அங்கன்வாடி மையத்திற்கு உதவி
அங்கன்வாடி மையத்திற்கு உதவி
முகநூலில் நாங்கள் செய்யும் சமூக சேவைகளை பார்த்து வந்த வேலூரைச் சேர்ந்த முகநூல் நண்பர் தன் வீட்டில் பயன்படாமல் உள்ள நிறைய புதிய பாத்திரங்களை இல்லாதவர்களுக்கு கிடைக்குமாறு கேட்டுக்கொண்டதின் பேரில்,
வேலூர் புதிய வசூர் மற்றும் இரங்காபுரம் பகுதியில் உள்ள இரு அங்கன்வாடி மையத்திற்கு(பால்வாடி) சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள சேர், டீ ட்ரம், குடம், தட்டு, குக்கர், அண்டா முதலிய பாத்திரங்கள் இலவசமாக அங்கன்வாடி ஊழியரிடம் வழங்கப்பட்டது. மொத்தம் 50 ஏழைக் குழந்தைகளுக்கு இது பயன்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருட்களை வழங்கியவர்: திரு.பாலாஜி. நீங்கள் பதிவிடும் வாழ்த்துக்கள் அனைத்தும் இவரையே சேரும்.
Comments
Post a Comment