பிறந்த நாள் விழா

Image
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சி தலைவர். பரத ரத்னா டாக்டர் எம.ஜி.ஆர். அவர்களின் 103 வது பிறந்த நாள் விழா மாபெரும் பொது கூட்டம் இராணிபேட்டை நகர கழகம் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்த போது எடுத்த படம் .

வேலம்மாள் போதி வளாக பள்ளியில்.

Image
வேலூரில் இயங்கிவரும் வேலம்மாள் போதி வளாக பள்ளியில் கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளிலும் Art season 1-2 சிறப்பாக நடைபெற்றது.  அதுபோலவே இந்த கல்வி ஆண்டிலும் 2019-2020 25.01.2020 அன்று காலை 9.00 மணி அளவில்Art season வேலம்மாள் பள்ளியில் பல்வேறு நிகழ்வுகள் மூலமாக சிறப்பாக நடைபெற உள்ளது பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 8 1 2 4 3 51111 பங்கு பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களுடன் கூடிய பரிசும் வழங்கப்படும். அனுமதி இலவசம்.

நாட்டு நலப்பணி திட்டம்

Image
வேலூர் அக்சிலியம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் வேலூர் மாவட்ட காவல் துறை இணைந்து சாலை பாதுகாப்பு, பெண்  குழந்தைகள் தினம், தேசிய வாக்காளர் தினம் என முப்பெரும் விழிப்புணர்வு குறித்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காட்பாடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.துரைபாண்டி தலைமை தாங்கினார். திரு.கோபால் முதன்மை கிளை மேலாளர் யுனைடெட் இந்தியா காப்பீட்டு கழகம், திரு. பாலாஜி காவல் துறை போக்குவரத்து ஆய்வாளர், திருமதி.தீபிகா காவல்துறை இணை ஆய்வாளர், திரு.தத்துப்புத்திரன் வழக்கறிஞர் ஆகியோர்  கருத்துரை வழங்கினர்.  நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர்.அமுதா, திருமதி.காயத்ரி,  திருமதி.உமா மகேஸ்வரி பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன்.

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம் - போன்  சென்னை மாவட்டம் 01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706. 02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151. 03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670. 04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477. காஞ்சிபுரம் மாவட்டம் 05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084. 06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006.  07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108. 08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084.  09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664.  10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619. 11. தெய்...

இந்தபாடல்வரிகள்  கிடைப்பது கடினம்  எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

இந்தபாடல்வரிகள்  கிடைப்பது கடினம்  எழுதிவைத்துக்கொள்ளுங்கள். அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம் அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம் சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும் அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கும் ஆனை முகனை தொழுதால் நவகிரகங்களும் மகிழும் நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும் ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும் சூரியன் முதலாய் ஒன்பது கிரகமும் பல வித குணங்களை கொண்டிருக்கும் எங்கள் கற்பக கருவில் அவை வரும் போது ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும் நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும் சூரிய பகவான் ஒளி முகம் காண பிள்ளயார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும் கதிரவன் ...

வேலூரில் நேதாஜி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்....

Image
வேலூரில் நேதாஜி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.  இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக நேதாஜி-யின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேலூர் சேபன்பாக்கம் பகுதியில் கோட்டத் தலைவர் மகேஷ் முன்னிலையில் டி.கே.டி சீனிவாசன் தலைமையில் ஆதி மோகன் வரவேற்புரையில் சி.எம் வெற்றிவேல் முன்னிலையில் கைலாஷ் தனசேகர் அவர்கள் முன்னிலையில் ஹிந்து ஆட்டோ சங்கம் முன்னணி தலைவர் சுதாகர் முன்னணியில் அந்தப் பகுதி மக்களோடு இணைந்து இனிப்பு வழங்கி அவருடைய பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் பேனா எழுதுகோல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.  

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு.

Image
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு. வேலூர் காட்பாடி அருகே உள்ள வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் புதன்கிழமை திடீரென ஆய்வு செய்தார். அங்குள்ள பிரசவ வார்டிற்கு சென்று கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் மகப்பேறு நிதி உதவி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறீர்களா நிதிஉதவி முறையாக கிடைக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வார்டுவார்டாக சென்றுபார்வையிட்டார். அங்குள்ள போர்வெல் சீரமைத்து கூடுதலாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார் மேலும் அதன் அருகே கட்டப்பட்டு வரும் மருத்துவர் குடியிருப்பு கட்டிட பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்து டாக்டரிடம் கேட்டறிந்தார்.

சிலம்பக்கலையில் 3.5வயது திவிஷா உலகசாதனை

Image
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி நேரு நகரை சேர்த்த S. R. L. விக்னேஷ்வரராவ் அவர்களின் மகள் V. திவிஷா  வயது 3.5  இவள் india of Records சாதனை புத்தகத்தில்  சிலம்பக்கலையில்  உலகசாதனை  படைத்துள்ளாள்  இவள் OMS சிலம்ப பள்ளியில் பயிற்சிமேற்கொண்டு வருகிறாள்  OMS சிலம்ப பள்ளி 1938   ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது   S. R. L. விக்னேஸ்வரராவ்  இந்த சிலம்ப பள்ளியின்  7தலைமுறை  பயிற்சியாளர்  இவரது தந்தை  S. R. லோகுராவ்    இந்த சிலம்ப பள்ளிமாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர்   இவர்கள் மாவட்டம் மற்றும் தேசிய அளவிலான  போட்டிகளில் பல்வேறு பதக்கத்தை குவித்து நம்முடைய வேலூர் மாவட்டத்திற்கும்  தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துஇருக்கிறார்கள் சாதனை படைத்த குழந்தை திவிஷா வை வேலூர் மாவட்ட கலெக்டர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் வாழ்த்து தெரிவித்து திவிஷா வை கொஞ்சி மகிழ்ந்த போது எடுத்த படம் 

நடிகர் சந்தானம் பிறந்தநாள்

Image
ஜனவரி21 வீரத்தமிழன் சந்தானம் அண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு வாலாஜாவிற்க்கு வருகை புரிந்த ரசிகர்களுக்கு நன்றி குறிப்பு ரசிகர்களுக்கு இந்த அறிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தத நமது குடும்பதலைவர் வேலூர் மாவட்ட தம்பிகளின் தெய்வம் அண்ணன் கு.குமரவேல்BABL மாநில தலைவர் அவர்களுக்கு மனமார்ந்தநன்றி களையும் மற்றும் அகிலஇந்தியதலைமையின் அழைப்பையும் வேலூர்மாவட்டபொருப்பாளர்கள் அழைப்பையும் ஏற்று வந்த என் அன்பு அண்ணன்களுக்கும் தம்பிகளுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வேலூர்மாவட்டதலைமைசந்தானரசிகர்மன்றத்தின் சார்பிலும் ராணிப்பேட்டை மாவட்டம் சார்பிலும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.    

போக்குவரத்து பிரிவு சாலை பாதுகாப்பு வாரவிழா - 2020

Image
வேலூர் மாவட்ட காவல்துறை காட்பாடி சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவு சாலை பாதுகாப்பு வாரவிழா - 2020 முன்னிட்டு இலவச கண்சிகிச்சை மருத்துவ முகாம்..  தலைமை : திரு.எஸ்.கே. துரைப்பாண்டியன். காவல்துறை கண்காணிப்பாளர். முன்னிலை : திரு.புகழ் .காவல் ஆய்வாளர் . நாள் :22.01.2020  இடம் : ஸ்ரீ நாராயண திருமண்டபம் , சித்தூர் பஸ் நிலையம் , காட்பாடி.  நேரம் : காலை 10 மணி முதல் கண்சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது...

புத்தக கண்காட்சியில் வேலூர் வைத்தியர் பாஸ்கரனுக்கு பரிசு...

Image
புத்தக கண்காட்சியில் வேலூர் வைத்தியர் பாஸ்கரனுக்கு பரிசு வேலூர், ஜன. 22 சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 43-வது புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய “காற்றலையில் கண்ணதாசனின் பாட்டு தேரோட்டம்” மற்றும் டாக்டர் ஃபஜிலா ஆசாத் எழுதிய “24 சிt. (கேரட்) வாழ்க்கை” நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் டிவி புகழ் ரங்கராஜ் பாண்டே, கற்கண்டு இதழின் ஆசிரியர் லேனா ரவி, மதுரா டிராவல்ஸ் பாலன், வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் டாக்டர் கே.பி.அருச்சுனன் மருத்துவமனை நிர்வாகியான டாக்டர் டி.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  இதில் காவிரிமைந்தன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்தி நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார்.

புதிய பஸ் நிலையம் தற்காலிக மாக மாற்றம்.

வேலூர் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ46கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு கடந்த மாதம் காலி செய்ய நோட்டிஸ் கொடுக்க பட்டது. இந்த நிலையில் இரு சக்கர வாகன நிறுத்திட தடை விதிக்க பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தில் செல்லியம்மன் கோயில் பின் புறம் தற்காலிக பஸ் நிலையம் இயக்க வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர் அதன் படி தார் சாலை அமைக்கும் பணிகளை தொடக்கி உள்ளன .

படவேடு ஸ்ரீ சொளடேஸ்வரி

Image
 20-1-2020 அன்று படவேடு ஸ்ரீ சொளடேஸ்வரி  தேவஸ்தான ஸ்ரீ மஹா சண்டி ஹோம நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்ரீ துர்கா அம்மா அருள் ஆசி வழங்கிய நிகழ்வு.

பாராளுமன்றஉறுப்பினர் அலுவலகத்தைமன்னின் மைந்தர்.

Image
இன்று வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில்  திறக்கப்பட இருக்கும் வேலூர்பாராளுமன்றஉறுப்பினர் அலுவலகத்தைமன்னின் மைந்தர் கழக பொருளாளரும், வேலூர்  M.P,  அவர்களும் பார்வையிட்டபோது.எடுத்த படம் .

நினைவில் நின்றவை.

Image
பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறப்பு பேட்டி சுமார் 1965ம் ஆண்டு வாக்கில், பேரறிஞர் அண்ணா அவர்கள்,  பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது பாராளுமன்ற கூட்டத் தொடர்  நடந்து கொண்டிருந்த சமயம். அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா டபுள் M.A. படித்து, ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர். பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக அவர் ஆங்கிலத்தில் பேசுவார்.  அந்தசமயம் ஒரு இளவயது  டெல்லி பத்திரிகை நிருபர் ஒருவர் பாராளுமன்றத்தைவிட்டு  வெளியே வந்த அண்ணாவிடம்,  "நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்..." என்றார். அண்ணாவும் பேட்டிகொடுக்க  சம்மதித்து, பேட்டிக்கு தயாரானார்.  நிருபர் துணிச்சலாக  "உங்களிடம் எதைப்பற்றி கேள்வி கேட்டாலும்,  சுலபமாக உடனே பதில் சொல்வீர்களாமே... நான் கேட்கும் கேள்விக்கு  உங்களால் பதில் சொல்லமுடியுமா?" என்றார்.  அண்ணாவும் "கேளுங்க தம்பி..."  என்றார் ஆங்கிலத்தில்.  உடனே நிருபர் கேட்டார்... "ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு  "A" என்ற எழுத்தே இல்லாமல்  உங்களுக்கு பதில் சொல்லத் தெரியுமா?" என்றார்.  உடனே அண்ணா...

மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா

Image
வேலூர், Dr.அம்பேத்கர் நகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் திரு. குமார் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். ஆசிரியர் திரு. மோகன்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கவிஞர். இலக்குமிபதி அவர்கள் சிறப்புரையாற்றினார். விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகளும், மாணவர்களின் கணகவர் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் சர்க்கரை பொங்களும், கரும்பும் வழங்கப்பட்டு ஆசிரியை திருமதி. லாவண்யா அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிந்தது.  

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு பிரபல கொரியர் நிறுவனத்திற்க்கு திருவண்ணாமலைபகுதி சுற்றி சுற்றி குறிப்பிட்ட சில பகுதிக்கு மட்டும் டெலிவரி செய்ய ஆண்கள் தேவைபடுகிறது.ஆர்வமுள்ள வர்கள் இந்த நம்பரை தொடர்புகொள்ளலாம்7810997410 சமூக நலன் கருதி இந்த பதிவு.

பிரச்சினைகளை தீர்க்கும் எள். சித்த மருத்துவர் பாஸ்கரன் சத்துவாச்சாரி வேலூர்

Image
பிரச்சினைகளை தீர்க்கும் எள்... தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. “இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் என்பது மருத்துவ பழமொழி.” தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எள்ளில் 20 சதவீதம் புரதமும், 50 சதவீதம் எண்ணெயும், 16 சதவீதம் மாவு பொருட்களும் உள்ளன. ஆராய்ச்சி ஒன்றில் எள்ளு விதை மற்றும் நல்லெண்ணெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. எ...

103 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி.

Image
வேலூர் தோட்டப் பாளையம்29வதுவட்ட அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய 103 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி மாவட்ட பிரதிநிதி ஆட்டோ Bராஜிமுன்னிலையில் வட்ட அவைத்தலைவர் பச்சையப்பன் தலைமையில் பொருளாளர் கே ரவி அவர்கள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் எம்ஜிஆர் மன்ற   பொருளாளர் சுப்பிரமணி பொட்டு மணி மணி மற்றும் லஷ்மணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

ஆன்மீக இளைஞர்கள்

Image
வேலூர் தோட்ட பாளையத்தில் ஆன்மீக இளைஞர்கள் தினம்தோறும் காலையில் இருந்து துரோபதி அம்மன் கோவில் எதிரில் இருக்கும் இடத்தில் மரங்கள் செடிகளை பராமரித்து வருகிறார் பராமரிப்பவர்கள் தேவன் சத்தியமூர்த்தி மற்றும் பல இளைஞர்கள்.

அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன்

Image
வேலூர் சத்துவாச்சாரி அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் வேலூர் கோட்டை மாநகர் லயன்ஸ் சங்கம் சார்பில் " சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்விழா " நடைபெற்றது. சங்கத்தலைவர் லயன்.ச.மணிபாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஊர் பெரியதனம் வேணுகோபால் முதலியார் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். கவிஞர்.ச.இலக்குமிபதி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மண்டலத்தலைவர் லயன்.ராஜு, வட்டார தலைவர் லயன்.தேவதாஸ், மாவட்ட தலைவர்கள் லயன்.தி.சண்முகசுந்தரம், மனோகரன், வெங்கடேசன்,தேசி, சங்க பொங்கல் விழா சேர்மென் லயன்.எம்.ஜெயவேலு, முன்னாள் தலைவர்கள் சுமதி மனோகரன், சுதாகர்,ஜீவரத்தினம், சங்க செயலாளர் லயன்.கேசவன், சங்க பொருளாளர் லயன்.காசி  மற்றும் சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர்.

Image
வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு அலங்காரம் ஆராதனைகள் கோ பூஜை மற்றும் திருவுடல் பார்த்தால் மறு உடல் இல்லை நாடகத்துடன் காட்சி

திருவள்ளுவர் சிலைக்கு மாலை.

Image
வேலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு வேலூர் மாவட்ட அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணதிலக் செயலாளர் முருகன் துணைத் தலைவர் வெற்றிவேல் மற்றும் உறுப்பினர் பிரசாந்த் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  

தைப்பூச நன்னாளில் வடலூரில் ஒளி வழிபாடு

Image
தைப்பூச நன்னாளில் வடலூரில் ஒளி வழிபாடு "அருட்பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி” தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவுநாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், தைப்பூச ஒளி வழிபாட்டு விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப் படுகிறது. முருகனை நினைத்துருகிக் கண்ணாடியில் அவன் காட்சியைக் கண்ட வள்ளலார் இராமலிங்க அடிகளார், தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய நாள் வடலூரில் வள்ளலாருக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று சிறப்புப் பூசனைகளும் அன்னதானமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. 'ஒளிக் காட்சி காண மக்கள் அலை அலை யாக வடலூருக்கு வருகை தருவார்கள். கருங்குழிக்குப் பக்கத்தில் வடலூரில் பார்வதிபுரம் என்னும் ஊர் மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867ஆம் ஆண்டு, மே மாதம் 23ஆம் நாளன்று அங்கு சமரச வேதத் தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகு...

பொங்கல் திருநாளில் கரும்பு 

Image
பொங்கல் திருநாளில் கரும்பு  தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளில் கரும்பு முக்கிய இடம் பெறுகிறது.  கரும்பில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ், பிளேவனாயிட்ஸ், பினோலிக் போன்ற சத்துக்கள் உள்ளன. 1. ஏராளமான தாது சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். 2. கரும்பு சாறு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீரக தொற்று நோய் குணமாகும். 3.கரும்பை மென்று சாப்பிட்டால் பற்கள் உறுதி பெறும், வாய் துர்நாற்றம் போகும். 4. வயிற்றின் அமில சுரப்பை சமன் செய்து செரிமான தன்மை அதிகரிக்கும். 5. மாரடைப்பு வராமல் தடுத்து இதயத்தை பாதுகாக்கும்.  6. உடல் எரிச்சலை போக்கும்.  7.தோல் நோய்கள் சரியாகும்.சருமம் பளபளப்பாக இருக்கும். 8. மூளைக்கு சுறுசுறுப்பு கிடைக்கும் . 9. இதில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் கர்பிணி பெண்கள் சாப்பிட பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். 10. கரும்பு சாம்பலால் பல்துலக்க பற்கள் வெண்மையாகவும் உறுதியாகவும் இருக்கும்.  

ஸ்ரீ நாராயணி பள்ளியில் ஓவியப் போட்டி

Image
ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் திரு. பாலாஜி பரிசுகளை வழங்குகிறார். உடன் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் இயக்குநர் திரு. சுரேஷ்பாபு மற்றும் முதன்மை முதல்வர் சீ.முரளீதர். ஸ்ரீ சக்தி அம்மாவின் 44 வது ஜெயந்தியை முன்னிட்டு வேலூர், ஸ்ரீபுரத்திலுள்ள நாராயணி பள்ளிகள் மற்றும் ஹலோ எப்.எம் (Hello FM) இணைந்து மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகள் ஸ்ரீ நாராயணி பள்ளியில் நடந்தது. இந்த ஓவியப் போட்டி களில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பறவைகள், பூக்கள் தலைப்பு களிலும், நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரை பழங்கள் காய்கறிகள் தலைப்புகளிலும், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இயற்கை காட்சிகள் என்ற தலைப்பு களில் ஓவியப்போட்டிகள் நடைப்பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிச ளிப்பு விழா ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் இயக்குனர் டாக்டர். சுரேஷ்பாபு தலைமையில் நடை பெற்றது. ஸ்ரீ நாராயணி பீடத்தின் தலைமை நிர்வாக அலுவலர் திரு. இராஜசேகர் , நாராயணி மெட்ரிக் பள்ளி முதல்வர் திரு. பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ நாராய ணி...

வேலூர்  தோட்டப்பாளையம் தர்மராஜா ஆலயத்தில்

Image
வேலூர்  தோட்டப்பாளையம் தர்மராஜா ஆலயத்தில் சபரிநாதன் பக்தசபை பக்தர்களளால் சபரிமலை மகர ஜோதி போன்று ஆலயத்தில் பக்தர்களுக்கு ஜோதி காண்பித்த காட்சி.

பொங்கல்  தரிசனம்.

Image
பொங்கல்  தரிசனம் தோட்டப்பாளயத்தில்செல்வவிநாயகர் ஆலயத்தில் திரளான பொது மக்கள் ஸ்ரீசெல்வவிநாயகரைதரிசனம்செய்தபோதுஎடுத்தபடம்.

லயன்ஸ் சங்கம் சார்பில் பொங்கல் விழா.

Image
 வேலூர் சத்துவாச்சாரி அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் வேலூர் கோட்டை மாநகர் லயன்ஸ் சங்கம் சார்பில் " பொங்கல் விழா " நடைபெற்றது. சங்கத்தலைவர் லயன்.ச.மணிபாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழா  சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள், கோலப்போட்டி, பொங்கல் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் கலைமகள்.சு.இளங்கோ சுவாமி விவேகானந்தர் பற்றி சிறப்புரை ஆற்றினார். புலவர் வேலூர் மா.நாராயணன் பொங்கல் விழா பற்றி சிறப்புரை ஆற்றினார். தொழிலதிபர் ஆர்.ஜெயராமன் அவர்கள் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஊர் பெரியதனம் வேணுகோபால் முதலியார் பொங்கல் விழா தொடங்கிவைத்து அன்னதானம் வழங்கினார். மண்டலத்தலைவர் லயன்.ராஜு, வட்டார தலைவர் லயன்.தேவதாஸ், மாவட்ட தலைவர்கள் லயன்.தி.சண்முகசுந்தரம், மனோகரன், வெங்கடேசன்,தேசி, சங்க பொங்கல் விழா சேர்மென் லயன்.எம்.ஜெயவேலு, சங்க செயலாளர் லயன்.கேசவன், சங்க பொருளாளர் லயன்.காசி  மற்றும் சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

பொங்கலோ பொங்கலோ.

Image
" தைப் பொங்கல்," மங்கள நன்நாள் மகிழும் பொன்நாள். பொங்கலோ பொங்கலென்று உள்ளம் பொங்கிஎழும்நன்நாள். இனிப்பான சர்க்கரையை இதயத்தில் இட்டு . அதனால் உள்ளத்திலிருந்து மகிழ்வாய் உதட்டிலிருந்து சுவையான வார்த்தை பொங்கிவர. செவியால் கேட்டுசுவைத்த  சொல்லால் வாழ்க்கையலாம் இன்பமுற. மங்கள முகத்தாளாய் மஞ்சளதை மண்சட்டியில் அதை பூச எதிர்வரும் நோயல்லாம் நில்லாது அது ஓட. மனிதரெல்லாம் புத்தாடை புகுத்திநம் தமிழர்நலம்காட்டி. உழைத்த பயன் உழவர்நிதம் கிடைத்திடவே உள்ளாழ்ந்த மகிழ்வோடு சிறப்பிக்க அன்பான உள்ளத்தால் வாழ்த்துகிறேன் . தமிழார்வன் ஆ.ஜோசப் அன்னையா