Posts

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

Image
நடந்து முடிந்த தேர்தல் வாக்குருதின்  படி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாண்புமிகு தமிழ்நாடு முதல்  அமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணமாக ரூபாய் 4000 தரப்படும்  என்று  உறுதி அழுத்திருந்தார்.   அதன்படி இன்று இரண்டாம் கட்டமாக ரூபாய் 2000 மும் மற்றும் மளிகை பொருட்களும்  16-06-2021 அன்று காலை நியாயவிலை கடை  அலுமேலுமங்காபுரம் வார்டு-21 இல் சுரேஷ் விற்பனையாளர் மற்றும் கவுன்சிலர் அருள் தலமையில் பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

Image
  கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாயை தமிழக அரசு அறிவித்த நிலையில் இன்று  முதல்கட்ட 2000 ரூபாய் வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரம் வார்டு 21 இல் சுரேஷ் விற்பனையாளர்  ரேஷன் கடைகள் மூலம் நிவாரண நிதி வழங்கிய பொது எடுத்த படம்.

திருமணத்திற்கு லயன் சேவா சங்கம் சார்பாக செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி...

Image
வேலூர் மாநகரம் அரியூர் பகவத்சிங் தெரு ஏழைக்குடும்பம் N.கணேசன் G.உஷாராணி அவர்களின் மகள் G.சந்தியா திருமணத்திற்கு திருவள்ளுவர் சேவா சங்கம் சார்பாக லயன் செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி வழங்கிய போது எடுத்த புகைப்படம்.  உடன் திருவள்ளுவர் விருது ச.ஸ்ரீதர், மற்றும் குடும்பத்தார் உள்ளனர்.

வேலூர் உதவி கலெக்டர் சே.கணேஷ்-வா.வினுதா திருமண வரவேற்பு...

Image
அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம்,  காட்பாடி ரெட்கிராஸ் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து வேலூர் வருவாய் கோட்டாட்சியரும் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் தலைவருமான சே.கணேஷ்-வா.வினுதா திருமண வரவேற்பு விழா வேலூரில் நடைபெற்றது.  மாண்புமிகு பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர்  மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் வேலூர் மாவட்ட தலைவர் அ.சண்முகசுந்தரம், விஐடி பல்கலை துணைத்தலைவர் ஜிவி.செல்வம் ரெட்கிராஸ் நிர்வாகிகள் நேரில் வாழ்த்தினர். முன்னதாக உதவி கலெக்டரின் தந்தை டி.வி.சேகர், தாயார் ஜெ.மேரி, மணமகளின் தந்தை டி.வாசுதேவன், தாயார் வி.கலைவாணி, வி.மதன், சீனிவாசஸ் ராமகிருஷ்ணன், எஸ்.சூர்யா பிரபா ஆகியோர் வரவேற்றனர்.  வேலூரில் நடைபெற்ற காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் தலைவர் மற்றும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் உதவி கலெக்டர் திருமிகு எஸ் கணேஷ் – வா.வினுதா அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மாண்புமிகு பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  அ.சண்முகசுந்தரம் வேலூர் விஐடி பல்கலைக் கழக துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் இந்தியன் ரெட்கிராஸ

வேலூரில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர். திரு. ஜி.வி. செல்வம் புதிய "Blue Dine" நிறுவனத்தை திறந்த போது....

Image
வேலூர் விருதம்பட்டில்  புத்தம் புதிய "Blue Dine"  Sea Food Restaurants...நிறுவனத்தை விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர். திரு. ஜி.வி. செல்வம் சார் அவர்கள் திறந்து வைத்த போது எடுத்த படம்.

ஒரு நிமிடத்தில் ஆயிரத்து நூறு மரக்கன்றுகள்...உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Image
  "My Di" என்கிற அமைப்பின் மூலம் உயிர் ஆயிரம் திட்டத்தின் கீழ் ஒரு நிமிடங்களில் 1152 மரக்கன்றுகள் வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்த 570 தன்னார்வலர்கள் இணைய வழியில் இணைந்து நடப்பட்டது. ஒரே நிமிடத்தில் நடப்பட்டதால் இது சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய மாவட்ட வன அதிகாரி திரு.பார்கதேவ் அவர்கள் துவக்கி வைத்தனர். ஈனோச்தாமஸ்  தலைமை  ஒருங்கிணைப்பாளர் உயிர் ஆயிரம்  இயக்குனர்  MYDI APP

வேலூர் ரெட்கிராஸ் சார்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து...

Image
  வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் ரெட்கிராஸ் சார்பாக மாவட்ட ஆட்சியாளர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.  இணை இயக்குனர் சுரேஷ்  பொது சுகாதாரம் அவர்கள் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அவர்கள் மாநகர நல அலுவலர் சித்திரசேனா அவர்கள்  உடன் இருந்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலர் குடியிருப்பில் உடற்பயிற்சி....

Image
இராணிப்பேட்டை மாவட்டத்தில்  (18.01.2021) காவலர்கள் தங்களின் கட்டுடலை பேணிப்பாதுகாத்து உடற்பயிற்சி செய்யும் விதத்தில் வாலாஜா காவல் நிலைய காவலர் குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்தை, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் அவர்கள் துவக்கி வைத்தார்.  இவ்விழாவில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி K.T. பூரணி, ஆற்காடு கிராமிய காவல் நிலைய வட்ட ஆய்வாளர் பாலு, காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் விழாவில் கலந்துக்கொண்டனர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் 9ம் மாத அமாவாசை அன்னதான விழா.

Image
ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 9ம் மாத அமாவாசை அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன், மாநில துணை தலைவர் ரஞ்ஜித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து 8 மாதமாக அன்னதானம் வழங்கி வந்த நிலையில் 9ம் மாத முதல் நிகழ்ச்சியாக  காலை சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது.  மரக்கன்றுகள், முககவசம் வழங்கபட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக டிரஸ்டின் கௌரவதலைவர் முத்துவேல், மாநில மகளிர் அணி தவைவி கீதாசுந்தர், மாநில துணை செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கஞ்சி,  மரக்கன்றுகள், முககவசம் ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தனர். அதை தொடர்ந்து ஷர்மி கண் கிளினிக் மருத்துவர் பரத் அவர்களின் தலைமையில் மருத்துவ குழுவினரால் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். அதன் தொடர்ச்சியாக சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் COVID-19 முதல் கட்ட தடுப்பூசி ...

Image
ராணிப்பேட்டை மாவட்டத்தில் COVID-19 முதல் கட்ட தடுப்பூசி போடும்  நிகழ்வினை  ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்  கிளாஸ்டன் புஷ்பராஜ் அவர்கள் நிமிலி வட்டம்  புன்னை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடக்கி வைத்தார்கள். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் COVID Shield Vaccine துவக்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் அதிகப்படியாக 100 நபர்கள் வீதம் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது 4300 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 750 வீதம் மூன்று இடங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது இதில் முதற்கட்டமாக அனைத்து சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட உள்ளது தனியார் மருத்துவமனை மற்றும் இதர தனியார் சுகாதார நிறுவனங்களுக்கும் தடுப்பூசி போட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் மொத்தம் 2200 சுகாதார பணியாளர்கள் மற்றும் தனியார் சுகாதார பணியாளர்கள் மருத்துவ பணியாளர் களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி போட உள்ளது இதை அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு சார்பில் COVIN செயலி மூலம் கண்காணிக்கப்படுகிறது மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

வேலூர் சரக "'டி.ஐ.ஜி, எஸ்பி.ஆகியோர் பொங்கல் விழாவில் பங்கேற்பு.

Image
வேலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் அலுவலகம் முன்பு வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் திருமதி.காமினி இ.கா.ப அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்,இ.கா.பா, ஆகியோர் தலைமையில் பொங்கள் விழா நடைபெற்றது. அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுடன் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் மதிவாணன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் விநாயகம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

வேலூரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ஆலோசனை கூட்டம்.

Image
வேலூர் உட்கோட்டம், சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு,வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் படி வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப., அவர்கள் தலைமையில் சத்துவாச்சாரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள செக்யூரிட்டிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

இராணிப்பேட்டை மாவட்ட காவல் எஸ்.பி.கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.

Image
இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்  அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன்,இ.கா.ப. அவர்கள் மற்றும் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்,காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள்  மற்றும் அனைத்து மதத்தை சார்ந்தவர்களுடனும் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை  வெகுசிறப்பாக கொண்டானர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைக்கு தலா 2500 ரூபாய் வழங்கிய பொது எடுத்த படம்...

Image
தமிழ் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையின்படி   தமிழக அரசு சரபாக குடும்ப அட்டைக்கு தலா  2500 ரூபாயும் கரும்பும் சக்கரையும் வழங்கிய வேலூர் மாவட்டம் அழுமேலுமங்காபுரம் ரேஷன் கடையில் குடுத்த பொது எடுத்த படம்.

வேலூரில் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற கவிஞர் ச. இலக்குமிபதி அவர்களுக்கு பாராட்டு விழா நடந்த போது எடுத்த படம்.

Image
தமிழக அரசு விருது பெற்ற வேலூர் கவிஞர் ச. இலக்குமிபதி  அய்யா அவர்களை வேலூர் நண்பன் சார்பாக  மேலும் பல விருதுகளை பெற்று வாழ வாழ்த்துகிறோம் .