ஓம் நமோ நாராயணி ஓம் சக்தி நாராயணி பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

ஓம் நமோ நாராயணி ஓம் சக்தி நாராயணி பள்ளிகளில் குழந்தைகள் தின விழா



ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடை பெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் முதன்மை முதல்வர் திரு. சீ. முரளீதர் தலைமை தாங்கினார். ஸ்ரீ புரம் நிர்வாக அலுவலர் ஜெயசந்திரன் முன்னிலை வகித்தார். ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் நிர்வாக அலுவலர் ஆதிகேசவன், ஸ்ரீ நாராயணி வித்யாஸ்ரம் சிபிஎஸ்சி சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் சரவண குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அருள்திரு. ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் கனடா நாட்டின் பக்தர்கள் திரு. ஜான் மற்றும் திருமதி கேத்தி ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இன்றைய இளைஞர்கள் தான் வருங்கால இந்திய நாட்டின் தூண்கள் எனவே இளம் வயதிலேயே மாணவ மாணவிகள் சிறப்பான கல்வியையும், நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொண்டால்தான் எதிர்காலத்தில் அவர்களும் அவர்களுடைய குடும்பமும் நல்ல நிலையை பெற்று வளமான நாட்டை உருவாக்க முடியும் என்று பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் சைல்டு லைன் 1098 உறுதி மொழியை அனைத்து மாணவ மாணவிகளும் எடுத்துக் கொண்டனர். 14.11.2019 இன்று மாலை 7.30 முதல் 8.30 வரை அனைத்து பெற்றோர்களும் டிவி, செல்போன் ஆகிய வற்றை அணைத்து விட்டு தங்களுடைய குழந்தை களுடன் பேச வேண்டும் என்று அறிவுரை வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் 1500 மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துக் கொண்டனர். முடிவில் ஸ்ரீ நாராயணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி முதல்வர் திரு. பால முருகன் நன்றி கூறினார்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.