உலர்திராட்சையின்பயன்கள்

 உலர்திராட்சையின்பயன்கள்..


உலர்திராட்சையை பால் அருந்திய பிறகு சாப்பிட்டதனால் ஏற்பட்ட நல்ல விளைவுகளை  பகிர்ந்து கொள்கிறேன்.


முதலில் இருந்த பிரச்சினைகளை சொல்லிவிடுகிறேன்.


1) மூக்கடைப்பு
( இரவில் சளி மூக்கை அடைப்பதோடு மூச்சும் அடைக்கும்)


2)படிப்பில் கவனமில்லை (அதவாது மனதை ஒரு நிலை படித்தி படிக்க முடியவில்லை)


3)சைனஸ்−தலையில் நீர்க்கோர்வை
(ஜஸ் கலந்த குளிரான பொருட்களை சாப்பிட்டால் உடனே சளித்தொல்லை, சுரம்)


4)படப்படப்பு ( சிறிய விஷயமானாலும் டென்சன், அதீத இதயத்துடிப்பு.


5)உடல் பலவீனம்.


நான் உலர்திராட்சையை  சாப்பிட ஆரம்பித்த நாளிலிருந்து ஒரு வாரத்தில் மூக்கடைப்பு சரி ஆனது.


இரண்டு மாதத்தில்
படப்படப்பு, இதயத்துடிப்பு சீரானது.


3வது 4வது மாதத்தில்
சைனஸ் பிரச்சினை சரி ஆனது.
ஜஸ் சாப்பிட்டாலூம் சளி பிடிக்கவில்லை.


5,6 வது மாதத்தில் உடல் பலமானது எனக்கு தெரிந்தது.


அதே 5வது 6 வது மாதத்தில் உலர்திராட்சையை பாலுடன் சேர்த்து சாப்பிட்டபோது
எனது நினைவுத்திறன் 200,300மடங்கு அதிகமானது.


படித்தால் மண்டையில் பதியாதது எல்லாம் சாதரணமாக பதிந்தது.


உலர்திராட்சியை சாப்பிடுவதற்கு முன் ஒரு அரசு போட்டித்தேர்வில் கூட வெற்றி பெறாத நான் உலர்திராட்சையைசாப்பிட்ட பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டுமுறை தேர்ச்சி பெற்றேன்.


வனக்காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.


tnpsc group iv, ii a  தேர்வுகளில் வெற்றிப்பெற்றேன்.
ஆய்வக உதவியாளர் தேர்வில் சேலம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றேன்.


நான் வாழ்க்கையில் வெற்றிப்பெற  காரணமாக இருந்தது இந்த உலர்திராட்சையே.


உலர்திராட்சை சாப்பிடுவதால் டெங்கு வராது.


மஞ்சள் காமாலை நோய் வராது.


சளி, காய்ச்சல் வரவே வராது.


உடல்வலி முற்றிலும் சரியாகி புத்துணர்வை தூண்டும்.


இதயத்தை பலப்படுத்துகிறது.


இரத்தத்தை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்புத்திறனை அதிகப்படுத்தும்.


குழந்தைகளை படிக்கவில்லை என்றால் கண்மூடித்தனமாக அடிக்கின்றோமே தவிர ஏன் அவர்கள் சரியாக படிக்கவில்லை என்பதை நாம் சிந்திப்பதில்லை.


எப்படி செல்போனில் 8GB மெமரி கார்டை விட 16GB மெமரி கார்டில் அதிகம் பாட்டு, படங்களை ஏற்ற முடிகிறதோ அதே போல் 8GB மெமரி மனித மூளையை 16GB ஆக 32 GB ஆக மாற்றும் திறன் உலர்திராட்சைக்கு உண்டு.


அதாவது உலர்திராட்சையை பாலுடன் சேர்த்த சாப்பிடும்போது
மனித மூளையின் நினைவுத்திறன் பல மடங்கு பெருகுகிறது.


ஆகவே உலர்திராட்சையை தினமுண்பாம்..


வாழ்வியலில் உடல்,உள்ள ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ்வோம்.


நம் சந்ததிகளின் நலம் காப்போம்....


இப்படிக்கு
ம.கிருஷ்ணமூர்த்தி
ஆரோக்கிய விழிப்புணர்வு மையம்
கல்பாக்கம்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.