குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்..

குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்


குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களின் கேள்விகளில் பெரும்பான்மையாக இருப்பது  குழந்தைகளின் கல்வி பற்றிய கேள்விகளே . மேலும் பல குடும்பத்தில் கல்வி முன்னேற்றத்திற்காக பெற்றோர் குழந்தைகளுக்கு சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தாலும் காலையில் பள்ளிக்கு கிளம்பவே நேரம் சரியாக இருப்பதால் பல குழந்தைகள் மந்திரம் ஜெபிக்க முடியாமல் போகிறது. பெற்றோராகிய நாமும் குழந்தைகளுடன் இருந்து  காலைப்பொழுதில் மந்திரங்களை ஜெபம் செய்யலாம்  என்றால் பெற்றோர்களுக்கு காலையில் குழந்தைகளை கிளப்பி பள்ளிக்கு அனுப்பவே நேரம் சரியாக இருப்பதால் இருவரும் ஒன்றாக இருந்து ஜெபிக்க வாய்ப்பு அமைவதில்லை. எனவே குழந்தைகளுக்காக முடிந்த நேரத்தில் பெற்றோர் மந்திரம் சொல்லி வேண்டிக் கொள்ளலாமா என்ற கேள்விக்குப் பதிலாக இந்த மந்திரத்தைப் பதிவிட்டிருக்கிறேன். இந்த மந்திரத்தை அதிகாலையில் ஜெபிப்பது சிறப்பு இல்லையென்றால் எப்பொழுது முடியுமோ அப்பொழுது ஜெபியுங்கள் ஆனால் குரு மற்றும் புதன் ஹோரையில் ஜெபிப்பது  நிறைவான பலனை தரும்...


ஓம் கம் கணபதயே நமஹ மம புத்ரஸ்ய புத்தி தேஹி தேஹி ஹூம் பட்.....


 வளர்பிறை புதன்கிழமை அன்று  தொடங்கி ஒவ்வொரு புதன்கிழமையும்   இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும். கிழக்கு பார்த்து ஜெபிக்கவும்.


என் மகன் / மகள் ( உங்கள் குழந்தையின் பெயர் குறிப்பிடவும்) கல்வி வளர்ச்சிக்காக இந்த மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று பிரார்த்தனை செய்து கொண்டு ஜெபிக்க ஆரம்பிக்கவும் .


வெற்றிலை,பாக்கு,அவல்,பொரிகடலை,பால்,பழம் படைக்கவும். 


 வாழ்கவளமுடன் .....


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.